Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » Feature Story » General » IRCTC முதல் UPI வரை அக்டோபர் 1 மாறும் புது ரூல் ஒரே நேரத்தில் 3 மூன்று மாற்றங்கள்

IRCTC முதல் UPI வரை அக்டோபர் 1 மாறும் புது ரூல் ஒரே நேரத்தில் 3 மூன்று மாற்றங்கள்

By Sakunthala | Updated on 30-Sep-2025
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
IRCTC முதல் UPI வரை அக்டோபர் 1 மாறும் புது ரூல் ஒரே நேரத்தில் 3 மூன்று மாற்றங்கள்
Sakunthala Sakunthala
30-Sep-2025

எந்தவொரு ரயிலுக்கும் முன்பதிவு நேரம் திறந்த பிறகு முதல் 15 நிமிடங்களில் பொது புக்கிங் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, பயணிகள் ஆதார் வெரிபிகேஷன் IRCTC அக்கவுன்டகளை வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதிகளை ரயில்வே வாரியம் அக்டோபர் 1, 2025 முதல் அமல்படுத்த உள்ளது. தற்போது தட்கல் முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் இந்த விதி, மோசடியான புக்கிங்களைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு நியாயமான அக்சஸ் உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாமல் UPI சேவை, IRCTC மற்றும் பென்ஷன் போன்றவற்றில் ஆகிய மூன்று சேவைகளிலும் அக்டோபர் 1 முதல் மாற்றம் இருக்க போகிறது அவை முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பண்டிகை கால கூட்ட நெரிசல்

1 தீபாவளி, போன்ற முக்கிய பண்டிகைகள் மற்றும் திருமண சீசன்களின் போது, ​​ரயில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரிக்கும், குறிப்பாக பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு விண்டா திறக்கும் போது. இது தட்கல் முன்பதிவின் போது காணப்படும் நெரிசலைப் போலவே, பொது முன்பதிவு மூலம் டிக்கெட்டுகளைப் பெற முயற்சிக்கும் பயணிகளிடையே கடுமையான போட்டிக்கு வழிவகுக்கிறது. புதிய ஆதார் அடிப்படையிலான விதி புக்கிங் செயல்முறையை பயனுள்ளதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவுடன் ஆதார் அங்கீகாரம் இணைக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜூலை மாதம், தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய IRCTC அக்கவுண்ட்களுக்கு ஆதார் வெரிபிகேஷன் இந்திய ரயில்வே கட்டாயமாக்கியது. ஆதார் வெரிபிகேஷன் இல்லாமல், பயனர்கள் IRCTC வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.

பயணிகள் செய்ய வேண்டியவை

பயணிகள் சிரமத்தைத் தவிர்க்க அக்டோபர் 1 ஆம் தேதிக்கு முன்பே தங்கள் ஆதார் எண்களை ஐஆர்சிடிசி கணக்குகளுடன் இணைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பொது முன்பதிவு முன்பதிவு நேரம் தினமும் அதிகாலை 12:20 மணி முதல் இரவு 11:45 மணி வரை இயங்கும், பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு தொடங்கும். டிக்கெட் தேவை அதிகமாக இருக்கும்போது முன்பதிவு விண்டோ முக்கியமான முதல் 15 நிமிடங்களுக்கு மட்டுமே புதிய விதி பொருந்தும்

இதையும் படிங்க:IRCTC புது ரூல் அக்டோபர் 1 முதல் மாற்றம் ரயிலில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் தெருஞ்சிகொங்க

2 இதை தவிர இரண்டாவதாக Google Pay,Phonepe போன்ற UPI யில் மாற்றம் இருக்கிறது (Unified Payments Interface) அக்டோபர் 1 ஆம் தேதி முதல் புதிய மாற்றங்களால் அடுத்த மாதம் முதல், பயனர்கள் PhonePe, GPay அல்லது பிற பேமன்ட் ஆப்களைப் பயன்படுத்தி நண்பர்கள், உறவினர்கள் அல்லது வேறு யாரிடமிருந்தும் நேரடியாக பணம் கோர முடியாமல் போகலாம். UPI யின் “கலெக்ட் ரிக்வெஸ்ட்” அல்லது “புல் டிரான்ஸாக்ஷன்” அம்சம் முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. இது வேறொருவருக்கு பேமன்ட் ரெகுவஸ்ட் அனுப்பி பணம் கேட்க உங்களை அனுமதித்த அதே அம்சமாகும். ஆன்லைன் மோசடி மற்றும் ஃபிஷிங்கைத் தடுக்கவும், UPI பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாக்கவும் NPCI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

3 பென்ஷன் / ஓய்வூதிய கட்டணங்களில் மாற்றம்: ஓய்வூதிய தாரர்களுக்கான இந்த மாற்றம் – பெரும்பாலும் என்பிஎஸ் (NPS), யுபிஎஸ் (UPS), அடல் ஓய்வூதிய யோஜனா (Atal Pension Yojana) மற்றும் என்பிஎஸ் லைட்டில் (NPS Lite) சேர்ந்தவர்களுக்கான மாற்றம் ஆகும் (PFRDA), தேசிய ஓய்வூதிய முறையில் (NPS) ஒரு பெரிய சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அக்டோபர் 1, 2025 முதல் செயல்படுத்தப்படும். பல திட்ட கட்டமைப்பு என்று அழைக்கப்படும் இந்த சீர்திருத்தம், இப்போது அரசு சாரா துறை ஊழியர்கள், கார்ப்பரேட் வல்லுநர்கள் மற்றும் கிக் தொழிலாளர்கள் ஒரே PAN நம்பரை பயன்படுத்தி பல திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
ஆபர்னா இதுதான்யா அசத்தும் Jio அம்பானி வெறும் ரூ,55 யில் OTT மற்றும் 1,000 லைவ் டிவி சேனல் 30 நாட்கள் வேலிடிட்டி ஆபர்னா இதுதான்யா அசத்தும் Jio அம்பானி வெறும் ரூ,55 யில் OTT மற்றும் 1,000 லைவ் டிவி சேனல் 30 நாட்கள் வேலிடிட்டி
X Chat யில் X Number அம்சம் இனி மொபைல் நம்பர் இல்லாமல் கால்,சேட் செய்யலாம் இது எப்படி வேலை செய்யும் X Chat யில் X Number அம்சம் இனி மொபைல் நம்பர் இல்லாமல் கால்,சேட் செய்யலாம் இது எப்படி வேலை செய்யும்
மாடர்ன் லுக்கு ப்ளேட் தெரியாத இந்த ஃபேன் ஒன்னு போதும் லைட்,காற்று மற்றும் அழகு எதை பத்தி கவலை வேண்டாம் மாடர்ன் லுக்கு ப்ளேட் தெரியாத இந்த ஃபேன் ஒன்னு போதும் லைட்,காற்று மற்றும் அழகு எதை பத்தி கவலை வேண்டாம்
ஐபோனுக்கு இணையான SAMSUNG யின் இந்த ஹை மாடலில் ரூ,45,400 குறைப்பு ஐபோனுக்கு இணையான SAMSUNG யின் இந்த ஹை மாடலில் ரூ,45,400 குறைப்பு
1059ரூபாயில் itel ACE 4 Shine அறிமுகம் 9 மொழிகள் சப்போர்ட் செய்யும் 1059ரூபாயில் itel ACE 4 Shine அறிமுகம் 9 மொழிகள் சப்போர்ட் செய்யும்
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Google Pixel 11
  • Google Pixel 11 Pro
  • Google Pixel 11 Pro XL
  • Samsung Galaxy Z Flip 8
  • Samsung Galaxy Z Fold 8
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo