IRCTC பயனர்கள் நாளை முதல் இதை செய்யவில்லை என்றால் டிக்கெட் புக் செய்ய முடியாது
IRCTC இந்திய ரயில்வே அதன் பயணிகளுக்கு டிக்கெட் புக்கிங்கில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது இதை தவிர முன்குட்டியே வைட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் டிக்கெட்டுக்கு சார்ட் ப்ரூபரேஷன, தத்கால் புக்கிங் போன்ற பல அம்சம் கொண்டு வந்துள்ளது மேலும் டிக்கெட் புக்கிங் செய்ய கட்டாயம் IRCTC வெப்சைட் மூலம் லிங்க் செய்வதை அவசியமக்கியுள்ளது
Surveyஇந்திய ரயில்வே டிக்கெட் விலை உயர்வு
இந்திய ரயில்வே அதன் பயணிகளின் டிக்கெட் விலையை ஜூலை 1 முதல் அதிகரிக்க உள்ளது மெயில் மற்றும் எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் அதாவது நோன் AC என்று சொல்லகூடிய சிலிப்பர் விலை ஒவ்வொரு கிலோமீட்டருக்கு 1ரூபாய் கிலோமீட்டருக்கு அதிகரித்துள்ளது. அதுவே AC கிளாஸ் விலை ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ,2 உயர்த்தப்பட்டுள்ளது செகண்ட் கிளாஸ் பயனிக்குமோது 500 km வரை எந்த மாற்றமும் இல்லை அதற்க்கு மேல் பயணிக்கும்போது ஒவ்வரு கிலோமீட்டருக்கு அரை பைசா வசூலிக்கப்படும்.
AAdhaar லிங்க் செய்வதால் என்ன பயன்
IRCTC வெப்சைட்டிலிருந்து கிடைத்த தகவலின் படி, ஒருவருடைய IRCTC அக்கவுன்ட் ஆதார் உடன் லிங்க் செய்யப்பட்டிருந்தால் இது ஒரு மாதர்த்திகுள் 24 டிக்கெட் புக்கிங் செய்ய முடியும், ஆதார் கார்ட் லிங்க் செய்யாத IRCTC அக்கவுன்டிலிருந்து ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட் மட்டுமே புக் செய்ய முடியும். இதன் நன்மை என்ன்வென்ற ஒரு மாதத்திற்க்கு அதிக அளவில் டிக்கெட் புக் செய்ய முடியும் மேலும் சில நேரங்களில் நாம் குடும்பத்தினருடன் பயணிக்கிறோம் அப்பொழுது ஆதார் கார்ட் லிங்க் செய்யப்பட்டிருந்தால் அதிக டிக்கெட் புக் செய்யலாம் எனவே ஜூலை 1 முதல் மாற இருக்கும் இந்த புதிய விதி முன் நீங்கள் உங்களின் IRCTC அக்கவுன்ட் உடன் ஆதார் கார்ட் லிங்க் செய்யுங்க அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.
ஆதார் வெரிபிகேஷன் முக்கிய காரணம் என்ன?
தட்கல் டிக்கெட்டுகளை நொடிகளில் புக்கிங் செய்து பின்னர் அதிக விலைக்கு விற்கும் தரகர்கள் மற்றும் டிக்கெட் புக்கிங் சாப்ட்வேரில் முறைகேடுகளைத் தடுக்க IRCTC மற்றும் ரயில்வே வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
நாடு முழுவதும் தினமும் சுமார் 2.25 லட்சம் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும், அவற்றில் அதிக எண்ணிக்கையிலான தட்கல் டிக்கெட்டுகள் டிக்கெட் புக்கிங் முகவர்கள் மற்றும் தரகர்களால் சட்டவிரோத சாப்ட்வேர் மூலம் புக்கிங் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிறகு, இந்த டிக்கெட்டுகள் சாதாரண பயணிகளுக்கு 200% வரை லாபத்தில் விற்கப்படுகின்றன.
இப்போது இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க, ஜூலை 15 முதல் மற்றொரு கடுமையான விதி அமல்படுத்தப்படும், இதன் கீழ் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு OTP அடிப்படையிலான ஆதார் வேரிபிகேஷன் கட்டாயமாகும்.
இதையும் படிங்க:IRCTC ஜூலை 1 முதல் புதிய விதி Aadhaar card உடன் IRCTC அக்கவுண்ட் லிங்க் செய்யாவிட்டால் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாது
சார்ட் 8 மணி நேரம் முன்பே ரெடியாகிடும்
தட்கல் டிக்கெட் விதிகளுடன், புக்கிங் ஷேட்யுள் நேரத்தையும் ரயில்வே மாற்றியுள்ளது. இதுவரை, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டது, ஆனால் ஜூலை 1 முதல், இந்த நேரம் 8 மணி நேரமாக அதிகரிக்கப்படும். வைட்டிங் லிஸ்ட்டில் டிக்கெட்டுகள் உள்ள பயணிகள் கடைசி நேரம் வரை உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்க வேண்டும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ஆனால் இப்போது சாரட்டை முன்கூட்டியே தயாரிப்பது பயணிகளின் பயணத் ஷேட்யுளுக்கு உதவும். இந்த மாற்றம் படிப்படியாக செயல்படுத்தப்படும், இதனால் அமைப்பில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.
இதையும் படிங்க IRCTC யில் வருகிறது புதிய அம்சம் இனி வாயால் பேசி கேன்ஸில் செய்யலாம்
புதிய ரிசர்வேஷன் விதிமுறை.
ரயில்வேயின் பயணிகள் புக்கிங் முறையை (Passenger Reservation System(PRS) முழுமையாக நவீனமயமாக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் ஆய்வு செய்தார். இந்தப் பணி ரயில்வே தகவல் அமைப்புகள் மையம் ( Central Railway Information Systems(CRIS) மூலம் செய்யப்படுகிறது. ரயில்வே 2025 டிசம்பர் மாதத்திற்குள் நவீன ரிசர்வேஷன் முறையை அறிமுகப்படுத்த இலக்கு வைத்துள்ளது, இது முன்பதிவுகளை பாஸ்ட்டாக மாற்ற விரும்புகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile