IRCTC ஜூலை 1 முதல் புதிய விதி Aadhaar card உடன் IRCTC அக்கவுண்ட் லிங்க் செய்யாவிட்டால் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாது
IRCTC Ticket Booking: ரயில் டிக்கெட் புக்கிங் விதி ஜூலை 1 முதல் மாற இருக்கிறது இந்திய ரயில்வேயில் மாற்றம் கொண்டு வந்துள்ளது அதில் IRCTC ஆப் அல்லது வெப்சைட்டில் உங்களின் Aadhaar Card லிங்க் செய்ய வேண்டும், அதாவது நீங்கள் ஆதார் கார்டுடன் லிங்க் செய்யவில்லை என்றால் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாது இதனுடன் ஜூலை 15 முதல் ஆன்லைனில் தத்கால் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது ஆதார் நம்பர் உட்பட்ட OTP போடா வேண்டும் இந்த நடவடிக்கை எடுக்க காரணம் அனைவரும் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய கிடைக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம்
SurveyAadhaar Card லிங்க் செய்வதால் கிடைக்கும் பயன் என்ன ?
IRCTC வெப்சைட்டிலிருந்து கிடைத்த தகவலின் படி, ஒருவருடைய IRCTC அக்கவுன்ட் ஆதார் உடன் லிங்க் செய்யப்பட்டிருந்தால் இது ஒரு மாதர்த்திகுள் 24 டிக்கெட் புக்கிங் செய்ய முடியும், ஆதார் கார்ட் லிங்க் செய்யாத IRCTC அக்கவுன்டிலிருந்து ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட் மட்டுமே புக் செய்ய முடியும். இதன் நன்மை என்ன்வென்ற ஒரு மாதத்திற்க்கு அதிக அளவில் டிக்கெட் புக் செய்ய முடியும் மேலும் சில நேரங்களில் நாம் குடும்பத்தினருடன் பயணிக்கிறோம் அப்பொழுது ஆதார் கார்ட் லிங்க் செய்யப்பட்டிருந்தால் அதிக டிக்கெட் புக் செய்யலாம் எனவே ஜூலை 1 முதல் மாற இருக்கும் இந்த புதிய விதி முன் நீங்கள் உங்களின் IRCTC அக்கவுன்ட் உடன் ஆதார் கார்ட் லிங்க் செய்யுங்க அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க Free Aadhaar அப்டேட் இந்த தேதிக்குள் மாற்றி கொள்ளுங்க இல்லினா வருத்தப்படுவிங்க
IRCTC அக்கவுன்ட் உடன் Aadhaar Card லிங்க் செய்வது எப்படி?
- ஸ்டேப் 1: உங்கள் போன் அல்லது கம்ப்யுட்டரில் உள்ள வெப் பிரவுசரில் www.irctc.co.in ஐத் திறக்கவும்.
- ஸ்டேப் 2: IRCTC அக்கவுண்டில் லோகின்செய்யவும் .
- ஸ்டேப் 3: MY ACCOUNT டேபுக்கு சென்று, Authenticate User விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஸ்டேப் 4: உங்கள் சுயவிவர விவரங்கள் அதேண்டிகட் பயனர் பக்கத்தில் தோன்றும்.
- ஸ்டேப் 5: அங்கு உங்கள் ஆதார் நம்பரை போடவும், நீங்கள் ஆதார் வெர்ஜுவல் ஐடியையும் உள்ளிடலாம். விவரங்களைச் சரிபார்க்க OTP ஐக் கிளிக் செய்யவும்.
- ஸ்டேப் 6: ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் நம்பரில் ஒரு OTP வரும், அதை உள்ளிடவும்.
- ஸ்டேப் 7: செக் பாக்ஸ் படித்து, அதை டிக் செய்து, submit பட்டனை அழுத்தவும்.
- ஸ்டேப் 8: அங்கீகாரம் வெற்றிகரமாக இருந்தால், ஸ்க்ரீனில் ஒரு மெசேஜ் தோன்றும். அங்கீகாரம் தோல்வியடைந்தால், நீங்கள் மீண்டும் முயற்சிக்க வேண்டும்.
IRCTC யூசர் ID ஆதார் கார்ட் பெயரும் வித்தியாசமாக இருந்தால் பிரச்சனை ஆகலாம்.
இந்தச் செயல்பாட்டின் போது, சில பயனர்களின் பெயர் IRCTC டேட்டா மற்றும் ஆதார் அட்டைத் டேட்டக்களுடன் பொருந்தவில்லை என்றால் தொழில்நுட்ப சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஒரு பயனர் IRCTC வாலட்டுடன் இணைக்க விரும்பும்போதும் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற உங்கள் விவரங்கள் IRCTC அக்கவுன்ட் மற்றும் ஆதார் கார்டில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது அவ்வாறு இல்லையென்றால், முதலில் IRCTC அக்கவுண்டில் உங்கள் விவரங்களை மாற்றவும். விவரங்களை மாற்ற முடியாவிட்டால், நீங்கள் ஒரு புதிய IRCTC யூசர் ஐடியை உருவாக்கலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile