உங்களின் AC ரிமோட்டில் இந்த பட்டன் இருந்தால் உங்கள் AC தானாகவே சர்விஸ் செய்ய முடியும் அது எப்படி

உங்களின் AC ரிமோட்டில் இந்த பட்டன் இருந்தால் உங்கள் AC தானாகவே சர்விஸ் செய்ய முடியும் அது எப்படி

கொளுத்து கோடை காலம் வந்துவிட்டது ஒவ்வொருவரும் AC வைக்க விரும்பினால் அல்லது மிக சிறந்த ஸ்பீடில் குளிர்ச்சி கிடைக்க வேண்டும் என்றால் AC சர்விஸ் செய்வது அவசியமாகும், மேலும் நம்முள் பலருக்கு AC சர்விசுக்கு அதிக பணம் செலவாகுமோ என்ற பயமும் இருக்கும் , எனவே இங்கு ஒரு சில AC தானாகவே சுத்தம் சர்விஸ் செய்ய முடியும் மேலும் ஏர் கண்டிசனரில் இது போன்ற அம்சம் இருந்தால் அதை ஆட்டோ கிளீன் பங்சன் என கூறுவார்கள், மேலும் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும் இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நாம் AC சர்விஸ் ஏன் செய்ய வேண்டும் ?

நாம் AC சர்விஸ் செய்வதால் ஏசியின் ஆயுள் காலம் அதிகம் நீடிக்கும் கூடவே மிக சிறந்த கூலிங் தரும் மேலும் சிலர் இந்த அம்சம் ஏசியை வாங்கியதிலிருந்து சரிவிஸ் செய்யாமல் இருந்திருக்கலாம் மேலும் இதன் ஆட்டோ கிளின் சேவை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

Ac ஆட்டோக்லீநிங் அம்சம் என்றால் என்ன?

இந்த அம்சமானது இன்றைய மாடர்ன் AC யில் வருகிறது, நிங்களும் லேட்டாத் மாடல் AC வைத்திருந்தால் உங்களின் எசியிலும் இந்த அம்சம் இருக்கும், அதாவது இந்த ஏசியானது அதன் சர்விஸ் தானாகவே செய்து கொள்ளும் வசதி இருக்கும் அதாவது இந்த அம்சத்தால் சாப்ட் சர்விசுக்கு வேலை இருக்காது உண்கின் ஏசியில் இருக்கும் ரிமோட்டின் மூலம் எளிதாக சுத்தம் செய்ய முடியும் .

அது எப்படி வேலை செய்யும் ?

இந்த மோடை இயக்குவதன் மூலம், உங்கள் ஏசியின் இன்டோர் யூனிட் உள்ள பாகங்களை உலர்த்தும் ப்ரோசெசை ஏசி தானே தொடங்குகிறது. இந்த மோடை இயக்க, முதலில் உங்கள் ஏசியை அணைக்க வேண்டும். இந்த ஆட்டோ கிளீனிங் செய்யும் முறையை, ஏசியை அணைத்த பின்னரே தொடங்க முடியும். இந்த மோடை இயக்கியவுடன், ஏசி பேன் வேகமாக இயங்கத் தொடங்குகிறது, இதனால் ஹீட் எக்ச்சென்ஜர் குவிந்துள்ள ஈரப்பதம் வறண்டுவிடும். இந்த ஈரப்பதம் பங்கள் (Fungal) மற்றும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. அது காய்ந்ததும், அழுக்கு மற்றும் துர்நாற்றத்தின் மூலமும் போய்விடும். பின்னர் ஹீட் எக்ஸ்சென்ஜிங் உள்ளே இருக்கும் ஈரப்பதத்தை முழுவதுமாக உலர்த்துவதற்காக பேன் 15 முதல் 30 நிமிடங்கள் வரை இயங்கும். இதை நீங்கள் துணி துவைக்கும் மெஷினில் உலர்த்துவது போலப் புரிந்து கொள்ளலாம். ஏசியின் உள்ளே இருந்து ஈரப்பதம் அகற்றப்படுவதால் பங்கள் பாக்டீரியாக்கள் வளராது.

இந்த அம்சம் உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என செக் செய்வது எப்படி?

இந்த அம்சம் உங்களின் ஏசியில் இருக்கிறதா அல்லது இல்லையா என நீங்கள் இதை மேனுவலாக செக் செய்யலாம் நீங்கள் ஏதோ ஒரு காரணத்தால் ஏசி சர்விஸ் மறந்திருந்தால் உங்களின் ரிமோட்டில் முதலில் ஆட்டோ கிளீன் பட்டன் இருக்கிறதா என கவனிக்கவும், உண்மையில், ஆட்டோ கிளீன் அம்சத்தைக் கொண்ட ஏசிகளின் ரிமோட்டில் அதற்கான குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழியில் உங்கள் ஏசியில் இந்த மோட் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.

இதையும் படிங்க ரூ,6000 யில் வரும் பெஸ்ட் Air Cooler கொளுத்தும் வெயிலை அடுச்சு விரட்டி ரூமை வைக்கும் செம்ம கூளிங்

இதில் கவனம் செலுத்தவேண்டிய விஷயம் என்ன

ஒரு வருடம் கழித்து ஒரு ஏசிக்கு ஹார்ட் மற்றும் சாப்ட் சர்விஸ் தேவை ஹார்ட் சர்விஸ் என்பது ஏசியைத் திறந்து அல்லது அதன் இடத்திலிருந்து அகற்றி, மெஷின்களை பயன்படுத்தி சுத்தம் செய்யும் செயல்முறையாகும். இதேபோல், ஒருவர் வீட்டிலும் சாப்ட் சர்விஸ் என்பது . அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த ஆட்டோ கிளீன் அம்சம் சாப்ட் சேவையை மாற்ற முடியும், ஆனால் ஹார்ட் சர்விஸ் மாற்ற முடியாது. இது குறித்து, பருவத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் உங்கள் ஏசியை தொடர்ந்து சர்வீஸ் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏசியைப் பயன்படுத்தும் போது, ​​ஒவ்வொரு 3-4 நாட்களுக்கு ஒருமுறை ஆட்டோமேட்டிக் கிளீனிங் செய்யும் அம்சத்தைப் பயன்படுத்துவது ஏசியின் ஆயுளை நீடிக்க சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo