Online Scam: சிம்பிள் டாஸ்க் என கூறி ரூ,11.5 லட்சம் அபேஸ் செய்த கும்பல் நடந்தது என்ன இந்த மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி
Online Scam::உங்களின் WhatsApp அல்லது SMS மூலம் ஆன்லைன் வேலை (Job) மற்றும் ஆன்லைன் டாஸ்க் போன்ற மெசேஜ் வந்தால் எச்சர்கையாக இருங்கள், தற்பொழுது ஒரு சம்பவம் ஒன்று வந்துள்ளது அதில் 11.5 லட்சம் ரூபாய் இழந்துள்ளது, எளிய முறையில் சம்பாரிக்க ஈஸியாக சம்பாரிக்கும் ஆசையை துண்டபட்டு நூதன முறையில் இன்டர்நெட்டில் பல மோசடி நடந்து வருகிறது. இப்பொழுது புதிய மோசடி Online Task Scam என்ற பெயரில் நடந்து வருகிறது மேலும் இந்த மோசடியின் கேள் நடக்கும் டிஜிட்டல் மோசடி தகவல் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyOnline Scam மோசடி நடந்த காரணம் என்ன ?
வெள்ளிக்கிழமை, புனேவில் செகண்ட் ஹேண்ட் கார் வியாபாரம் செய்யும் ஒருவருக்கு ஆன்லைன் வேலைகள் மூலம் விரைவாகவும் எளிதாகவும் பணம் சம்பாதிக்கும் ஆசை காட்டப்பட்டது. அதாவது அந்த நபரின் மொபைலுக்கு முதலில் ஒரு சிறிய ஆன்லைன் டாஸ்க் செய்வதன் மூலம் ரூ, 150 சம்பாரிக்கலாம் என ஆசை துண்டப்பட்டது மேலும் அதை செய்து முடித்தவுடன் அவர் பணமும் பெற்றார் அதன் பிறகு நம்பிக்கை வென்றவுடன், அவர் டெலிகிராமில் உள்ள ஒரு க்ரூப்பில் சேர்க்கப்பட்டார். இங்கு அவருக்கு கூடுதல் டாஸ்க் வழங்கப்பட்டன, மேலும் ஒவ்வொரு டாஸ்க் முடிந்தவுடன் பணமும் உடனடியாக அந்த நபருக்கு மாற்றப்பட்டது. இந்த ஆன்லைன் டாஸ்க் மோசடி இப்படித்தான் தொடங்கியது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மக்கள் தங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டில் ஆன்லைன் டாஸ்க் அல்லது வேலைகள் தொடர்பான மெசேஜ்களை பெறுவார்கள். அந்த மெசேஜுக்கு யாராவது பதிலளித்தால், கூகிள் மேப்பில் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளை ரேட்டிங் செய்வது போன்ற டாஸ்க் அவருக்கு வழங்கப்படுகின்றன. பயனரின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, இதற்குப் பிறகுதான் உண்மையான மோசடி தொடங்குகிறது.
இதையும் படிங்க:Air India Crash: Black box என்றால் என்ன? விபத்துக்கான காரணத்தை இது எப்படி கண்டு பிடிக்குமா
இருப்பினும் இதற்க்கு அடுத்தபடியாக நடக்கும் நெக்ஸ்ட் லெவல் டாஸ்க் இந்த மோசடிகரர்கள் கொண்டு செல்கிறார்கள் அதில் புனே தொழிலதிபரை டெலிகிராமில் உள்ள ஒரு க்ரூபில் சேர்த்த பிறகு, அவருக்கு “மெர்ச்சண்ட் டாஸ்க்” என்ற சிறப்புப் Task வழங்கப்பட்டது . பணம் சம்பாதிப்பதற்காக, முதலில் அந்த நபரிடம் பணம் டெபாசிட் செய்யச் சொல்லப்பட்டது. சிறிய டாஸ்க் மூலம் பணம் சம்பாதித்த அந்த நபர், மோசடி செய்பவர்களை நம்பி வெவ்வேறு பம்க் அக்கவுண்ட்களுக்கு பணம் அனுப்பத் தொடங்கினார். இதன் பிறகு, தொழிலதிபர் தான் சம்பாதித்த பணத்தை கேட்டபோது, மோசடி செய்பவர்கள் புதிய சாக்குப்போக்குகளைக் கூறி அவரிடம் அதிக பணம் கேட்கத் தொடங்கினர். மோசடி செய்பவர்களின் இந்தப் புதிய மோசடியில் சிக்கி, இரண்டு நாட்களில் ரூ.11.5 லட்சத்தை இழந்தார்.
Online Scam போலி மோசடியில் எப்படி தப்பிப்பது ?
- அச்சு அசலாக உண்மையாகவெ நம்பவைக்க கூடிய வகையில் இருக்கும் மேலும் வேகமாக சம்பாதிப்பது போன்ற மெசேஜில் உஷாரா இருங்கள்.
- உங்களுக்கு தெரியாத நபர்களுக்கு தனிப்பட்ட தகவலோ அல்லது பேங்க் தகவல் போன்றவற்றை எந்த ஒரு மெசேஜிங் ஆப்யிலும் ஷேர் செய்ய கூடாது.
- தெரியாத WhatsApp மற்றும் டெலிக்ராம் க்ரூப்பில் சேர்வதை தவிர்க்கவும்
- அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையை தூண்டும் நம்பிக்கை தரும் விதமாக இருக்கும் எந்த தெரியாத அக்கவுண்டில் பணம் அனுப்புவது ஆபத்தில் பொய் முடியும்.
- இது போன்ற மெசேஜ் ஏதேனும் வந்தால் உங்களின் நம்பகமான நன்ம்பர் அல்லது சைபர் போலிஷ் அதிகாரியிடம் முதலில் கூறுவது நல்லது.
- முதலில் ஒரு மெசேஜ் வந்தால் முதலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதாவது அதன் தொடர்பான பல கேள்விகள் கேட்பது நல்லது மற்றும் இது போன்ற சூழ்நிலையில் ஆன்லைன் மோசடியில் சிக்காமல் இருக்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile