பேங்கிலிருந்து வரும் மெசேஜ் வரும் உண்மையானத போலியானதா என்பதை எப்படி கண்டு பிடிப்பது?

பேங்கிலிருந்து வரும் மெசேஜ் வரும் உண்மையானத போலியானதா என்பதை எப்படி கண்டு பிடிப்பது?

தொழில்நுட்பம் பல மடங்கு வளர்ந்து வருவது ஒரு விதத்தில் சந்தோசமாக இருந்தாலும் நாளுக்கு நாள் மோசடி தொல்லை பெரும் அளவு அதிகரித்து வருகிறது, பேங்கிங் SMS பொறுத்தவரை ஆச்சு அசலாக உண்மை போலவே இருக்கும், உதாரணமாக KYC அப்டேட் செய்யவில்லை என்றால் பேங்க் அக்கவுன்ட் மூடப்படும் மற்றும் அப்தேட்டுக்கு உடனடியாக லிங்க் க்ளிக் செய்ய கோரப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதை தவிர நமக்கு பயம்புருதும் வகையில் பல மெசேஜ் இருக்கும், மேலும் இது பார்க்க ஒரிஜினல் பேங்க் மெசேஜ் போல தெரிவதால் நம்முள் பலர் அதில் க்ளிக் செய்து மோசடியில் சிக்கி தவிக்கிறார்கள் எனவே பேங்கிங் மெசேஜ் சரியானதா, தவறானதா கண்டு பிடிப்பது எப்படி?

ஒரு லிங்கில் க்ளிக் செய்யும் முன் அது சரியானதா என்பதை சரி பார்க்க வேண்டும்

உங்களில் பேங்கிலிருந்து எதாவது மெசேஜ் வந்தாலோ மேலும் அதில் லிங்க் இணைக்கப்பட்டிருன்தலோ முதலில் க்ளிக் செய்யும் முன் தங்களின் அதிகாரபோர்வ மொபைல் பேங்கிங் ஆப் அல்லது வெப்சைட்டில் சென்று தகவல் சரியானதா என்பதை செக் செய்யவும் அதாவது அக்கவுன்ட் நம்பர், பெயர் மற்றும் தவறான ஸ்பெல் போன்ற பிழைகள் அல்லது URLs மற்றும் பேங்க் பெயரின் மாற்றம் போன்றவை இருந்தால் அது போலியான மெசேஜ் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும், இருப்பினும் மெசேஜ் சரியானதாக இருந்தால் லிங்க் சரியான வெப்சைட்க்கு கொண்டு செல்கிறதா என்பதை சரி பார்க்கவும்.

OTP, PIN, அல்லது CVV.எப்பொழுதும் கொடுக்க கூடாது.

மோசடி மெசேஜ்கள் உங்கள் நெட் பேங்கிங் பாஸ்வர்ட்,, க்ரீடிட் கார்ட் தகவல், OTP அல்லது UPI PIN ஆகியவற்றைக் கேட்கலாம். பேங்க்கள் SMS இணைப்புகள், போன கால்கள் அல்லது மெசேஜ் ஆப்கள் மூலம் உங்கள் OTP, ATM PIN, CVV அல்லது UPI PIN-ஐப் பகிருமாறு கேட்பதில்லை. இதுபோன்ற செய்திகளைப் பெறுவதில் எச்சரிக்கையாக இருங்கள்.

இதையும் படிங்க ரூ,300க்கும் குறைந்த விலையில் தினமும் 3GB டேட்டா அசத்தும் BSNL, அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை அதும் 1மாத வேலிடிட்டி

சந்தேகம் இருந்தால், உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள்.

செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு அழைக்கவோ அல்லது பதிலளிக்கவோ வேண்டாம். அதற்குப் பதிலாக, உங்கள் பற்று அட்டை அல்லது பாஸ்புக்கில் குறிப்பிடப்பட்டுள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணைப் பயன்படுத்தி வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் இணைப்பைத் திறந்திருந்தாலோ அல்லது தகவலை உள்ளிட்டிருந்தாலோ, உடனடியாக பேங்க்கு தெரிவித்து, உங்கள் பேங்க் அக்கவுன்ட் பாஸ்வர்ட் மாற்றவும். மோசடியான மெசேஜ்களை தவிர்க்க, அவசரப்பட வேண்டாம். மெசேஜ் , அனுப்புநர் மற்றும் லிங்கை சரிபார்த்து, பேங்க் தொடர்பான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பயன்படுத்தவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile