வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவது எப்படி?

HIGHLIGHTS

வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் IOS பிளாட்போர்ம் பதிப்புகளில் வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்பும் வசதி வழங்கப்பட்டு வருகிறது

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவது எப்படி?

இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் UPI. வழிமுறை சார்ந்த பண பரிமாற்றங்களை செயலியிலேயே மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

முன்னதாக வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பீட்டா செயலியில் டெவலப்பர்கள் சோதனை செய்து வந்த அம்சம் படிப்படியாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இயங்கி வரும் 70க்கும் அதிகமான வங்கிகளை வாட்ஸ்அப் சப்போர்ட் செய்கிறது. 

இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் வசதி கூகுளின் டெஸ் மொபைல் பேமெண்ட்ஸ் சேவைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. கூகுள் டெஸ் மொபைல் பேமெண்ட்ஸ் அம்சம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.  

குறிப்பு: வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் செய்ய புதிய வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் வசதியை பணம் அனுப்புவோர் மற்றும் பெறுபவரும் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் வாட்ஸ்அப் மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருப்பதும் அவசியம் ஆகும். 

வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் செய்வது எப்படி?

– முதலில் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் — பேமெண்ட்ஸ் ஆப்ஷன் சென்று வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ்-ஐ செட்டப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யாமல் நேரடியாக பணம் அனுப்ப வேண்டியவரின் காண்டாக்ட் சென்று அட்டாச்மெண்ட் பகுதியில் இருக்கும் பேமெண்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். (எனினும் இந்த அம்சம் நீங்கள் தேர்வு செய்த காண்டாக்ட்-ம் பேமெண்ட் வசதி பெற்றிருந்தால் மட்டுமே வேலை செய்யும்)

– அடுத்து விதிமுறைகளை ஏற்க (அக்செப்ட்) வேண்டும். மொபைல் போன் நம்பரை உறுதி செய்தால் வேலை முடிந்தது. 

– வாட்ஸ்அப் சப்போர்ட் செய்யும் 70க்கும் அதிகமான வங்கிகளில் உங்களது வங்கி கணக்கை வாட்ஸ்அப்பில் சேர்த்து கொள்ளலாம். யு.பி.ஐ. கணக்கு இல்லாதவர்கள், செக்யூரிட்டி பின் மூலம் யு.பி.ஐ. கணக்கை துவங்கலாம். ஏற்கனவே யு.பி.ஐ. கணக்கு வைத்திருப்போர் எஸ்.எம்.எஸ். (கட்டணங்கள் பொருந்தும்) மூலம் உறுதி செய்தால் போதுமானது. 
– வாட்ஸ்அப் பயன்படுத்தும் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு இணைக்காதவர்கள், வங்கிகளில் தங்களது வாட்ஸ்அப் மொபைல் நம்பரை இணைத்துக் கொள்ள முடியும். 

– இனி நீங்கள் பணம் அனுப்ப வேண்டி நபர் மற்றும் பணம் இருக்கும் உங்களது வங்கி கணக்கை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து யு.பி,.ஐ. பின் பதிவு செய்து நொடிகளில் பண பரிமாற்றம் செய்ய முடியும். நீங்கள் அனுப்பிய பணம் உங்களது நண்பருக்கு உடனடியாக அனுப்பப்பட்டு விடும்.

சாட் ஸ்கிரீன் சென்று பணம் அனுப்பியதற்கான பரிமாற்ற விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் பண பரிமாற்றம் செய்ததற்கான குறியீடும் உங்களுக்கு அனுப்பப்படும். இதனை கொண்டு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் இருந்து யு.பி.ஐ. பின் மாற்றுவது, வங்கி கணக்கை அழிப்பது உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட வங்கி கணக்கை தேர்வு செய்து மேற்கொள்ள முடியும். 

வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு வருவதால் வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo