இனி குட்,பாய் சொல்லுங்க Gmailக்கு இனி Zoho Mail தான் முதல் ஈமெயில் id உருவாக்குவது எப்படி தெருஞ்சிகொங்க
இந்திய நிறுவனமான Zoho சில நாட்களாக மிகவும் பிரபலமாகி வருகிறது, இது வெளி நாட்டு நிருவனங்களை சரியாக போட்டியாக அமைந்துள்ளது அதாவது சமிபத்தில் WhatsApp போட்டியாக அரட்டை ஆப் அதிகபட்ச டவுன்லோட் பற்றது மேலும் இது பல மடங்கு செக்யுரிட்டி இருப்பதால் பாதுகப்பனது என கூறுகிறார்கள் அதே போல Google யின் Gmail போல Zoho Mail இருக்கிறது இதை பற்றி நம்முள் பல பேருக்கு தெரியவில்லை நீங்கள் Gmail இலிருந்து நம் இந்தியர் மற்றும் தமிழரின் Zoho Mail பயன்படுத்தி பார்க்கலாம் அது எப்படி பயன்படுத்துவது என்ற குழப்பம் இருந்தால் இதோ இந்த எளிய வழி முறையின் கீழ் உருவாக்கலாம் அது எப்படி பார்க்கலாம் வாங்க.
SurveyZoho யில் உங்களின் தனிப்பட்ட ஈமெயில் அக்கவுன்ட் உருவாக்குவது எப்படி?
- Zoho Mail அக்கவுண்ட் உருவாக்க இதன் வெப்சைட்டில் சென்று personal Email என்பதை தேர்டுக்கவும்.
- அதன் பிறகு யூசர் நேம் தேர்ந்தேடுக்கவேண்டும் உங்களுக்கு சரியான அக்கவுன்ட் உருவாக்கி கொடுக்கும் username@zohomail.com என்பதை போல உருவாக்கி கொடுக்கும் .
- அதன் பிறகு இப்பொழுது பாஸ்வர்ட் உருவாக்க வேண்டும் ஆனால் இதன் 8 இலக்கு இருக்க வேண்டு இதில் ஸ்பெஷல் கேரெக்டர், எழுத்து மற்றும் நம்பர் ஆகியவை சேர்ந்திருக்க வேண்டும்.
- அதன் பிறகு இப்பொழுது உங்களின் முதல் பெயர் மற்றும் கடைசி பெயர் எழுத வேண்டும்.
- அதன் பிறகு இப்பொழுது போன் நம்பர் போடவும் அதன் பிறகு உங்களின் மொபைல் நம்பருக்கு வெரிபிகேஷன் கோட் கிடைக்கும்.
- அதன் பிறகு சேவைகளின் கீழ் sign up for free என்பதை க்ளிக் செய்யவும்
- இப்பொழுது உங்களின் போனில் வந்த கொட போட்டு அக்கவுண்ட் வெரிபை செய்ய வேண்டும் அவ்வளவு தான் உங்களின் ஈமெயில் அக்கவுன்ட் உருவாக்கப்படும்

இதையும் படிங்க:ஓரம்போ WhatsApp இனி அரட்டை (Arattai) அதும் TV யில் மெசேஜ் பண்ணலாம் தமிழர் என்றால் தனி கெத்து தான்
பிஸ்னஸ் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி ?
- zoho.com/mail க்குச் சென்று பிஸ்னஸ் ஈமெயில் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- – பின்னர் நான் ஏற்கனவே வைத்திருக்கும் டொமைனுடன் பதிவுபெறு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு, உங்களிடம் ஏற்கனவே yourbusiness.com போன்ற ஒரு டொமைன் பெயர் இருக்க வேண்டும்
- – இப்போது உங்கள் நிறுவன விவரங்களை வழங்கவும். உங்கள் டொமைன் பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் பிற தேவையான தகவல்களை நிரப்பவும்.
- – ஜோஹோவின் வழிமுறைகளைப் பின்பற்றி, டொமைன் உங்களுடையது என்பதை நிரூபிக்க உங்கள் டொமைன் பதிவாளரிடம் DNS TXT பதிவுகளைச் சேர்க்கவும்.
- – உங்கள் டொமைனின் மெயில் எக்ஸ்சேஞ்சர் (MX) பதிவுகளை ஜோஹோவின் சேவையகங்களுக்கு சுட்டிக்காட்டவும்.
- – ஈமெயில் பாதுகாப்பிற்காக, உங்கள் டொமைனின் DNS யில் SPF மற்றும் DKIM க்கான TXT பதிவுகளைச் சேர்க்கவும்.
- – உங்கள் ‘சூப்பர் அட்மின்’ ஈமெயில் அமைத்து, இலவச திட்டத்தில் 5 பயனர்களைச் சேர்க்கவும்.
அதன் பிறகு multi-factor authentication கட்டாயம் செய்து கொள்வது நல்லது இதன் மூலம் உங்களின் ஈமெயில் அக்கவுண்ட் பாதுகாப்பாக இருக்கும் இதன் மூலம் உங்களின் அக்கவுண்டின் பாஸ்வர்ட் போடுவதன் மூலம் அக்கவுண்ட் திறந்து விடாது அதாவது இதன் மூலம் SMS அடிபடையிலான வெரிபிக்ஷன் மூலம் அக்கவுன்ட் திறக்கும் இதன் மூலம் ஸ்கேம் இருக்காது மேலும் ஈமெயில் திறக்க OneAuth, SMS அடிபடையிலான OTP, OTP அதேடிகேஷன் மற்றும் YubiKey போன்றவை இருக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile