1980களின்ட்ரென்ட் ஆகும் AI போட்டோக்கள ChatGPT யில் ரெட்ரோ prompt உருவாக்கி அசத்துங்க

தற்பொழுது மக்கள் மத்தியில் 80களில் இருக்கும் ஸ்டைல் ட்ரென்ட் ஆகி வருகிறது. நம் வாழ்வில் ஒரு முறையாவது, பழைய காலத்து ஃபேஷன் , ம்யூசிக் , ஸ்டைல் அலங்காரங்கள், போட்டோக்கள்கள் மற்றும் அதனுடன் இருந்த எளிமையான வசீகரத்தை மீண்டும் கொண்டுவர முடிந்தால் நன்றாக இருக்குமே என்று நம்மில் பலர் ஏங்கியிருப்போம். காலத்தைப் பின்னோக்கிச் செல்ல வைக்க முடியாது, ஆனால் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் மூலம் , கடந்த காலத்தின் சில பகுதிகளை வியக்கத்தக்க வகையில் நிஜமாகவே இருப்பது போன்ற உணர்வைத் தரும் விதத்தில் நம்மால் மீண்டும் உருவாக்க முடியும்.

அதைச் செய்வதற்கான சமீபத்திய வழிகளில் ஒன்று, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) பயன்படுத்தி உங்கள் போட்டோக்களை 1980-களின் பாணியிலான படங்களாக மாற்றுவதாகும் இதை உருவாக்க ChatGPT மூலம் டாப் Prompt பற்றி பார்க்கலாம் வாங்க

1980s South Indian Street

1980களின் தென்னிந்திய நகரத் தெருக்காட்சி, பழமையான ஓட்டு வீடுகள், சிறிய பெட்டிக்கடை, பழைய பஜாஜ் ஸ்கூட்டர், அம்பாசிடர் கார், சைக்கிள்கள், தமிழ் பெயர்ப் பலகைகள், வண்ணமயமான சினிமா போஸ்டர்கள், 1980களின் காலகட்டத்திற்கு ஏற்ற ஆடைகள் அணிந்த மக்கள், மல்லிகைப் பூக்கள் சூடிய பாரம்பரிய சிகை அலங்காரத்துடன் பருத்தி சேலை அணிந்த பெண்கள், வெள்ளை சட்டை மற்றும் வேட்டி அணிந்த ஆண்கள், இதமான சூரிய ஒளி, பழைய அனலாக் திரைப்பட போட்டோ தோற்றம், மென்மையான ஃபிலிம் கிரெயின், சற்று மங்கலான பழைய நிறங்கள், ஏக்கத்தை ஏற்படுத்தும் 1980களின் சூழல், இயல்பான முகபாவனைகள், சினிமாத்தனமான காட்சியமைப்பு, மிகத் தத்ரூபமான புகைப்படம், 4K.

1980களின் தமிழ் குடும்பம் (1980s Tamil Family)

1980களில் ஒரு பாரம்பரிய தென்னிந்திய வீட்டிற்குள் ஒன்றாக அமர்ந்திருக்கும் மகிழ்ச்சியான நடுத்தர வர்க்க தமிழ் குடும்பம், மல்லிகைப் பூக்களுடன் வண்ணமயமான பருத்தி சேலை அணிந்த தாய், வெள்ளை சட்டை மற்றும் வேட்டி அணிந்த தந்தை, 1980களின் காலகட்டத்திற்கு ஏற்ற ஆடைகளில் குழந்தைகள், மரத்தாலான பழைய மரச்சாமான்கள், பழைய ரேடியோ, CRT தொலைக்காட்சி, சுவரில் பழைய காலண்டர், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள், மாலை நேர வெதுவெதுப்பான ஒளி, இயற்கையான முகபாவனைகள், உண்மையான சரும நிறம், பழைய Kodak திரைப்பட புகைப்படத் தோற்றம், மென்மையான ஃபிலிம் கிரெயின், இயல்பான 1980களின் நினைவலைகளை ஏற்படுத்தும் சூழல், மிகத் தத்ரூபமான புகைப்படம், 4K.

1980களின் தமிழ் கிராமம்

Retro image 19080

1980களின் அழகான கிராமப்புற தமிழ்நாடு, பாரம்பரிய ஓட்டு வீடுகள், தென்னை மரங்கள், வாழை மரங்கள், மாட்டு வண்டி, சைக்கிள்கள், பசுமையான நெல்வயல்கள், மல்லிகைப் பூக்களுடன் பாரம்பரிய பருத்தி சேலை அணிந்த பெண்கள், வெள்ளை வேட்டி மற்றும் சட்டை அணிந்த ஆண்கள், தெருவில் விளையாடும் குழந்தைகள், தங்க நிறமான காலை சூரிய ஒளி, உண்மையான 1980களின் கிராமப்புற சூழல், பழைய அனலாக் கேமரா தோற்றம், மென்மையான ஃபிலிம் கிரெயின், சற்று மங்கலான விண்டேஜ் நிறங்கள், சினிமாத்தனமான புகைப்படக்கலை, மிகத் தத்ரூபமான காட்சி, 4K.

1980களின் ரெட்ரோ தமிழ் ஜோடி

Retro image 19080 (

1980களின் ஸ்டைலில் பழைய ஸ்கூட்டருக்கு அருகில் நிற்கும் அழகான தென்னிந்திய தமிழ் ஜோடி, ஆண் உள்ளே மடித்து அணிந்த டிசைன் சட்டை, உயரமான இடுப்புப் பகுதியுடன் கூடிய பேன்ட் மற்றும் ஏவியேட்டர் சன்கிளாஸ் அணிந்திருப்பது, பெண் அழகான பாரம்பரிய சேலை அணிந்திருப்பது, நீண்ட பின்னலில் மல்லிகைப் பூக்கள், பாரம்பரிய தங்க நகைகள், பின்னணியில் பழைய தமிழ் தெரு, மாலை நேர தங்க நிற சூரிய ஒளி, உண்மையான 1980களின் பேஷன், விண்டேஜ் திரைப்பட புகைப்படத் தோற்றம், மென்மையான ஃபிலிம் கிரெயின், இயற்கையான சரும நிறம், இயல்பான முகபாவனை, சினிமாத்தனமான காட்சி, மிகத் தத்ரூபமான புகைப்படம், 4K.

1980களின் தென்னிந்திய திருமணம்

1980களின் பாரம்பரிய தென்னிந்திய திருமணக் காட்சி, அழகிய காஞ்சிபுரம் பட்டுச் சேலை அணிந்த தமிழ் மணமகள், பாரம்பரிய தங்க நகைகள், தலையில் மல்லிகைப் பூக்கள் மற்றும் பழமையான திருமண சிகை அலங்காரம், வெள்ளை வேட்டி மற்றும் பட்டுச் சட்டை அணிந்த மணமகன், 1980களின் காலகட்டத்திற்கு ஏற்ற சேலை மற்றும் வேட்டி அணிந்த உறவினர்கள், வாழை இலைகள் மற்றும் பாரம்பரிய திருமண அலங்காரங்கள், கோயில் பாணியிலான இதமான வெப்பமான விளக்கொளி, அக்காலகட்டத்திற்கு உண்மையான பொருட்கள் மற்றும் அலங்கார விவரங்கள், அனலாக் திரைப்பட ஃபிலிம் கிரெயின், சற்று மங்கலான பழைய நிறங்கள், ஏக்கத்தை ஏற்படுத்தும் விண்டேஜ் புகைப்படத் தோற்றம், மிகத் தத்ரூபமான புகைப்படம், 4K.

1980களின் தமிழ் சினிமா பாணி

1980களின் தென்னிந்திய தமிழ் சினிமா பாணியை பிரதிபலிக்கும் ரெட்ரோ போர்ட்ரெய்ட், பிரகாசமான பட்டுச் சேலை அணிந்த அழகான தமிழ் நடிகை, பாரம்பரிய தங்க நகைகள், பெரிய ஜிமிக்கி காதணிகள், மல்லிகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட பின்னல், 1980களின் பாரம்பரிய மேக்கப் மற்றும் சிகை அலங்காரம், வண்ணமயமான ஸ்டூடியோ பின்னணி, நாடகத்தன்மை கொண்ட சினிமா விளக்கொளி, பழைய தென்னிந்திய திரைப்படங்களின் உண்மையான விண்டேஜ் தோற்றம், அனலாக் 35mm ஃபிலிம் கிரெயின், அழகான ஏக்கத்தை ஏற்படுத்தும் பழைய நிறங்கள், இயற்கையான சருமத் தோற்றம், மிகத் தத்ரூபமான காட்சி, 4K.

80s South Indian Retro Girl – தமிழ் Prompt

“1980களின் தென்னிந்திய இளம் பெண்ணாக ஒரு அழகான பெண்ணின் இயல்பான புகைப்படம். நீளமான, அடர்த்தியான சுருள்/அலை அலையான கருமையான கூந்தல், பெரிய இயற்கையான கண்கள், மென்மையான புன்னகை, இயற்கையான சரும நிறம். தலைமுடியில் மல்லிகை அல்லது ரோஜா பூக்கள் அலங்காரம். பெரிய தங்க ஜிமிக்கி, நீளமான முத்து மாலை, பாரம்பரிய தங்க வளையல்கள் மற்றும் சிறிய நெற்றிப்பொட்டு அணிந்திருப்பாள்.

இதையும் படிங்க ஆப்பிளின் முதல் iPhone Duo போல்டபில் போன் அறிமுகம் செய்தது என்ன சிறப்பு இருக்கு பாருங்க

1980களின் தென்னிந்திய ஃபேஷன்

பஃப் ஸ்லீவ்ஸ் கொண்ட பிரகாசமான நிற ரவிக்கை, அழகான மலர் பிரிண்ட் கொண்ட காட்டன்/சில்க் சேலை, பாரம்பரியமாக அணிந்த சேலை. மற்றொரு தோற்றத்தில் high-waist vintage jeans மற்றும் colorful printed shirt அணிந்த 80s fashion look.

பின்னணியில் பழைய தென்னிந்திய வீடு, பழைய Ambassador கார், சைக்கிள்கள், பழைய கடை/சினிமா போஸ்டர்கள், மரங்கள் மற்றும் தெரு காட்சி. 1980களின் இந்திய நகரம் அல்லது சிறிய நகரத்தின் உணர்வு தெளிவாக இருக்க வேண்டும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :