Passport New rule2025:-புதிய பாஸ்போர்ட் அப்ளை,மாற்றம் செய்ய இது அவசியம் மற்றும் புதிய Passport எப்படி அப்ளை செய்வது

Passport New rule2025:-புதிய பாஸ்போர்ட் அப்ளை,மாற்றம் செய்ய இது அவசியம் மற்றும் புதிய Passport எப்படி அப்ளை செய்வது

Passport New rule 2025:- பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்க்கான நடைமுறையில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்துள்ளது, இதன் காரணமாக டாக்யுமென்ட் வெரிபிகேசன் விதிகள் இப்போது கடுமையாகிவிட்டன. அக்டோபர் 1, 2023 க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு, பிறப்புச் சான்றிதழ் மட்டுமே பிறந்த தேதியைச் சான்றளிக்கும் ஒரே வேலிடிட்டியாகும் ஆவணமாக இருக்கும். வெரிபிகேசன் செயல்முறையை எளிமையாகவும் சீரானதாகவும் மாற்றுவதற்காக பிறப்பு மற்றும் இறப்பு ரெஜிஸ்ட்ரேசன் (Amendment) சட்டம், 2023 யின் கீழ் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபர் 1, 2023க்கு முன் பிறந்தவர்களுக்கு, பழைய விதிகள் தொடர்ந்து பொருந்தும், அதாவது, அவர்கள் பள்ளி விட்டுச் செல்லும் சான்றிதழ், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது பிற சேவை பதிவுகளைப் பயன்படுத்தலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Passport புதிய ரூல் அது என்ன முழுசா பாருங்க ?

பாஸ்போர்ட் புதிய திருத்தத்தின்படி, அக்டோபர் 1, 2023 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த அதிகாரங்களில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர், நகராட்சி நிறுவனங்கள் அல்லது பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969 இன் கீழ் நியமிக்கப்பட்ட வேறு எந்த அமைப்பும் அடங்கும்.

இந்தத் தேதிக்கு முன் பிறந்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த நபர்கள் தங்கள் பிறந்த தேதிக்கான சான்றாக பள்ளி விட்டுச் செல்லும் சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து இடமாற்றச் சான்றிதழ் அல்லது பர்மனன்ட் அக்கவுன்ட் நம்பர் (PAN) கார்ட் போன்ற மாற்று ஆவணங்களை இன்னும் சமர்ப்பிக்கலாம் .

Passport Seva Kendras விரிவுப்படுத்தியுள்ளது

அரசு பாஸ்போர்ட்டுகளில் வண்ணக் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது, அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை பாஸ்போர்ட், தூதர்களுக்கு சிவப்பு பாஸ்போர்ட் மற்றும் சாதாரண குடிமக்களுக்கு நீல பாஸ்போர்ட். இது தவிர, பாஸ்போர்ட்டில் பெற்றோரின் பெயர் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஒற்றைப் பெற்றோர்(Single parent) அல்லது தனித்தனியாக வாழும் பெற்றோருக்கு ஒரு நிவாரணமாக இருக்கும்.

இது தவிர, நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவைகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களின் (POPSK) எண்ணிக்கையை 442 லிருந்து 600 ஆக உயர்த்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையை எளிதாகவும் வேகமாகவும் மாற்றும்.

புதிய ரூல்ஸ் படி passport அப்ளை செய்ய தேவையான டாக்யுமென்ட் ?

அக்டோபர் 1, 2023 க்கு முன் பிறந்தவர்களுக்கு, பின்வரும் ஆவணங்களையும் பயன்படுத்தலாம்:

  • பள்ளி விட்டுச் செல்லும் சான்றிதழ்கள்(school Leaveing Certificate) ; கல்வி நிறுவனங்களிலிருந்து ட்ரேன்ஸ்பர் சான்றிதழ்கள்; மெட்ரிகுலேஷன் சான்றிதழ்கள்;
  • வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட பான் கார்ட் ;
  • ஓட்டுநர் உரிமம்; மற்றும் விண்ணப்பதாரரின் பணிப் பதிவிலிருந்து அப்ளிகன்ட் சேவை ரெக்கார்ட் போன்றவை தரலாம். இது பிறந்த சான்றிதழ் இல்லாதவர்களுக்கு இந்த சான்றிதல் பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்க்கு உதவும்
  • மைனர் விண்ணப்பதாரர்கள், பெற்றோர் இருவரின் சம்மதப் படிவத்தையும், பெற்றோரின் பெயரில் முகவரிச் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும். மைனர் விண்ணப்பதாரர்கள் தங்கள் பெற்றோரின் பாஸ்போர்ட்களின் சுய சான்றளிக்கப்பட்ட காப்பி (ஏதேனும் இருந்தால்) சேவை மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பாஸ்போர்ட்டில் தங்கள் மனைவியின் பெயரைச் சேர்க்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருமணச் சான்றிதழ் மற்றும் இரு மனைவியரும் கையொப்பமிட்ட கூட்டு புகைப்பட அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.
  • திருமணம்/விவாகரத்துக்குப் பிறகு தங்கள் குடும்பப் பெயரை மாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள், திருமண/விவாகரத்துச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய ருலின் படி Passport அப்ளை மற்றும் மாற்றம் எப்படி செய்வது ?

நீங்கள் உங்களின் புதிய பாஸ்போர்ட் அப்ளை அல்லது ரினுவல் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த விதிமுறைகளை பின்படர வேண்டும் அவை என்ன என்ன பார்க்கலாம் வாங்க.

  • நீங்கள் https://passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink இல் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா கேந்திரா போர்ட்டலைப் பார்வையிடலாம்.
  • அடுத்து, ஹோம் பக்கத்தில் புதிய பயனர் ரெஜிஸ்டர் என்பதைக் கிளிக் செய்து உங்கள் லிகின் செய்து UD ஐ உருவாக்க வேண்டும்.
  • அடுத்து, நீங்கள் போர்ட்டலில் லாகின் செய்த பிறகு, டாஷ்போர்டில் உள்ள “புதிய பாஸ்போர்ட்டுக்கு அப்ளை அல்லது பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்கவும்” லிங்கை கிளிக் செய்யவும்.
  • அடுத்து, பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற கேட்கப்பட்ட விவரங்களை உள்ளிட்டு, துணை ஆவணங்களை பதிவேற்றவும்.
  • நீங்கள் உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பித்தவுடன், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, வேயபிகேசனுகான சந்திப்பைத் திட்டமிடுங்கள்.
  • நீங்கள் சந்திப்பை திட்டமிட்டவுடன், அசல் டாக்யுமென்ட் உடன் திட்டமிடப்பட்ட சந்திப்பு நேரத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திராவைப் பார்வையிட, விண்ணப்ப நம்பர் மற்றும் பிற தகவல்களுடன் கூடிய அச்சு விண்ணப்ப ரசீதைக் கிளிக் செய்யவும்.

டாக்யுமென்ட் வெரிபிகேசன் மற்றும் மற்ற சம்பிரதாங்கள் முடிந்த பிறகு உங்களின் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட முகவரியில் 30 லிருந்து 40 நாட்கள் உங்கள் வீட்டுக்கு வந்து சேரும், ஒரு வேலை உங்களிக்கு அவசரமாமாக பாஸ்போர்ட் தேவைப்பட்டால் Tatkal பாஸ்போர்ட் அப்ளை செய்யலாம்

பாஸ்போர்ட் முறையை மிகவும் திறமையாகவும் வெளிப்படையாகவும் மாற்றுவதற்காக புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டிய சில பாஸ்போர்ட் விதிகளை மத்திய அரசு புதுப்பித்துள்ளது.

இதையும் படிங்க:This Week OTT: இந்த வார OTT யில் சூழல்,குடும்பஸ்தன் ashram போன்ற பல படங்கள் கலக்க வருகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo