நீங்கள் Instagram யில் வீடியோ பார்ப்பதற்க்கு அல்லது கன்டென்ட் உருவாக்குவோர்களுக்கு ஒரு புதிய அப்டேட் நம் முன்னே கொண்டு வந்துள்ளது. இன்ஸ்டாக்ராமில் நீண்ட வீடியோவில் ஒரு புதிய அம்சத்தை டெஸ்ட்டிங் செய்து வருகிறது. இதன் உதவியால் கிரியேட்டர் 90 நிமிட வரையிலான வீடியோ அப்லோட் செய்யலாம். இதில் சிறப்பு என்னவென்றால் பெரிய வீடியோ கிரியேட்டர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும்.
இன்ஸ்டாக்ராம் தலைவர் எடம் மொசரி தனது கிரியேட்டர்களுக்கு ப்ரெண்ட்ஸ்(Brands) மற்றும் அதன் போலோவர்களின் படி பணம் சம்பாரிக்கலாம் என கூறினார். இருப்பினும், இந்த புதிய அம்சத்துடன் சேர்த்து நேரடி வருவாய் ஈட்டுவதற்கான எந்தவொரு புதிய அமைப்பும் அறிவிக்கப்படவில்லை. தற்பொழுது இந்த அம்சம் அமெரிக்காவில் சில கிரியேட்டர்களிடத்தில் டெஸ்ட்டிங் ஆரம்பித்துள்ளது.
இன்ஸ்டாகிராமின் புதிய வீடியோ போர்மட் ‘ஃபீச்சர்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. பாட்காஸ்ட்கள், இண்டர்வியூவ்கள், வ்லாக்குகள் மற்றும் நகைச்சுவை போன்ற நீண்ட வீடியோக்களைப் ஷேரிங் இது கிரியேட்டர்களை அனுமதிக்கிறது. தற்போது, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வழியாகக் ஷார்ட் வீடியோக்களைப் ஷேர் செய்ய முடியும். எனவே, ஒரு தலைப்பில் நீண்ட வீடியோக்களை (பாட்காஸ்ட்கள் மற்றும் லைவ்கள் போன்றவை) உருவாக்குபவர்களுக்கு இந்தப் புதிய அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.
உதாரணமாக, நீங்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு பாட்காஸ்டின் சிறிய வீடியோவைப் பார்த்து, அது உங்களுக்குப் பிடித்திருந்தால், வேறொரு தளத்திற்குச் செல்லாமலேயே அதன் முழு அத்தியாயத்தையும் பார்க்கலாம். மேலும், இன்ஸ்டாகிராம் இந்த நீண்ட வீடியோக்களை ‘எக்ஸ்ப்ளோர்’ பகுதியிலும், செயலியின் மற்ற பகுதிகளிலும் இடம்பெறச் செய்யும்.
இன்ஸ்டாக்ராமில் வீடியோ கிரியேட்டர்களுக்கு இதில் பணம் சம்பாதிக்க மிக சிறந்த வழியாக மற்றும் வாய்ப்பாகவும் அமையும். மேலும் கிரியேட்டர்கள் பொருளாதாரம் சார்ந்த ‘கோலின் அண்ட் சமீர்’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி, கிரியேட்டர்கள் பிராண்டுகளுடன் கூட்டு சேர்வதன் மூலமும், தங்கள் ரசிகர்களிடமிருந்து நேரடியாகப் பணம் பெறுவதன் மூலமும் சம்பாதிக்கலாம் என்று விளக்கினார்.
மோசேரியின் கூற்றுப்படி, அந்நிறுவனம் வீடியோ செயல்திறனின் அடிப்படையில் பணம் வழங்கும் ஒரு சிறிய திட்டத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தத் திட்டத்தை நடத்துவதற்கான செலவு, ஈட்டப்படும் வருவாயை விட அதிகமாக உள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை ஒரு பெரிய அளவில் விரிவுபடுத்துவது தற்போது நிறுவனத்திற்கு லாபகரமானதாக இல்லை.
இத்தகைய சூழ்நிலையில், நீண்ட வீடியோ அம்சம் படைப்பாளிகளுக்குத் தங்கள் உள்ளடக்கத்தை விரிவுபடுத்தவும், பரந்த பார்வையாளர்களைச் சென்றடையவும் ஒரு வாய்ப்பை வழங்கக்கூடும். இருப்பினும், இந்தப் புதிய அம்சத்துடன் தொடர்புடைய வீடியோ பார்வைகளின் அடிப்படையில் நேரடி வருவாய் ஈட்டும் அல்லது பணம் செலுத்தும் வழிமுறைகள் எதையும் இன்ஸ்டாகிராம் அறிவிக்கவில்லை.
யூடியூபில் நீண்ட வீடியோக்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் இண்டர்வியூவ் ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ளன. அதே சமயம், இன்ஸ்டாகிராம் ஷோர்ட் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களுக்காக அதிகம் அறியப்படுகிறது. இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்களைத் தனது தளத்தில் அதிக நேரம் வைத்திருக்க முடியும் என அந்நிறுவனம் நம்புகிறது.
பயனர்கள் மொபைலில் மட்டுமல்லாமல், டிவியிலும் வீடியோக்களைப் பார்க்கும் அனுபவத்தை அனுபவிக்கும் வகையில், நீண்ட வீடியோக்களைப் பெரிய தொலைக்காட்சித் ஸ்க்ரீனில் ஒருங்கிணைக்கவும் இன்ஸ்டாகிராம் விரும்புகிறது.
இதையும் படிங்க:WhatsApp பெரிய க்ரூப்பை மேனேஜ் செய்ய புதிய Organizations அம்சத்தை கொண்டு வருகிறது இதன் பயன் என்ன
இருப்பினும், 90 நிமிட வீடியோக்களைப் அப்லோட் அனுமதிப்பதால் மட்டும் இன்ஸ்டாகிராம் யூடியூபுடன் நேரடியாகப் போட்டியிடாது. கிரியேட்டர்களிகள் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு அமைப்பு யூடியூபில் ஏற்கனவே உள்ளது. இந்தப் புதிய அம்சம் எவ்வாறு வருவாயை உருவாக்கும் என்பது குறித்த முழு விவரங்களையும் இன்ஸ்டாகிராம் இன்னும் வழங்கவில்லை.