Lumio யின் புதிய டிவி இந்த தேதியில் அறிமுகமாகும் இதன் அம்சம் எப்படி இருக்கும் பாருங்க
Lumio யின் புதிய டிவி அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது
இந்த வரிசையின் கீழ் Lumio Vision 7 மற்றும் Vision 9 ஆகிய இரண்டு டிவிகள் அடங்கும்
லூமியா விஷன் ஸ்மார்ட் டிவிகள் QLED டிஸ்ப்ளேவுடன் பொருத்தப்பட்டுள்ளன
Lumio யின் புதிய டிவி அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது இந்த வரிசையின் கீழ் Lumio Vision 7 மற்றும் Vision 9 ஆகிய இரண்டு டிவிகள் அடங்கும் , இது நிறுவனத்தின் முதல் முறையாக கொண்டுவரப்படுகிறது, மேலும் லூமியா விஷன் ஸ்மார்ட் டிவிகள் QLED டிஸ்ப்ளேவுடன் பொருத்தப்பட்டுள்ளன. சிறந்த படத் தரத்திற்காக இவை டால்பி விஷன் ஆதரவைக் கொண்டுள்ளன. இது சவுண்ட் 30W வெளியீட்டைக் கொண்ட ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இதனுடன், டால்பி அட்மோஸிற்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது. மேலும் இந்த டிவியின் அறிமுக தேதி மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyLumio Vision 7, Vision 9 தேதி
Lumio Vision 7, Vision 9 நிறுவனம் இப்பொழுது அதிகரபூவ ட்விட்டர் X பக்கத்தில் இந்த டிவி ஏப்ரல் 10 அன்று அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது, மேலும் இப்பொழுது நிறுவனம் விலை தகவலி பற்றிய எந்த தகவலையும் லீக் செய்யவில்லை. Lumia யின் இந்த டிவி அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் Amazon வெப்சைட் மூலம் இதை வாங்கலாம்.
Fasten your Couchbelts.
— Lumio (@LumioIN) April 2, 2025
Lumio Vision
Launching on April 10 at @amazonIN pic.twitter.com/nXmyhkk4zi
Lumio Vision 7, Vision 9 அம்சம்
Lumio யின் Vision 9 யில் ப்ளூ மினி-LED பேக்லைட் சப்போர்டுடன் இந்த டிவி Dolby Vision சப்போர்ட் செய்கிறது. இந்த டிவியில் 900nits வரையிலான பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது, அதே போல Vision 7,Vision 9 விட குறைந்த வெர்சனில் வருகிறது மேலும் இதும் Dolby Vision சப்போர்டுடன் 400nits பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது.
Vision 9 மற்றும் Vision 7 155% மற்றும் 100% கவரேஜ் DCI-P3 கலர் கேமட் உடன் Vision 9 யில் லோக்கல் டிம்மிங் சப்போர்ட் மற்றும் 1,000,000:1 கான்ட்ராஸ்ட் ரேசியோ வழங்கும். லுமியோ விஷன் 7 நீல LED பின்னொளியையும் ஆதரிக்கிறது. இந்த டிவி 400 நிட்ஸ் பிரகாசத்துடன் வருகிறது. இந்த டிவியில் பிரீமியம் QLED தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது DCI-P3 வண்ண இடத்தின் 110% வரை ஆதரிக்கிறது. இதில் சிறந்த வண்ண வரம்பு மற்றும் வண்ண துல்லியம் இருப்பதாக நிறுவனம் கூறுகிறது.
இரண்டு தொலைக்காட்சிகளிலும் டால்பி விஷன் ஆதரவு வழங்கப்படுகிறது. இவற்றில் உயர் டைனமிக் ரேஞ்ச் (HDR) ஆதரவு வழங்கப்படுகிறது. நிறுவனம் அதன் ஆடியோ சிஸ்டத்திற்கு ஆக்ட் III சவுண்ட் என்று பெயரிட்டுள்ளது. இது குவாட் டிரைவர் அமைப்புடன் வரும் 30W ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இங்கே இரண்டு முழு அளவிலான இயக்கிகள் மற்றும் இரண்டு ட்வீட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த டிவியில் HDMI, ப்ளூடூத் அவுட் அம்சம் மற்றும் eARC சப்போர்ட் உள்ளது.
இதையும் படிங்க வெறும் ரூ,6,799 யில் Thomson QLED TVs மற்றும் வெயிலுக்கு ஏற்ற ஏர் கூலர் அறிமுகம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile