ஆப்பிளின் முதல் iPhone Duo போல்டபில் போன் அறிமுகம் செய்தது என்ன சிறப்பு இருக்கு பாருங்க

HIGHLIGHTS

Apple முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் Apple calls it iPhone Duo உலக்களவில். அறிமுகம் செய்தது,

இதில் உள்ள உயர்தரமான மற்றும் உறுதியான கீல் அமைப்பு (hinge mechanism), போனிற்கு மிகுந்த நீடித்து உழைக்கும்

இதன் 256ஜிபி, 512ஜிபி, 1டிபி மற்றும் 2டிபி ஸ்டோரேஜ் திறன்களில் ரூ. 2,99,900 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

ஆப்பிளின் முதல் iPhone Duo போல்டபில் போன் அறிமுகம் செய்தது என்ன சிறப்பு இருக்கு பாருங்க

Apple இன்று அதன் மக்கள் ஆரவமுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் Apple iPhone Duo உலக்களவில். அறிமுகம் செய்தது, சீரான ஸ்க்ரீன் ரேஷியோ கொண்டிருப்பதால், இந்தச் போன தடையற்ற பல வேலைகளை (multi-tasking) செய்யும் வசதியை வழங்குகிறது. மேலும், இதில் உள்ள உயர்தரமான மற்றும் உறுதியான கீல் அமைப்பு (hinge mechanism), போனிற்கு மிகுந்த நீடித்து உழைக்கும் தன்மையை அளிக்கிறது. சுவாரஸ்யமாக, திறக்கப்பட்ட நிலையில் இதுவே முதல் மிக மெல்லிய ஐபோனாக (iPhone) விளங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Apple iPhone Duo சிறப்பம்சம்.

iPhone Duo யில் 7.6-இன்ச் கொண்ட சூப்பர் ரெட்டினா XDR இன்டெர்னல் ஸ்க்ரீன் , 5.4-அங்குல வெளித் ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளன. இரண்டு ஸ்க்ரீன்களும் புரோமோஷன், ஆல்வேஸ்-ஆன் செயல்பாடு மற்றும் 3,000 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னாஸ வழங்குகிறது வெளிப்புறப் ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கின்றன. மேலும் இந்த போனில் மடிப்புகளை அவ்வளவாகத் தெரியாமல் செய்யவும் ஆப்பிள் நிறுவனம் உள் ஸ்க்ரீனில் நானோ-டெக்ஸ்சர் பினிஷ் ஒன்றைச் சேர்த்துள்ளது.

போட்டோ எடுப்பதற்காக, ஐபோன் டியோவில் சென்சார்-ஷிஃப்ட் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 2x ஆப்டிகல் தர ஜூம் கொண்ட 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் ப்ரைம் கேமராவும், அதனுடன் 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா வைட் கேமராவும் இடம்பெற்றுள்ளன. இது டால்பி விஷனில் 120fps ஸ்பீடில் 4K வீடியோவைப் ரெக்கார்டிங் செய்யும் பவர் கொண்டது. இதன் போல்டபில் டிசைன், டியோ பிரிவியூ, ஸ்மார்ட் டேக் மற்றும் டூயல் கேப்சர் போன்ற அம்சங்களையும் செயல்படுத்துகிறது.

இதன் உள்ளே, ஆறு கோர் சிபியு, ஏழு கோர் ஜிபியு மற்றும் இரட்டை 16 கோர் நியூரல் இன்ஜின் கொண்ட 2 நானோமீட்டர் A20 ப்ரோ சிப் உள்ளது. ஐபோன் 17 ப்ரோவை விட 35 சதவீதம் வரை சிறந்த தொடர்ச்சியான பர்போமான்ஸ் வழங்குவதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. இந்த போனில் உள் ஸ்க்ரீன் 31 மணிநேரம் வரையிலும், வெளிப்புறத் ஸ்க்ரீனை பயன்படுத்தி 44 மணிநேரம் வரையிலும் வீடியோவை இயக்கும் பவர் கொண்டது.

இந்த ஃபோன் கிரேடு 5 டைட்டானியத்தால் ஆனது மற்றும் செராமிக் ஷீல்டு பாதுகாப்பைப் பயன்படுத்துகிறது, மேலும் இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்டிர்க்காக IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. ஃபேஸ் ஐடிக்கு பதிலாக, டச் ஐடி சிட் பட்டனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, அதே சமயம், ஃபோனைத் திறப்பதற்கும் மூடுவதற்குமான இயக்கத்தைக் கட்டுப்படுத்த அதன் கீல் 100க்கும் மேற்பட்ட பாகங்களைப் பயன்படுத்துகிறது.

இதையும் படிங்க ஆப்பிளின் முதல் iPhone Duo போல்டபில் போன் அறிமுகம் செய்தது என்ன சிறப்பு இருக்கு பாருங்க

Apple iPhone Duo விலை

Apple iPhone Duo ஸ்டார் வொயிட் மற்றும் நைட் ஸ்கை ஆகிய கலர்களில் , 256ஜிபி, 512ஜிபி, 1டிபி மற்றும் 2டிபி ஸ்டோரேஜ் திறன்களில் ரூ. 2,99,900 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

முன்பதிவுகள் அக்டோபர் 16 அன்று தொடங்குகின்றன, இந்தியா உட்பட 70க்கும் மேற்பட்ட நாடுகளில் அக்டோபர் 23 அன்று விற்பனை ஆரம்பமாகும். இந்த போன் iOS 27.1 உடன் வெளியிடப்படும், அதே நேரத்தில் ஆப்பிள் பென்சில் ஆதரவு இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile