Air cooler அதிக காற்றை பெற இதை செய்யுங்க AC தோற்று போகும் அளவுக்கு ஜில்லென காற்று விசும்

Air cooler அதிக காற்றை பெற இதை செய்யுங்க AC தோற்று போகும் அளவுக்கு ஜில்லென காற்று விசும்

சுட்டரிக்கும் வெயில் காலம் வந்துவிட்டது. இந்த வெப்பத்தைச் சமாளிக்க சிறந்த தீர்வு ஒரு நல்ல கூலிங் ஆகும். Air cooler சரியாகப் பயன்படுத்தினால், அது உங்கள் ரூமை AC விட அதிகமாக கூளிங்காக்கும், அதே நேரத்தில் மிகக் குறைந்த மின்சாரத்தையும் பயன்படுத்தும். மேலும் இந்த மே-ஜூன் மாதம் அதிகம் வெயிலின் வெப்பமாக இருக்கும் இந்த வெப்பத்தை தணிக்க ஒரு AC மட்டுமே மிக சிறந்த கூலிங் தரும் என நினைக்கலாம் ஆனால் அனவராலும் AC வாங்க முடியாது எனவே நாம் குறைந்த விலையில் Air cooler வாங்கி அதை AC போன்ற கூலிங் பெறலாம் அது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இந்த டிப்ஸ் போலோ செய்யுங்க அது என்னனு முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Air cooler ப்ளேட் மற்றும் பிள்ளை மாற்றவும்.

நீங்கள் இந்த சீசனில் கூலரை போடும்போது , முதலில் கூலரை சுத்தம் செய்வதோடு, புல் மாற்ற வேண்டும். உண்மையில், குளிர்காலத்தில், மூடி வைக்கப்படும் கூலரின் பட்டைகளில் நிறைய அழுக்குகள் சேரும். அத்தகைய சூழ்நிலையில், கூலர் பேட்களை மாற்றுவது ஒரு நல்ல வழி. இது தவிர, கூலிங் பம்ப் சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். உண்மையில், பல நேரங்களில் குப்பைகள் கூலிங் பம்பில் சிக்கிக் கொள்கின்றன, இது அதன் ஓட்டத்தைத் ப்ளாக் செய்கிறது . இதன் காரணமாக, கூலர் பேட்கள் சரியாக ஈரமாவதில்லை, ரூமும் சரியாக குளிர்ச்சியடையாது. புல் நனைவதற்கு எந்த தடையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

தேன் கூடு அமைக்கமுடியாத பில் வாங்கவும்.

இன்றைய கலாத்தில் சந்தையில் பல வகையான பில்கள் வர ஆரம்பித்துள்ளது இதில் ஒன்று சாதாரண பில் மற்றொர்ன்று தேன்கூடு பேக்டரியா உள்ளே செல்லாத அளவுக்கு இருக்க கூடிய ஸ்க்ரீன் ஆகும் இது புல்லை விட சிறந்தது இது அதிக நாட்கள் நீடித்துளைக்கும். இதை பற்றி கூலர் விற்பனயலரிடம் கேட்க்கும்போது சாதாரண புல்லை விட Honey pad இருந்தால் கூலர் சுமார் 2-3 டிகிரி வரையிலான அதிகபட்ச கூளிங் தருகிறது, அதாவது ஹோனிகம்ப் பேடில் தண்ணிர் உதறும்போது அதில் விழும் தண்ணிரில் நலிந்து அந்த ஸ்க்ரீன் முழுதும் நலிகிறது, அதுவே தண்ணீர் விழும் இடங்களில் புல் பெரும்பாலும் ஈரமாகிவிடும். ஹனிகொம்ப் ஸ்க்ரீன் சாதாரண புல்லை விட விலை அதிகம் அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது.

ஓபன் ஏரியாவில் கூலர் வைப்பது நல்லது

எப்பொழுதும் கூலர் காற்றோட்ட பக்கத்தில் அதாவது வென்டிலேசன் பக்கத்தில் வைக்க வேண்டும், அதாவது கூலரின் பின்பக்கம் ஜன்னல் அல்லது வெளிக்காற்று கிடைக்கும் வகையில் வைக்க வேண்டும் இதன் மூலம் வெளிப்புற காற்றை அதிக அளவில் இழுத்து கொடுக்கும் அதன் மூலம் உங்களுக்கு நல்ல கூலிங் தரும், அதாவது நீங்கள் உங்களின் கூலரை நீங்கள் வீட்டில் வெளிப்புற காற்று கிடைக்காத இடங்களில் வைக்கும்போது வெளி காற்று சரியாக கிடைக்காமல் ரூமில் இருக்கும் காற்றே சுழற்றி கொடுப்பதன் மூலம் சூடான காற்று மட்டுமே கிடைக்கும்.

கூலரின் தண்ணிரை எப்பொழுதும் கவனிக்கவும்.

கூலரை இயக்கும்போது, ​​அதன் நீர் மட்டத்தைக் கண்காணிக்கவும். பல நேரங்களில் குளிரூட்டியில் உள்ள தண்ணீர் கணிசமாகக் குறைகிறது. அத்தகைய சூழ்நிலையில், பம்ப் சேதமடையும் என்ற பயம் உள்ளது, ஆனால் நீங்கள் மீண்டும் கூலரில் தண்ணீரை நிரப்பும்போது, ​​கூலர் அதை குளிர்விக்க நிறைய நேரம் எடுக்கும். அத்தகைய சூழ்நிலையில், குளிரூட்டியில் நீர் மட்டம் அதிகமாகக் குறைவதற்கு முன்பு அதை நீங்கள் தொடர்ந்து பராமரித்தால், நீரின் வெப்பநிலையும் பராமரிக்கப்படும். இந்த குறிப்புகளைப் பின்பற்றினால், உங்கள் கூலர் ஏசியை விட அதிகமாக குளிர்விக்கும்.

இதையும் படிங்க ஏழையின் AC இந்த டாப் 5 Air cooler கூலர் உங்கள் வீட்டை ஆக்கிவிடும் குளு குளு கூளிங்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo