குறைந்த விலையில் iPhone Duo என்று ஆசையை காட்டுவோரிடம் எச்சரிக்கை உண்மை

iphone Duo வாங்குவது என்பது நிக கடினமான ஒன்றாக இருக்கிறது மற்றும் மோசடி செய்யும் கும்பல் அதை கவனித்து வருகிறார்கள் என்பதை சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி, ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய கைபேசியை தள்ளுபடி விலையில் வழங்குவதாகவும், அல்லது முன்கூட்டியே முன்பதிவு செய்வதாக உறுதியளிப்பதாகவும் கூறி, வாங்குபவர்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட பல போலி வெப்சைட்களை உலகம் முழுவதும் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த நேரத்தை மோசடிக்காரர்கள் அவர்களுக்கு சாதகமாக மாற்றுகிறார்கள். ஐபோன் டியோவுக்கான முன்பதிவுகள் ஒரு மணி நேரத்திற்குள் விற்றுத் தீர்ந்துவிட்டன, புதிய ஆர்டர்களுக்கு ஜனவரி மாதமே டெலிவரி செய்யப்படும் எனக் காட்டப்படுகிறது, மேலும் கடைகளில் லிமிடெட் ஸ்டாக் உள்ளது என கூறப்படுகிறது . இதை விரைவில் பெறத் துடிக்கும் எவரும், நம்ப முடியாத அளவுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளுக்கு எளிதில் இலக்காகி விடுகிறார்கள்.

iPhone Duo யில் 25% டிஸ்கவுண்ட் கவர்ச்சியை காட்டி இழுக்கும்

Kaspersky செக்யூரிட்டி கண்காணிக்கும் சைட்டிக்கு iPhone Duo யில் 25 சதவிகிதம் டிஸ்கவுண்ட் வழங்கப்படுவதாக தெரித்துள்ளது, மேலும் இந்த வெப்சைட் பார்க்க ஆப்பிளின் சொந்த வெப்சைட் போல டிசைன் செய்யப்பட்டுள்ளது மற்றும் மேலும் அதில் கவுண்டவுன் 3௦ நிமிடங்கள் வைக்கப்பட்டுள்ளது அதாவது இதன் அர்த்தம் 30 நிமிடத்தில் விற்பனை முடிய முடியபோகுது என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஒரு சாதாரணம் மக்கள் இதை வாங்குவதற்கு ஆபர் என்று பார்த்தது அவர்களை வாங்க தூண்டும் மேலும் எதை பற்றியும் யோசிக்காமல் அதை வாங்க செல்கிர்ர்கள்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த வெப்சைட்டில் பேங்க் கார்ட் தகவல் அல்லது UPI போன்ற எதையும் கேட்கவில்லை, ஆனால் இதில் பயனர்களின் பெயர், முகவரி மற்றும் காண்டேக்ட் தகவல் போன்றவற்றையே சேகரிக்கிறது. பணம் செலுத்துதல் மற்றும் விநியோகம் குறித்து உறுதிப்படுத்த ஒரு “மேனேஜர்” பின்னர் அழைப்பார் என்று கூறப்படும். இது பெரும்பாலும் ஒரு மோசடியின் முதல் கட்டம் மட்டுமே என்றும், இதன் விளைவாக பண இழப்பு ஏற்படும் என்றும் கச்பர்க்ஷி
(Kaspersky) தெரிவிக்கிறது; ஏனெனில், அந்தத் தொடர் அழைப்பின் மூலமே பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்தத் தூண்டப்படுகிறார்கள்.

Apple போன்று தெரியும் போலியான வெப்சைட் கண்டறிவது எப்படி?

ஒரு இணையதளத்தின் சின்னம், நிறம் மற்றும் வடிவமைப்பை மட்டும் பார்த்து அதை உண்மையானது என்று கருதிவிட முடியாது. மோசடி செய்பவர்களால் இப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்ற எழுத்துருக்கள், படங்கள் மற்றும் பக்க அமைப்பைப் பயன்படுத்தி தளங்களை உருவாக்க முடிகிறது. ஒரு வெப்சைட்டை அடையாளம் காண, முதலில் அதன் இன்டர்நெட் முகவரியைக் கவனமாகச் சரிபார்க்கவும். ஒரு இணைப்பில் ஆப்பிள் நிறுவனத்தின் பெயர் இருப்பதாலேயே அது அந்த நிறுவனத்தின் உண்மையான இணையதளம் என்று ஆகிவிடாது. அறியப்படாத செய்திகள், சோசியல் மீடியா விளம்பரங்கள் அல்லது வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் மூலம் பெறப்படும் இணைப்புகளை நேரடியாக நம்ப வேண்டாம். நீங்கள் பண மோசடிக்கு ஆளாகியிருந்தால், இந்தியாவில் உள்ள சைபர் குற்ற உதவி நம்பர் 1930-ஐத் தொடர்புகொண்டு, தேசிய சைபர் குற்றப் புகாரளிப்பு வெப்சைட்டில் புகார் அளிக்கவும்.

இதையும் படிங்க OnePlus யின் இந்த போனில் ColorOS 17 யின் மிக பெரிய அப்டேட் பேட்டரியிலிருந்து AI வரை மிக பெரிய மாற்றம்

iPhone வாங்கும்போது இந்த விஷயத்தை நினைவில் வைக்கவும்.

தெரியாத வெப்சைட் , ஈமெயில், SMS சோசியல் மீடியா அல்லது WhatsApp மூலம் கிடைக்கும் தெரியாத லிங்கில் க்ளிக் செய்ய கூடாது

மிக சிறந்த டிஸ்கவுண்ட் என்பதை பார்த்து உடனே புதிய போனை வாங்க வேண்டும் என ஒஆட கூடாது

தெரியாத நபருடன் தங்களின் சொந்த தகவல் ஷேர் செய்ய கூடாது பெயர், மொபைல் நம்பர், ஈமெயில் மற்றும் பல மற்ற தகவல்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :