Infinix GT 50 Pro gaming smartphone launched in India Price sale offer specs
Infinix இன்று இந்தியாவில் அதன் புதிய Infinix GT 50 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் கேமிங் பிரியர்களை கவரும் வகையில் இருக்கும் Dimensity 8400 Ultimate ப்ரோசெசர் மற்றும் இந்த போனின் பின்புறத்தில் 50MP + 8MP கேமரா போன்றவை இதனுடன் இந்த போனில் Dolby Atmos, AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது மேலும் இந்த போனின் விலை ரூ,70 ஆயிரம் பட்ஜெட்டில் இதன் அம்சம் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
Infinix GT 50 Pro போனின் 12 GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ,69,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் ஒரே ஒரு சிங்கிள் வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனை இரண்டு கலரில் வாங்கலாம் அதில் Black Abyss மற்றும் Red Blaze ஆகும். மேலும் இந்த போனின் விற்பனை அக்டோபர் 30 Flipkart மற்றும் அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் வாங்கலாம். மேலும் இந்த போனை HDFC பேங்க் ஆபரின் கீழ் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் ரூ,5000 வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,64,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் பெறலாம்.
Infinix GT 50 Pro அம்சங்கள் பற்றி பேசினால்,இதில் 6.78-inch LTPS AMOLED டிஸ்ப்ளே உடன் 1.5K (1,208×2,644)பிக்ஸல் ரெசளுசன் மற்றும் 144Hz ரெப்ரஸ் ரேட்டுடன் இதில் 4,500 நித்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது, இதனுடன் இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 2 மற்றும் TÜV லோ ப்ளூ லைட் சர்டிபிகேஷன் வழங்குகிறது.
இந்த போனில் பவர்புல் பர்போமன்சுக்கு MediaTek Dimensity 8400 சிப்செட் உடன் Mali-G720 MC7 GPU உடன் வழங்குகிறது. இதனுடன் இதில் 12GB யின் LPDDR5X RAM மற்றும் 512GB of UFS 4.1 வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் Android 16-அடிபடையின் கீழ் XOS 16 யில் வேலை செய்கிறது இதனுடன் இந்த போனில் சூடாகம இருக்க HydroFlow Liquid Cooling வழங்கப்படுகிறது மேலும் போனில் பவர்புல் சவுண்டுக்கு Dolby ATMOS சப்போர்ட் வழங்குகிறது.
இதை தவிர Infinix GT 50 Pro பிரசர் சென்சிடிவ் ஷோல்டர் பட்டன் வழங்கப்படுகிறது அதன் Open-Cut Pressure-Sense GT Triggers என்று கூறப்படுகிறது இந்தக் கட்டுப்பாடுகள் 10 அழுத்த நிலைகளை வழங்குகின்றன, மேலும் இவற்றை விளையாட்டில் உள்ள பல்வேறு செயல்பாடுகளுக்கு ஒதுக்கிக்கொள்ளலாம்.
கேமரா அம்சங்களை பொறுத்தவரை Infinix GT 50 Pro 50-மெகாபிக்ஷல் ப்ரைமரி சென்சார் உடன் இதில் 8-மெகாபிக்ஷல் அல்ட்ரா வைட் என்கில் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் செல்பிக்கு 13-மெக்பிக்ஷால் முன் கேமரா வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க OnePlus யின் இந்த போனில் ColorOS 17 யின் மிக பெரிய அப்டேட் பேட்டரியிலிருந்து AI வரை மிக பெரிய மாற்றம்
இந்த போனில் பேட்டரி பெக்கப்புக்கு 6,500mAh பேட்டரி சப்போர்டுடன் 45W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இதை தவிர 10W ரிவர்ஸ் சார்ஜிங் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
இதை தவிர இந்த போனில் Infinix GT 50 Pro GT MagCharge Cooler 2.0, பைபாஸ் சார்ஜிங் 162.44×77.23×8.15mm டைமென்ஷன் மற்றும் இதன் இடை 198கிராம் இருக்கிறது இதனுடன் Wi-Fi 6, Bluetooth 5.4, NFC, மற்றும் USB Type-C port ஆகியவை வழங்கப்படுகிறது.