PAN card யில் இருக்கும் போட்டோ தவறா மற்றும் நீங்கள் உங்களின் அசிங்கமான போட்டோவை மாற்றலாம் எளிதாக

PAN card யில் இருக்கும் போட்டோ தவறா மற்றும் நீங்கள் உங்களின் அசிங்கமான போட்டோவை மாற்றலாம் எளிதாக

PAN card என்பது Aadhaar card போன்ற மிக முக்கியமான ஆவணமாகும் இது tax IDக்கு மட்டுமல்லாமல் எந்த ஒரு பேங்க் சேவைகளுக்கும் Pan card மிக அவசியமாகும் அதிலிருக்கும் போட்டோ அசிங்கமாக இருந்தாலோ அல்லது தவறான போட்டோ இருந்தாலோ அதை மாற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

PAN Card இருக்கும் போட்டோவை உண்மையவை மாற்றலாம் ?

ஆமாங்க NSDL மற்றும் UTIITSL யின் அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் உங்களின் தனிப்பட்ட போட்டோவை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யலாம் என வருமான வரி துறை தெரிவித்துள்ளது.

தேவையான ஆவணங்கள்

  • ID Proof: ஆதார்,வோட்டர் ID பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைசன்ஸ்
  • பிறப்பு சான்றிதழ்:ஆதார்,பிறப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட்
  • வீட்டு முகவரி ஆவணம்:ஆதார், Utility Bill, அல்லது பேங்க் ஸ்டேட்மென்ட்
  • சமிபத்திய பாஸ்போர்ட் (4.5 cm x 3.5 cm) கலர் போட்டோ

இதையும் படிங்க:EPFO யின் வருகிறது செம்ம மாஸ் அம்சம் இனி உங்க முகத்தை காட்டுனா தான் UAN அனைத்து தகவலும் பெற முடியும்

PAN Card போட்டோவை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

  • NSDL அல்லது UTIITSL அதிகாரபூர்வ வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும்
  • இதில் ஹோம் பக்கத்தில் PAN Correction/Update என்பதை செலக்ட் செய்யவும்.
  • இந்திய குடிமகனுக்கு 49A என்ற பாரம் செலக்ட் செய்யவும், அதில் போட்டோ Mismatch என்ற பாக்ஸ் டிக் செய்யவும்.
  • இதில் உங்களின் தகவலை நிரப்ப வேண்டும் அதில் PAN நம்பர், முழு பெயர் மற்றும் பிறந்த தேதி போன்றவை சரியாக நிரப்ப வேண்டும்.
  • இதனுடன் இதில் JPEG (4.5 cm x 3.5 cm) சைஸ் கொண்ட போட்டோ உடன் இதில் சைஸ் 4KB மற்றும் 300KB நடுவில் இருக்க வேண்டும்.
  • இதனுடன் இதில் சரியான ID ப்ரூப் Aadhaar அல்லது Voter ID போன்ற சான்றிதழ் அனுப்ப வேண்டும்.
  • Pay ஆன்லைன்
    • இந்திய முகவரிகளுக்கு ₹91 + ஜிஎஸ்டி
    • வெளிநாட்டு முகவரிகளுக்கு ₹862 + ஜிஎஸ்டி
  • நீங்கள் பணம் செலுத்திய பிறகு 15-டிஜிட் அக்நோலேஜ்மென்ட் வரும் அதை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துகொள்ளவும் மற்றும் சேமித்து வைக்க வேண்டும்.
  • ஆவணங்களை தபால் மூலம் அனுப்பவும் (தேவைப்பட்டால்) கேட்டால், ஒப்புதல் படிவத்தின் கையொப்பமிடப்பட்ட அச்சிடப்பட்ட நகல், உங்கள் புகைப்படம் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை NSDL அல்லது UTIITSL அலுவலகத்திற்கு அனுப்பவும்.
  • உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்கவும் போர்ட்டலில் ஸ்டேட்டஸ் அப்டேட்களை சரிபார்க்க உங்கள் அக்நோலேஜ்மென்ட் நம்பரை பயன்படுத்தவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo