இந்திய ரயில்வே அதிரடி எச்சரிக்கை நள்ளிரவில் மொபைலை சார்ஜ் செய்யகூடாது எந்த நேரம் பாருங்க

HIGHLIGHTS

நள்ளிரவு நேரத்தில் லேப்டாப், பவர்பேங்க் மற்றும் மொபைலை சார்ஜ் செய்யகூடாது என சரிக்கை

அதிகபடியாக பெரும் தீ விபத்து ஏற்ப்படலாம் என எச்சரிக்கை கொடுத்துள்ளது

தீ பிடிக்கும் புகார் அதிகரிப்பின் காரணமாக அரசு இந்த அதிரடி உத்தரவு கொடுத்துள்ளது

இந்திய ரயில்வே நள்ளிரவு நேரத்தில் லேப்டாப், பவர்பேங்க் மற்றும் மொபைலை சார்ஜ் செய்யகூடாது இதில் அதிகபடியாக பெரும் தீ விபத்து ஏற்ப்படலாம் என எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதை தவிர உங்களின் டிவைஸ் தீ பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது மேலும் இரவு நேரங்களில் சுவிட்ச் அணைத்து வைப்பது நல்லது எனவும் கூறியுள்ளது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்க காரணம் தொடர்ந்து தீ பிடிக்கும் புகார் அதிகரிப்பின் காரணமாக அரசு இந்த அதிரடி உத்தரவு கொடுத்துள்ளது. மேலும் முழு விவரம் பார்க்கலாம் வாங்க

மொபைல் போன் சார்ஜிங் மூலம் தீ பிடிக்கலாம் என எச்சரிக்கை.

இந்திய ரயில்வே தொடர்ந்து பல தீ விபத்து நடைபெற்று வருவதால் நள்ளிரவு இரவு 11 pm முதல் 5am காலை வரை லேப்டாப், பவர்பேன்க் மற்றும் மொபைலை சார்ஜ் செய்யகூடாது என்று அதிரடி உத்தரவு கொடுத்துள்ளது. இதன் முக்கிய காரணம் நள்ளிரவு நேரத்தில் பயணிகள் நன்கு உறங்கி கொண்டிருக்கும்போது தீ பிடிக்க அதிகப்படி வாய்ப்புள்ளதாகவும் மற்றும் பயன்களின் பாதுகாப்பு கருதி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. சமீபகாலமாக ரயில்களில் செல்போன்கள் அல்லது பவர் பேங்க்கள் தீப்பிடித்த பல சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த நடவடிக்கை முக்கிய காரணம் சமிபத்தில் அக்டோபர் 24 அன்று தென்கிழக்கு ரயில்வேயின் (SER) கீழ் இயங்கும் மும்பை-ஹவுரா மெயிலின் AC கோட்சில், இரவு முழுவதும் சார்ஜ் செய்துகொண்டிருந்தபோது ஒரு பவர் பேங்க் வெடித்தது. இதனை தொடர்ந்து போன் மற்றும் பவர் பேங்குகள் தீப்பிடித்த பல சம்பவங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்காக, ரயில்வே இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க இனி யூடுயூப் மட்டுமில்ல Instagram யிலும் வீடியோ கிரியேட்டர் பணம் சம்பாரிக்கலாம் ரெடியாகும் புதிய அம்சம்

ரயிலில் பயணிக்கும் முன்பே சார்ஜ் செய்து இருக்க வேண்டும்

ரயிலில் பயணிக்கும் பயணிகள் ரயில் மொபைல் லேப்டாப் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் குறிப்பாக இரவு நேரங்களில் சார்ஜ் செய்ய கூடாது மற்றும் பயணிகள் ரயிலில் பயணிக்கும் முன் பவர் பேங்க் மற்றும் மொபைல் போன் முழுவதும் சார்ஜ் செய்து கொள்வது அவசியமாகும். மேலும் அப்படி எதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் சார்ஜ் செய்யாமல் போய் இருந்தால், இரவு 11 மணிக்கு முன்பே சார்ஜ் செய்ய வேண்டும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை எந்த சார்ஜிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :