5000GB டேட்டா நன்மையுடன் BSNL யின் இந்த திட்டம் இருந்தால் டேட்டா மற்றும் OTT பற்றி கவலை தேவை இல்லை

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு 200 மெகாபைட்ஸ் அதிவேக பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஆறு மாதங்களுக்கு இந்தத் திட்டத்தை டிஸ்கவுண்ட் விலையில் பெறலாம்.இந்தத் திட்டம், பாஸ்ட் இன்டர்நெட் , அன்லிமிடெட் கால்கள் மற்றும் OTT ஆப்களுக்கான அக்சஸ் வழங்குகிறது.

BSNL யின் புதிய திட்டம்.

பிஎஸ்என்எல் இந்தியா, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் குறித்த தகவலைத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் ஹேண்டில் மூலம் பகிர்ந்துள்ளது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் வழங்கும் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மாதக் கட்டணம் ₹1,199 ஆகும். அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக, பயனர்கள் மாதத்திற்கு ரூ,88 தள்ளுபடி பெறுவார்கள். இந்தச் சலுகை அடுத்த ஆறு மாதங்களுக்குச் வேலிடிட்டி வழங்குகிறது , அதாவது பயனர்கள் இந்தத் திட்டத்தை ஆறு மாதங்களுக்கு மாதம் ரூ,,1,111 என்ற விலையில் பெறுவார்கள்.

இந்தத் திட்டத்தின் நன்மைகளைப் பற்றிப் பேசுகையில், பயனர்கள் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியைப் வழங்குகிறது. கூடுதலாக, கஸ்டமர்கள் டூயல்-பேண்ட் வைஃபை வசதியையும் பெறுவார்கள். இந்தத் திட்டம் 200Mbps அதிவேக இணையப் பலனுடன் வருகிறது. பயனர்கள் மாதத்திற்கு 5000GB வரை அதிவேக இண்டர்நெட்டை வழங்குகிறது. இதற்குப் பிறகு, கஸ்டமர்கள் 4Mbps ஸ்பீடில் இன்டர்நெட் பெறலாம்.

இந்த BSNL பிராட்பேண்ட் திட்டத்துடன் 25க்கும் மேற்பட்ட OTT ஆப்களின் பலன்களும் கிடைக்கின்றன. கஸ்டமர்கள் ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி LIV, லயன்ஸ்கேட் ப்ளே, ஷீமரோ மீ மற்றும் ஹங்கமா OTT போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம். இந்த மாத தொடக்கத்தில், இந்நிறுவனம் ₹999 விலையில் 200Mbps திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் 5000GB டேட்டா மற்றும் OTT செயலிகளுக்கான அணுகலை வழங்குகிறது.

இதையும் படிங்க தினமும் 3GB டேட்டா வழங்கும் BSNL அசத்தலான திட்டம் 1 மாதமா 1 வருடமா நீங்கலே முடிவு பண்ணலாம்

மேலும், இந்நிறுவனம் தனது ஃப்ரீடம் ஆஃபர் திட்டத்தின் கீழ் தனது OTT திட்டங்களை தள்ளுபடி விலையில் வழங்குகிறது. ₹199 திட்டம் இப்போது ₹150-க்கு கிடைக்கிறது. இந்தத் திட்டத்தின் விலை ₹49 குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும். இந்த பொழுதுபோக்கு பேக், பயனர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனி LIV ஆகியவற்றுக்கான அணுகலை வழங்குகிறது. இந்நிறுவனம் இந்தச் சலுகையை தற்போதுள்ள மற்றும் புதிய பிராட்பேண்ட் பயனர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :