WhatsApp யில் வருகிறது மிக சிறந்த அம்சம் வொயிஸ் மெசேஜ் கேக்க விரும்பாதவர்களுக்கு இது பிடிக்கும்

WhatsApp யில் வருகிறது மிக சிறந்த அம்சம் வொயிஸ் மெசேஜ் கேக்க விரும்பாதவர்களுக்கு இது பிடிக்கும்

WhatsApp நாளுக்கு நாள் பல அம்சங்களை கொண்டு வந்துகொண்டே இருக்கிறது, இந்த பிளாட்பாரம் மூலம் போட்டோ,வீடியோ டாக்யுமென்ட், மற்றும் வீடியோ காலிங் ஆடியோ காலிங் போன்ற பல வேலைகளை ஒரே நரத்தில் செய்ய முடியும். மேலும் வியாழகிழமை அன்று WhatsApp வொயிஸ் மெசேஜை ஸ்க்ரிப்ட் மெசேஜாக கன்வர்ட் செய்து தருகிறது Android மற்றும் iOSயின் இரண்டு பிளாட்பர்மிலும் கொண்டு வருகிறது தட்டச்சு செய்வதை விட வொயிஸ் மெசேஜை அனுப்புவது மிகவும் எளிதானது என்பது அனைவருக்கும் தெரியும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

WhatsApp Voice Message Transcripts

சிலருக்கு படிப்பதை விட கேட்பது கடினமாக இருக்கும். இன்று WhatsApp அதிகாரப்பூர்வமாக ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் வொயிஸ் மெசேஜை கேட்பதில் உள்ள சிக்கல் தீர்க்கப்படுகிறது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

வாட்ஸ்அப் ப்ளாக் யின் படி WhatsApp புதிய அம்சமான ட்ரான்ஸ்ஸ்க்ரிப்ட் அம்சத்தை கொண்டு வந்துள்ளது.குரல் செய்திகளை உரையாக மாற்ற முடியும் என்று WhatsApp கூறுகிறது, எனவே நீங்கள் என்ன செய்தாலும் உரையாடலைத் தொடர இது உதவும். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், டிரான்ஸ்கிரிப்டுகள் உங்கள் சாதனத்தில் உருவாக்கப்படுகின்றன, எனவே WhatsApp உட்பட யாரும் உங்கள் தனிப்பட்ட செய்திகளைக் கேட்கவோ படிக்கவோ முடியாது.

வாட்ஸ்அப் தற்போது ஆங்கிலம், போர்த்துகீசியம், ஸ்பானிஷ் மற்றும் ரஷ்ய மொழிகளை ஆண்ட்ராய்டில் டிரான்ஸ்கிரிப்ட் செய்ய ஆதரிக்கிறது. iOS 16 இல், WhatsApp டிரான்ஸ்கிரிப்ட் பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய, கொரியன், துருக்கியம், சீனம் மற்றும் அரபுக்கு ஆதரவளிக்கிறது.

iOS 17 அல்லது அதற்குப் பிறகு டேனிஷ், ஃபின்னிஷ், ஹீப்ரு, மலாய், நார்வேஜியன், டச்சு, ஸ்வீடிஷ் மற்றும் தாய் ஆதரிக்கிறது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் வரும் வாரங்களில் உலகளவில் வெளியிடப்படுகிறது, இதில் எதிர்காலத்தில் மேலும் புதிய மொழிகள் சேர்க்கப்படும்.

இதையும் படிங்க: WhatsApp யில் வருகிறது Gmail போன்ற அம்சம் இனி எழுதிய மெசேஜ் அலுஞ்சி போனதே என டென்சன் வேண்டாம்

WhatsApp யின் வொயிஸ் மெசேஜை ட்ரான்ஸ்கிரிப்ட் எப்படி செய்வது?

  • வொயிஸ் மெசேஜை டிரான்ஸ்கிரிப்டை இயக்க, முதலில் நீங்கள் WhatsApp திறக்க வேண்டும்.
  • அதன் பிறகு வாட்ஸ்அப் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்.
  • அதன் பிறகு சேட்களில் தட்டவும்.
  • இங்கே நீங்கள் வொயிஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட்களைக் கிளிக் செய்து அதை இயக்க வேண்டும்.
  • பின்னர் நீங்கள் எந்த பயனரின் செட்டுக்கு சென்று வொயிஸ் மெசேஜை நீண்ட நேரம் அழுத்தி பின்னர் டிரான்ஸ்கிரிப் என்பதை தட்டவும், வொயிஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் செய்யப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo