Nothing யின் புதிய ஹெட்போன் அறிமுகம் Sony, JBL நிறுவனங்களுக்கு மிக பெரிய டஃப்

HIGHLIGHTS

Nothing இந்தியாவில் அதன் Nothing Phone 3, உடன் அதன் நத்திங் ஹெட்போன்அறிமுகம்

இதன் பெயர் Nothing Headphone 1 ஆகும்

இந்தியாவில் நத்திங் ஹெட்ஃபோன் 1 விலை ரூ.21,990 ஆகும்.

Nothing யின் புதிய ஹெட்போன் அறிமுகம் Sony, JBL நிறுவனங்களுக்கு மிக பெரிய டஃப்

Nothing இந்தியாவில் அதன் Nothing Phone 3, உடன் அதன் நத்திங் ஹெட்போன்அறிமுகம் செய்தது இதன் பெயர் Nothing Headphone 1 ஆகும் இது நிறுவனத்தின் முதல் ஹெட்போன் ஆகும் மேலும் இது முதல் முறையாக TWS இயர்பட்ஸ் கொண்டு வந்துள்ளது, மேலும் இது புதிய மேலும் இதன் மிக பெரிய சிறப்பு இது 80 மணி நேரம் வரை பேக்கப் வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nothing Headphone 1 விலை தகவல்

இந்தியாவில் நத்திங் ஹெட்ஃபோன் 1 விலை ரூ.21,990 ஆகும். ஜூலை 15 முதல் நாட்டில் பிளிப்கார்ட், பிளிப்கார்ட் மினிட்ஸ், விஜய் சேல்ஸ், குரோமா மற்றும் முக்கிய ரீடைளர் விற்பனைக் கடைகள் வழியாக வாங்குவதற்குக் கிடைக்கும். ஹெட்ஃபோன்கள் கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் விற்கப்படும், மேலும் வெளியீட்டுச் சலுகையாக, விற்பனையின் முதல் நாளில் வாடிக்கையாளர்கள் அவற்றை ரூ.19,999க்கு வாங்க முடியும்.

Nothing Headphone 1 சிறப்பம்சம்.

டிசைன் பற்றிப் பேசுகையில், இது வெளிப்படையான, சற்று வெர்டிக்கள் டிசைன் பாடி கொண்ட ஓவர்-இயர் ஹெட்ஃபோன், நடுவில் உயர்த்தப்பட்ட ஓவல் மாட்யுல் உள்ளது. இந்த முறை Nothing டச் கண்ட்ரோலுக்கு பதிலாக கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக ஹெட்ஃபோனில் பிசிக்கல் பட்டங்களை பயன்படுத்தியுள்ளது . பயனருக்கு சவுண்ட் சரிசெய்ய ஒரு ரோலர், டிராக்குகளை மாற்ற ஒரு Paddle மற்றும் ANC மோட் மாற்ற ஒரு தனி பட்டனையும் வழங்கியுள்ளது .

Nothing Headphone 1 யில் 40mm டைனமிக் டிரைவர் வழங்கப்படுகிறது மற்றும் இந்த ஹெட்போன் 42dB வரையிலான Active Noise Cancellation (ANC) சப்போர்ட் வழங்குகிறது. இது டிரான்ஸ்பரன்சி பயன்முறையையும் கொண்டுள்ளது, இதனால் தேவைப்படும்போது வெளிப்புற ஒலிகளைக் கேட்க முடியும். ஆடியோ டியூனிங்கைப் பற்றிப் பேசுகையில், பிரிட்டிஷ் உயர்நிலை ஆடியோ பிராண்டான KEF இன் சவுண்ட் இன்ஜினியர்களால் இது நன்றாக டியூன் செய்யப்பட்டுள்ளது, இதன் காரணமாக அதன் ஒலி செயல்திறன் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.

புளூடூத் 5.3 உடன், இந்த ஹெட்ஃபோன் AAC, SBC மற்றும் LDAC ஆடியோ கோடெக்குகளை சப்போர்ட் செய்கிறது . இந்த டிவாஸ் ஆண்ட்ராய்டு 5.1 மற்றும் iOS 13 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்சனில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுடன் இணக்கமானது. இதில் இரட்டை சாதன இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது, இதனால் பயனர்கள் ஒரே நேரத்தில் இரண்டு டிவாஸ் இணைக்க முடியும்.

இதையும் படிங்க Nothing Phone 3 அறிமுகம் இந்த விலை மற்றும் சுவாரஸ்யமான அம்சங்கள் பார்க்கலாம் வாங்க

நத்திங் ஹெட்ஃபோன் 1 இல் 1040mAh பேட்டரி உள்ளது, இது USB டைப்-சி போர்ட்டிலிருந்து சுமார் இரண்டு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். ANC ஆஃப் செய்யப்பட்ட நிலையில், இந்த ஹெட்ஃபோன் 80 மணிநேரம் வரை AAC ஆடியோவை இயக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. நீங்கள் LDAC கோடெக்கைப் பயன்படுத்தினால், 54 மணிநேரம் வரை பேக்கப் கிடைக்கும். அதே நேரத்தில், ANC இயக்கப்பட்டிருக்கும் போது இது 30-35 மணிநேரம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

ஹெட்ஃபோன் 3.5 mm ஆடியோ ஜாக்கையும் கொண்டுள்ளது மற்றும் அதன் உடல் சுமார் 329 கிராம் எடை கொண்டது. நிறுவனம் அதனுடன் பாக்ஸில் ஒரு மென்மையான-ஷெல் ஸ்டோரேஜ் பாக்ஸ் வழங்கியுள்ளது, இது பயணத்தின் போது அதை எடுத்துச் செல்வதை எளிதாக்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo