Donald Trump: புதிய மொபைல் மற்றும் அன்லிமிடெட் 5G திட்டமும் அறிமுகம் இனி மற்ற டெலிகாம், போன் நிலை என்ன

Donald Trump: புதிய மொபைல் மற்றும் அன்லிமிடெட் 5G திட்டமும் அறிமுகம் இனி மற்ற டெலிகாம், போன் நிலை என்ன

Donald Trump: அமெரிக்க ஜனாதிபது டொனால்ட் ட்ரம்ப் ஸ்மார்ட்போன் சந்தையில் காலடி எடுத்து வைத்து உள்ளார் இதனுடன் புதிய 5G வயர்லஸ் சேவை மற்றும் $499 யில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளார் மேலும் இந்த புதிய மொபைல் பெயர் Trump Mobile என வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த அறிவிப்பை திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த சேவையானது அமெரிக்காவின் மூன்று பெரிய Verizon, AT&T, மற்றும் T-Mobile நெட்வர்க் கேரியர்களின் கீழ் இயங்கும் மேலும் இந்த போன் 47.45 கிடைக்கும் இந்த விலையானது தற்போதுள்ள 47வது ஜனாதிபதி மற்றும் முந்தைய 45வது பதவியும் சேர்த்து போடப்பட்டது

அறிக்கையின் படி 10 ஆண்டுக்கு முன்னதாகவே இதை பற்றி அறிவித்து இருந்தார் அதனை தொடர்ந்து தனது 10 வது ஆண்டு நிறைவை தொடர்ந்து தனது மொபைல் சேவையை தொடங்கும் வகையில் The T1 Phone போனை அறிமுகம் செய்தது அதற்க்கு அன்லிமிடெட் 5G நன்மையும் கொண்டு வந்தது

Trump Mobile மற்றும் அன்லிமிடெட் 5G நன்மை

அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி , டிரம்ப் மொபைல் ஒரு தி 47 திட்டத்தை வழங்குகிறது, இதில் வயர்லெஸ் சேவைகள் மாதத்திற்கு $47.45 (தோராயமாக ரூ. 4,082) கட்டணத்தில் அடங்கும், இதன் மூலம் பயனர்கள் அன்லிமிடெட் டாக் டைம் , டெக்ஸ்ட் மற்றும் மொபைல் டேட்டா (20 ஜிபி அதிவேகம் வரை) பெற முடியும். பயனர்கள் 100 இடங்களுக்கு சர்வதேச அளவில் அழைக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு எந்த ஒப்பந்தமும் இருக்காது, எந்த நேரத்திலும் அதை கேன்ஸில் செய்யலாம்.

இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது விளம்பர அம்சம் ஆனா இவர்களுக்கு மட்டும்தான் உங்களை நோ டிஸ்டர்ப் முழு விவரம் பாருங்க

ஒரு பயனருக்கு சிம் கார்டை வழங்குவதற்கு முன்பு லோன் ஹிஸ்டரி சரிபார்க்க மாட்டோம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிரம்ப் மொபைல் தங்கள் சொந்த போனை கொண்டு வருபவர்களுக்கு சிம் கார்டுகளையும் வழங்கும். புதிய போனின் பிற அம்சங்களில் டிரைவ் அமெரிக்கா மூலம் சாலையோர உதவி வழங்குவதும் அடங்கும். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதன் தங்க நிற T1 போனை அமெரிக்க மக்களுக்கு அறிமுகப்படுத்துவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

இண்டர்நேஷனல் காலிங் சேவையில் எங்கெல்லாம் இலவசம்.?

T1 மொபைல் வாடிக்கையாளர்கள் சுமார் 100 நாடுகளுக்கு இலவச சர்வதேச அழைப்புகளைச் செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றில் அமெரிக்காவில் இராணுவ தளங்களைக் கொண்ட அனைத்து நாடுகளும் அடங்கும். சிறப்பு என்னவென்றால், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவியேற்றதற்காக நிறுவனம் 47.45 டாலர் ரீசார்ஜ் வைத்திருந்தது. 47 திட்டம் நிறுவனத்தின் வலைத்தளமான trumpmobile.com யில் கிடைக்கிறது. ஆகஸ்ட் முதல் இந்த கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo