இனி Blinkit யில் Airtel சிம் ஆர்டர் செய்யமுடியாது காரணம் என்ன
பாரதி ஏர்டெல் உடனான கூட்டன்மையை ஏப்ரல் 15 அன்று அறிவித்தது
இந்த சேவை தற்காலிக சேவையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆதார் அடிப்படையிலான eKYC உடன் இணைந்து பாஸ்ட் சிம் டெலிவரி செய்வது
சமிபத்தில் Blinkit-Airtel கைகொர்ப்புடன் காரணமாக நீங்கள் உங்கள் வீட்டுக்கு மளிகை சாமான் மற்றும் மற்ற போருட்களை ஆர்டர் செய்வதை போல Airtel யின் SiM கார்ட் ஆர்டர் செய்தால் 10 நிமிடத்தில் டெலிவரி வந்து சேரும் என அறிவித்து இருண்டது ஆனால் இப்பொழுது அதை முடிவுக்கு மொண்டு வந்துள்ளது அதாவது அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஏர்டெல் மற்றும் பிளிங்கிட் இடையேயான கூட்டாண்மைக்கு டெலிகாம் துறை (DoT) ஆட்சேபனை தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் ஆட்செர்ப்பதர்க்கான காரணம், இந்த சேவைக்கு பயன்படுத்தப்படும் KYC செயல்முறையாகும். இந்த சேவை தற்காலிக சேவையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது, Blinkit ஆப் யில் Airtel SIM-ஐத் தேடும்போது ஏதும் அங்கு கிடைக்கவில்லை.
SurveyBlinkit-Airtel சிம் டெலிவரி தடைக்கு காரணம் என்ன ?
அதாவது இதை பற்றி முழுசா பார்த்தல் பாரதி ஏர்டெல் உடனான கூட்டன்மையை ஏப்ரல் 15 அன்று அறிவித்தது இது உங்கள் வீட்டுக்கு தேவையான போருட்களை வாங்குவதை போல சிம் வாங்கலாம் என கூறியது அதாவது இந்த சிம் டெலிவரி சேவையை சுமா 16 முக்கிய நகரங்களுக்கு அறிவித்து இருந்தது டெல்லி, குர்கான், ஃபரிதாபாத், சோனிபட், அகமதாபாத், சூரத், சென்னை, போபால், இந்தூர், பெங்களூரு, மும்பை, புனே, லக்னோ, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் போன்றவை அடங்கும்.
KYC செயல்முறையில் குளறுபடி
கஸ்டமர் புதிய சிம் பெறும்போது, அதை அவரே செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த செயல்படுத்தல் ஆதார் அடிப்படையிலான KYC மூலம் செய்யப்பட இருந்தது. இதற்காக கஸ்டமர் ஒரு ஆன்லைன் லிங்கை பெறுவார். புதிய சிம் கார்டை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த வழிமுறைகள் மற்றும் வீடியோ வழிகாட்டியும் இதில் இருக்கும். இது தவிர, மக்கள் தங்கள் மொபைலில் ஏர்டெல் தேங்க்ஸ் செயலியைப் பதிவிறக்குவதன் மூலமும் புதிய சிம்மை செயல்படுத்தலாம். சமீபத்தில் தொலைத்தொடர்புத் துறை, KYC செயல்முறையை முறையாகப் பின்பற்றுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டதாக ட்விட்டரில் ஒரு பயனர் எழுதினார். இதற்குப் பிறகு, இந்தத் தடை காணப்பட்டது.
செக்குரிட்டி ரிஸ்க்
ஆதார் அடிப்படையிலான eKYC உடன் இணைந்து பாஸ்ட் சிம் டெலிவரி செய்வது, சிம் ஸ்வாப் மோசடி, அடையாளத் திருட்டு மற்றும் திருடப்பட்ட அல்லது போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத சிம் செயல்படுத்தல்கள் போன்ற தவறான பயன்பாட்டின் அபாயத்தை அதிகரிக்கிறது.
குற்றவியல் தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு
மோசடியான வழிகளில் பெறப்பட்ட சிம் கார்டுகள் சைபர் மோசடி, பயங்கரவாதம் மற்றும் மனித கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் உள்ளன, இதனால் கடுமையான சரிபார்ப்பு அவசியமானது.
வெரிபிகேசன் பலப்படுத்த உத்தரவு
இந்தத் தடை தற்காலிகமானது என்றால், KYC செயல்முறை குறித்து ஏர்டெல் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த வாய்ப்புள்ளது. இந்த செயல்பாட்டில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். தற்போது, நீங்கள் ஏர்டெல்லின் செயலியில் இருந்து ஆன்லைனில் சிம் வாங்கினால், சிம்மை செயல்படுத்தும் செயல்முறை ஏர்டெல் வழங்கிய ஒரு ஊழியரால் முடிக்கப்படுகிறது ஒருவேளை ஏர்டெல் தனது இன்ஸ்டன்ட் சிம் டெலிவரியில் இதே முறையை செயல்படுத்தக்கூடும். மேலும் அதிலும் பல மடங்கு பாதுகாப்பு அவசியம் என்பதை அறிவித்துள்ளது
இதையும் படிங்க அடுத்த மாதம் முதல் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யது, இந்த லிஸ்ட்டில் உங்க போன் இருக்கா
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile