Whatsapp 71 லட்ச மக்களின் அக்கவுண்ட் லோக் செய்யப்பட்டது காரணம் என்ன

HIGHLIGHTS

சுமார் 71 லட்சம் அகவ்வுன்ட்களை ப்ளாக் செய்துள்ளது.

இந்தக் அக்கவுண்ட்கள் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021ஐ மீறியுள்ளன.

இந்தியாவில் வாட்ஸ்அப் 500 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.

Whatsapp 71 லட்ச மக்களின் அக்கவுண்ட் லோக் செய்யப்பட்டது காரணம் என்ன

எல்லோரும் WhatsApp பயன்படுத்துகிறார்கள், ஆனால் அது தொடர்பான விதிகளைப் பற்றி மிகச் சிலரே அறிந்திருக்கிறார்கள். ஒரு தவறு காரணமாக உங்கள் அக்கவுன்ட் கூட மூடப்படலாம். சமீபத்தில், வாட்ஸ்அப் பயனர்கள் மீது நடவடிக்கை எடுத்து சுமார் 71 லட்சம் அகவ்வுன்ட்களை தடை செய்துள்ளது. இதற்க்கு காரணம் என்ன இதற்க்கு பின்னாடி இருக்கும் காரணங்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

WhatsApp யில் 71 லட்சம் அக்கவுண்ட்களை லோக் செய்யப்பட்டுள்ளது

ஒரு அறிக்கையின் படி நமக்கு கிடைத்த தகவலின் படி நவம்பர் மாதத்தில் சுமார் 71 லட்சம் அக்கவுண்ட்களை வாட்ஸ்அப் நிறுவனம் ப்ளாக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையில் இந்தக் அக்கவுண்ட்கள் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021ஐ மீறியுள்ளன. அத்தகைய அக்கவுண்ட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 1 முதல் 30 வரை, நிறுவனம் 71,96,000 அக்கவுண்ட்களை ப்ளாக் செய்துள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 19,54,000 அக்கவுண்ட்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ப்ளாக் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் தனது மாதாந்திர அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்அப் 500 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. மேலும், இந்நிறுவனம் நாட்டில் 8,841 புகார்களைப் பெற்றுள்ளது. கணக்கு நடவடிக்கை என்ற பெயரில் வெளியாகியுள்ள ரிப்போர்ட் பார்க்கும்போது, ​​இந்தக் அக்கவுண்ட்கள் மீது வாட்ஸ்அப் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதில், முன்பு தடை செய்யப்பட்ட கணக்குகளை மீட்டெடுப்பது குறித்த தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட புகார்கள் பற்றிய அனைத்து தகவல்களும் இந்த பயனர் பாதுகாப்பு அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: Jio மற்றும் Airtel யின் இந்த ப்ரீ பெய்ட் திட்டத்தில் கிடைக்கும் Netflix நன்மை

சோசியல் மீடியா அரசு

இந்திய சோசியல் மீடியா பயனர்களை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசு சமீபத்தில் ஒரு புதிய புகார் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கன்டென்ட் மற்றும் பிற புகார்களை இதில் பதிவு செய்யலாம். நாட்டின் டிஜிட்டல் சட்டங்களை வலுப்படுத்த சமீபத்தில் அமைக்கப்பட்ட டீம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சோசியல் மீடியா தளங்களில் தொடர்ந்து புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo