Flipkart GOAT vs Amazon Prime Day Sale 2026
இந்தியாவில் மிக பெரிய இ-காமர்ஸ் நிறுவனம் என்றால் அது Amazon மற்றும் Flipkart தான்.இந்த இரு நிறுவனங்களுக்கு இடையில் கடுமையான போட்டி இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே, அதே போல தான் இங்கு இப்பொழுது ஒரு பக்கம் Amazon Prime Day Sale 2026 மற்றும் இதன் மறுபக்கம் Flipkart GOAT Sale 2026 இவர்கள் இருவருமே ஒரே நாளில் அதாவது ஜூலை 4 அன்று விற்பனை ஆரம்பிக்கிறார்கள், இதில் முதலில் amazon தான் Amazon prime ஆண்டு கொண்டாட்டத்தை அறிவித்தது அதன் பிறகு பிளிப்கார்டும் அதே தேதியில் அறிவித்துள்ளது இப்பொழுது இந்த இரு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன்,லேப்டாப், TV மற்றும் ஆடியோ போன்ற பல பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது இப்பொழுது இந்த நிறுவனங்களையும் ஒப்பிட்டு எது மிக சிறந்த ஆபர் வழங்குகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.
அமேசானின் Prime Day Sale வெறும் Prime Members-க்கு மட்டுமே இருக்கும், இந்த விற்பனையானது ஜூலை 4 லிருந்து ஜூலை 6 வரை இருக்கும். அதாவது உங்களிடம் ப்ரைம் மெம்பர்ஷிப் இல்லை என்றால் இதை பெற முடியாது, ஆனால் இதை சாதாரண கஸ்டமர்கள் இந்த நன்மையை பெற முடியாது, இதற்காக prime மெம்பர்ஷிப் பெற வேண்டும். நீங்கள் அதிக கட்டணம் செலுத்த விரும்பவில்லை என்றால், அமேசான் ஆண்டுக்கு ₹399 விலையில் ஷாப்பிங் செய்வதற்கான பிரத்யேக ‘பிரைம்’ (Prime) சப்ஸ்க்ரிப்ஷன் திட்டத்தையும் வழங்குகிறது. மறுபுறம், ஃபிளிப்கார்ட் ‘GOAT Sale’ அனைத்து கஸ்டமர்களுக்கு திறந்திருக்கும்; இருப்பினும், ஃபிளிப்கார்ட் பிளஸ் (Flipkart Plus) மெம்பர்களுக்கு 24 மணிநேரத்திற்கு முன்பாகவே இதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த இரண்டு நிறுவனங்களின் ஆபர் நன்மைகள் பற்றி பேசினால், பணம் செலுத்தும் சலுகைகளைப் பொறுத்தவரை, இரண்டு தளங்களும் வங்கித் தள்ளுபடிகள் மற்றும் வட்டியில்லா EMI போன்ற அம்சங்களை வழங்கும். பிரைம் டே-க்காக, அமேசான் நிறுவனம் SBI மற்றும் ஆக்சிஸ் வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் முழுப் பரிவர்த்தனைகள் அல்லது EMI பரிவர்த்தனைகளுக்கு, கூடுதலாக 10% தள்ளுபடியை (ஒரு வரம்பிற்கு உட்பட்டு) வழங்குகிறது. அமேசான் பே ICICI வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள், வரம்பற்ற 5% கேஷ்பேக்கையும் (முழுப் பரிவர்த்தனைகளுக்கு மட்டும்) பெறலாம்.
Flipkart GOAT Sale 2026-ன் போது, ICICI பேங்க், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் HSBC வங்கி கிரெடிட் கார்டுகள் 10% தள்ளுபடியை (ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டு) வழங்கும். Flipkart Axis பேங்க் அல்லது Flipkart SBI பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்தினால், கூடுதல் கேஷ்பேக் கிடைக்கும்.
டெலிவரி மற்றும் எக்ஸ்க்ளூசிவ் பலன்களைப் பொறுத்தவரை, அமேசான் பிரைம் மெம்பர்கள் பாஸ்ட் டெலிவரி, பிரைம் வீடியோ, பிரைம் மியூசிக் மற்றும் பிற பிரைம் சேவைகளைத் தொடர்ந்து பெறுவார்கள். ஃபிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்கள் முன்கூட்டிய அக்சஸ் மற்றும் சூப்பர்காயின்கள் போன்ற கூடுதல் பலன்களைப் பெறுவார்கள்.
இரண்டு நிறுவனங்களும் மாறி மாறி Prime Day Sale மூலம் 500 பொருட்களுக்கு மேல் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது, அதில் 15,000-க்கும் மேற்பட்ட புதிய டீல் கொண்டுவரப்பட்டுள்ளது, அதுவே இதன் மறுபக்கம் Flipkart GOAT Sale முழு கவனத்தையும் ஈர்க்கப்பட்டுள்ளது அதாவது இதன் மெயின் ஹைலைட் இது அனைவரும் பெறலாம் என்பதே இந்த விற்பனையின் கீழ் மிக பெரிய iPhone சீரிஸ் மற்றும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் போன்றவற்றில் மிக பெரிய டிஸ்கவுண்ட் பெறலாம்.
அமேசான் நிறுவனம் பல பிரீமியம் மற்றும் நடுத்தர விலை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகளை உறுதி செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா, ரூ. 15,000 தள்ளுபடி மற்றும் ஒன்பது மாத வட்டியில்லா இஎம்ஐ விருப்பத்துடன் ரூ. 84,999 முதல் கிடைக்கும். ஒன்பிளஸ் 13 ரூ. 49,999 முதல் தொடங்கும், அதே நேரத்தில் அந்நிறுவனம் ஐபோன் 17 சீரிஸிலும் சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்த விற்பனையில் சாம்சங் கேலக்ஸி M47 மற்றும் ஒன்பிளஸ் N6 போன்ற புதிய ஸ்மார்ட்போன் அறிமுகங்களும் அடங்கும். ஸ்மார்ட்போன்கள் மற்றும் துணைக்கருவிகளுக்கு 40% வரை தள்ளுபடி, ரூ. 66,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், உடனடி வங்கித் தள்ளுபடிகள் மற்றும் 12 மாதங்கள் வரை வட்டியில்லா EMI ஆகியவற்றை கஸ்டமர் எதிர்பார்க்கலாம் என்று அமேசான் கூறுகிறது. இந்நிறுவனம் முன்னிலைப்படுத்திய மற்ற சாதனங்களில் ஒன்பிளஸ் நோர்ட் 6, ரெட்மி A7 ப்ரோ 5G, iQOO 15R, ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ ஆகியவை அடங்கும். இதை தவிர ஸ்மார்ட்டிவிகளுக்கு 65% டிஸ்கவுண்ட் பெறலாம்.
இதன் மறு பக்கம் Flipkart GOAT Sale யில் iPhone 17 போனை 70,990ரூபாய்க்கும் மற்றும் iPhone 17 Pro மாடல் room,ரூ,1,12,900 மேலும் பல iphone மாடல்களை மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம் இவை அனைத்தும் ப்ரீமியம் செக்மென்ட் என்ற அடிபடையில் வரும்.
இதையும் படிங்க:வேற லெவல் அள்ளி இறக்கும் ஆபர் Flipkart Goat சேலில் Motorola யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,15,000 டிஸ்கவுண்ட்
இதை தவிர மிட் ரேன்ஜ் பிரிவில் Vivo T5 Pro, Motorola Edge 60 Pro, மற்றும் the OPPO K14.பட்ஜெட் பிரிவில் POCO, Redmi, Tecno, மற்றும் Realme போன்றவை அடங்கும்
இதை தவிர TV மற்றும் ஹோம் அப்லயன்சில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மற்றும் லேப்டாப் போன்றவற்றிலும் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம்.