Nokia 5.4 ஸ்மார்ட்போன் ஸ்னாப்ட்ரகன் 662 ப்ரோசெசருடன் அறிமுகம்.

Nokia 5.4 ஸ்மார்ட்போன் ஸ்னாப்ட்ரகன் 662 ப்ரோசெசருடன்  அறிமுகம்.
HIGHLIGHTS

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது

Nokia 5.4 ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

HMD குளோபல் நிறுவனம் ஒருவழியாக நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி வந்தது குறிப்பிடத்தக்கது. 

நோக்கியா 5.4 சிறப்பம்சங்கள்

– 6.39 இன்ச் 720×1520 பிக்சல் HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட் 
– ஆண்ட்ராய்டு 10 
– 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 5 எம்பி வைடு ஆங்கில் கேமரா
– 2 எம்பி டெப்த் சென்சார் 
– 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 16 எம்பி செல்பி கேமரா
– பின்புறம் கைரேகை சென்சார் 
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
– யுஎஸ்பி டைப் சி
– 4000 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்

புதிய நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் பன்ச் ஹோல் ஸ்கிரீன், 16 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
 
இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் பின்புறம் கைரேகை சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை மற்றும் விற்பனை தகவல்.

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் போலார் நைட் மற்றும் டஸ்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 229 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo