ஏசர் அறிமுகப்படுத்துகிறது Swift 7 லேப்டாப்!

HIGHLIGHTS

ஏசர் நிறுவனம் தற்சமயம் உலகின் மெல்லிய லேப்டாப் மாடலை CES 2018-யில் அறிமுகப்படுத்தியுள்ளது

ஏசர் அறிமுகப்படுத்துகிறது Swift 7 லேப்டாப்!

ஏசர் நிறுவனம் தற்சமயம் உலகின் மெல்லிய லேப்டாப் மாடலை CES 2018-யில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி Swift 7 டிவைஸ் பயனர்கள் எங்கு வேண்டுமானாலும்  சுலபமாக எடுத்துச்செல்லலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கலர் இண்டெலிஜென்ஸ், கார்னிங் கொரில்லா க்ளாஸ் NPT, சர்ச் ஸ்க்ரீன்  போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த Swift 7 லேப்டாப் மாடல். இவற்றில் உள்ள பேக்லைட் கீபோர்டு விமானம் அல்லது ரயில் பயணங்கள் போன்ற குறைந்த ஒளி நிலைகளில் பயனுள்ளதாக இருக்கும். ஏசர் Swift 7 சக்தி வாய்ந்த 7 வது ஜென் இன்டெல் கோர் 7 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது, அதன்பின்பு 8 ஜிபி LPDDR3 ஸ்டோரேஜ் மற்றும் 256GB PCIe SSD ஸ்டோரேஜ் வழங்குகிறது. 

இந்த ஏசர் Swift7 லேப்டாப் சாதனம் விண்டோஸ் 10 பிளாட்போர்மில் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு இந்த லேப்டாப் மாடல் 10மணி நேரம் பேட்டரி ஆயுள் வழங்குவதாகக் கூறப்படுகிறது

இந்த டிவைசில் 14-இன்ச் முழு HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது அதனுடன் இந்த டிவைஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இதில் யூனிபாடி டிசைன் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லேப்டாப் மாடல்.

ஏசர் ஸ்விஃப்ட் 7 இன்டெல் XMM 4G LED கனெக்ட் , நானோ சிம் கார்டு ஸ்லாட் சப்போர்ட் மற்றும் E-சிம் தொழில்நுட்பம் ஆகியவை இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் சுயவிவரங்களைப் டவுன்லோட் மற்றும் செயல்படுத்துவதற்கு பயனர்களை அனுமதிக்கிறது. கூடுதல் பாதுகாப்புக்கான பிங்கர் பிரிண்ட்  ரீடர் இவற்றில் உள்ளது

நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் ஜெர்ரி கவோ தெரிவித்தது என்னவென்றால் உலகின் மிக மெல்லிய லேப்டாப் என்றப் பெயரைப் பெற்றுள்ளது இந்த Swift 7 லேப்டாப், மேலும் ஸ்விஃப்ட் 7 ஒரு மெல்லிய சைஸ், சக்திவாய்ந்த ப்ரோசெசர் மற்றும் நவீன தொழில்நுட்பம் போன்றவை இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்தார்

இந்த லேப்டாப் டிவைசின்  விலை மதிப்பு பொறுத்தவரை 1,699டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்திய விலை மதிப்பில் ரூபாய்.1,07,470-ஆக உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo