பப்ஜி கேம் பல ஆயிரம் கோடி கணக்கு வருவாய் பிடித்துள்ளது.

HIGHLIGHTS

கம்ப்யூட்டருக்கான பப்ஜி கேம் மட்டும் சுமார் 79 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5,463 கோடி) வருவாய் ஈட்டியிருக்கிறது.

பப்ஜி  கேம்  பல ஆயிரம் கோடி கணக்கு வருவாய்  பிடித்துள்ளது.

உலகின் பிரபல கேமாக இருக்கும் பப்ஜியை உருவாக்கிய பப்ஜி கார்ப் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 92 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,362 கோடி) வருவாய் ஈட்டியிருக்கிறது. இதில் மொத்த லாபம் 31 கோடி (இந்திய மதிப்பில் ரூ.2,143) ஆகும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மொத்த வருவாயில் பெருமளவு பங்கு கம்ப்யூட்டருக்கான பப்ஜியில் இருந்து கிடைக்கிறது. முதற்கட்டமாக பப்ஜி கேம் கம்ப்யூட்டரில் அறிமுகமாகி அதன்பின் இதன் மொபைல் பதிப்பை டென்சென்ட் கேம்ஸ் உருவாக்கியது. பப்ஜி கேம் விதிகளை பொருத்தவரை கேம் துவங்கும் போது பயனர் வானில் இருந்து தீவு ஒன்றில் இறங்க வேண்டும்.

 

கன்சோல்கள் மற்றும் மொபைல் பதிப்புகளில் இருந்து பப்ஜி கேம் வருவாய் முறையே ரூ.414 கோடி மற்றும் ரூ.450 கோடிகளை ஈட்டியிருக்கிறது. பப்ஜி கார்ப் வருவாய் விவரங்கள் VG247 மூலம் வெளியாகியிருக்கிறது. பப்ஜி கேம் ஆசிய கண்டத்தில் மிகவும் பிரபலமான கேமாக இருக்கிறது.

தீவில் இறங்கியதும் அவர்களுக்கான சவால்கள் இருக்கும், அவற்றை எதிர்கொண்டு தனியே இருக்கும் கடைசி நபர் வெற்றி பெற்றவராக முடியும். கம்ப்யூட்டருக்கான பப்ஜி கேம் மட்டும் சுமார் 79 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5,463 கோடி) வருவாய் ஈட்டியிருக்கிறது.

ஆசியாவில் மட்டும் பப்ஜி வருவாயில் சுமார் 53 சதவிகிதம் வருவாய் கிடைத்திருக்கிறது. ஆசியாவை தொடர்ந்து வட அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்டவை அதிக வருவாய் ஈட்டித்தரும் பகுதிகளாக இருக்கின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo