இனி e-passport சிப் வடிவில் கிடைக்கும் தகவல், இனி போலி டேட்டாவுக்கு இடமே இல்லை இது எப்படி வேலை செய்யும்
இந்திய அரசு சிப் அடிபடையிலான e-passport அறிமுகம் செய்துள்ளது, மேலும் இதன் மூலம் பல மடங்கு பாதுகாப்பு மற்றும் டூப்ளிகேட் டேட்டா போன்றவற்றை தவிர்க்கலாம். இந்த புதிய அம்சம் அட்வான்ஸ்ட் Radio Frequency Identification (RFID) சிப் கொண்டுள்ளது அதாவது இது ஒரு காகிதத்தில் உள்ள அனைத்து தகவலையும் அந்த சிப்பில் பெற முடியும் ஏப்ரல் 1, 2024 அன்று பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட இந்த இ-பாஸ்போர்ட்கள் தற்போது நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் வழங்கப்படுகின்றன. வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இது வரும் மாதங்களில் நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்படும்.
தற்போதைய நிலவரப்படி, நாக்பூர், புவனேஸ்வர், ஜம்மு, கோவா, சிம்லா, ராய்ப்பூர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், சென்னை, ஹைதராபாத், சூரத் மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகங்கள் இந்திய குடிமக்களுக்கு இ-பாஸ்போர்ட்களை வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய இ-பாஸ்போர்ட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
இந்தியன் e-Passport என்ன்றால் என்ன இது எப்படி வேலை செய்யும்?
e-Passport என்பது இது அண்டெனா மற்றும் ரேடியோ ப்ரிகுவன்ஷி ஐடெடிபிகேசன்(RFID) சிப் சப்போர்டுடன் வருகிறது உங்களின் இன்டிக்ரேடட் பாஸ்போர்ட் ஸ்பெசல் உள்ளமைக்கப்பட்ட பிசிக்கல பாஸ்போர்ட் புக்லெட் வடிவில் கிடைக்கும் மேலும் இதன் முன் பக்கத்தில் கோல்ட்-கலர் சிம்பல் மூலம் இது எந்த நாட்டுடயது என அடையாளம் காணலாம்
இந்த இ-பாஸ்போர்ட்களில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் முகப் போட்டோ, பிங்கர்ப்ரின்ட், பெயர், பிறந்த தேதி மற்றும் பாஸ்போர்ட் நம்பர் உள்ளிட்ட தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் டேட்டாக்கள் இருக்கும். இந்தத் டேட்டாக்கள் அனைத்தும் Basic Access Control (BAC), செ Passive Authentication (PA), மற்றும் Extended Access Control (EAC). போன்ற உலகளாவிய பாதுகாப்பு நெறிமுறைகளால் குறியாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும். இது டேட்டா சேதப்படுத்தப்படுவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், இம்மிக்ரேசன் சோதனைகளை விரைவுபடுத்தி மேனுவல் வெரிபிகேசன் தவிர்க்கும்.
குறிப்பாக, அமெரிக்கா, கனடா, பிரேசில், இத்தாலி, மெக்ஸிகோ, பிரான்ஸ் மற்றும் பல நாடுகள் உட்பட 120க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே இ-பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி வருகின்றன.
e-passports முக்கியமானதா ?
தற்போதைய நிலவரப்படி, செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் தற்போதைய பாஸ்போர்ட்டுகளை இ-பாஸ்போர்ட்டுகளுடன் மாற்ற வேண்டிய அவசியமில்லை. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனைத்து பாஸ்போர்ட்டுகளும் அவற்றின் எக்ஸ்பைர் தேதி வரை செல்லுபடியாகும்.
e-passport எப்படி வின்னபிப்பது?
- புதிய அல்லது அப்டேட் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுக்கு இ- போரம் சமர்ப்பிப்பு மூலம் விண்ணப்பிக்க, பயனர்கள் பாஸ்போர்ட் சேவா போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.
- பதிவுசெய்த பிறகு, பாஸ்போர்ட் சேவா போர்ட்டலில் லோகின் செய்யவும் .
- Apply for Fresh Passport or Reissue of Passport என்பதை க்ளிக் செய்யவும்.
- டவுன்லோட் செய்யப்பட்ட இ-பாஸ்போர்ட் நிரப்பி, வெரிபிகேசன் & Save பட்டனை கிளிக் செய்யவும். இது பின்னர் பயன்படுத்தப்படும் ஒரு XML பைலை உருவாக்கப் போகிறது.
- மின் படிவம் மூலம் XML பைல் பதிவேற்றவும். இந்த கட்டத்தில் PDF பாரம் அப்லோட் செய்ய வேண்டாம், ஏனெனில் XML பில் மட்டுமே கம்ப்யூட்டர் ஏற்றுக்கொள்ளப்படும்.
- ரெஜிஸ்டர் அல்லது மறு-வெளியீட்டு பாஸ்போர்ட்டிற்கான படிவத்தைப் பதிவேற்றிய பிறகு, பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் (PSK) சந்திப்பை முன்பதிவு செய்ய “பணம் செலுத்தி முன்பதிவு செய்யுங்கள்” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK) இருப்பிடத்தைக் கண்டுபிடித்து உங்கள் PSK ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட PSK-யில் முன்பதிவு செய்த பிறகு, கிரெடிட்/டெபிட் கார்டுகள் (மாஸ்டர் கார்டு & விசா), இன்டர்நெட் பேங்கிங் (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) & அசோசியேட் பேங்க் மட்டும்) அல்லது SBI பேங்க் சலான் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
- பாஸ்போர்ட் சேவைகளுக்கான கட்டணத்தை ஆன்லைன் கட்டண கால்குலேட்டர் மூலம் நீங்கள் கணக்கிடலாம்.
- விண்ணப்பக் குறிப்பு எண் (ARN) அல்லது சந்திப்பு எண்ணைக் கொண்ட விண்ணப்ப ரசீது எண்ணை பயனர்கள் பிரிண்ட் எடுக்கலாம்.
- பிறந்த தேதிச் சான்று, புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, வசிப்பிடச் சான்று மற்றும் தேசியச் சான்று போன்ற அசல் ஆவணங்களுடன் – புதிய சாளரத்தில் திறக்கும் வெளிப்புற வலைத்தளத்துடன் – சந்திப்பு முன்பதிவு செய்யப்பட்ட பாஸ்போர்ட் சேவா கேந்திராவை (PSK) பார்வையிடவும்.
இதையும் படிங்க:அடுத்த 2-3 நாட்களுக்கு ATM மூடப்படும் வைரல் ஆகும் மெசேஜ் பீதியில் மக்கள் இது உண்மையா முழுசா பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile