Huawei குழந்தைகளுக்கான ஸ்மார்ட்வாட்ச்சை முன் கேமரா மற்றும் GPS வசதியுடன் அறிமுகம்செய்துள்ளது.

HIGHLIGHTS

ஹூவாய் நிறுவன குழந்தைகளுக்கான ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது

வாட்ச் 4 ப்ரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் வீடியோ கால் கூட செய்ய முடியுமாம்

ஹூவாய் வாட்ச் 4 ப்ரோ மாடல் 341 பிபிஐ ஸ்கிரீன் ரெசல்யூசனுடன் கூடிய 1.41 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

Huawei குழந்தைகளுக்கான ஸ்மார்ட்வாட்ச்சை முன் கேமரா மற்றும் GPS வசதியுடன் அறிமுகம்செய்துள்ளது.

ஹூவாய் நிறுவன குழந்தைகளுக்கான ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. வாட்ச் 4 ப்ரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் வீடியோ கால் கூட செய்ய முடியுமாம். பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் சுலபமாக வீடியோ காலில் உரையாட உதவியாக 5 மெகாபிக்சல் ஹெச்.டி. கேமராவும் இந்த வாட்ச்சில் இடம்பெற்று உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஹூவாய் வாட்ச் 4 ப்ரோ மாடல் 341 பிபிஐ ஸ்கிரீன் ரெசல்யூசனுடன் கூடிய 1.41 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இதில் சில ஸ்போர்ட்ஸ் மோட்களும் உள்ளது. ஸ்டெப் கவுண்டர் மற்றும் குழந்தையின் நடவடிக்கைகளையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும். குழந்தை இருக்கும் இடத்தை துள்ளியமாக கண்டறிய ஜிபிஎஸ் வசதியும் இதில் இடம்பெற்று உள்ளது.

ஹூவாய் வாட்ச் 4 ப்ரோ மாடல் 800 எம்.ஏ.ஹெச் பேட்டரியை கொண்டுள்ளது. இது 40 நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்துகொள்ள முடியுமாம். வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்வாட்ச் சீனாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.11 ஆயிரத்து 750 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo