புதுசா வருது Realme யின் இரண்டு போன் நாள் குருசாச்சு இந்த தேதியில் வருது

புதுசா வருது Realme யின் இரண்டு போன் நாள் குருசாச்சு இந்த தேதியில் வருது

2025 ஆண்டு முடிவுக்கு வருகிறது ஆனால் இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் பல போன்கள் அறிமுகம்ஆவதை பார்க்க முடிகிறது அந்த வரிசையில் Realme அதன் Realme 16 Pro சீரிஸ் அறிமுகம் செய்ய தயார் செய்துள்ளது, இதில் Realme 16 Pro 5G மற்றும் Realme 16 Pro+ 5G ஆகியவை அடங்கும் மேலும் இந்த 16 pro சீரிஸ் Qualcomm Snapdragon சிப் உடன் வரும் மேலும் இந்த போனின் அறிமுக தகவல் மற்றும் இதன் எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme 16 Pro சீரிஸ் அறிமுக தகவல்.

Realme 16 Pro சீரிஸ் இந்தியாவில் ஜனவரி 6, 2026 அன்று அறிமுகமாகும் உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த போன் சீரிஸ் LumaColor Image மூலம் இயங்கும் 200MP portrat மாஸ்டர் பிரைமரி பின்புற கேமரா அமைப்பு இடம்பெறும் என்பதை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே இந்த தொலைபேசிகள் இந்தியாவில் Flipkart மற்றும் Realme India ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும்.

Realme 16 Pro எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள்

Realme 16 Pro சீரிஸ் ஆன Realme 16 Pro+ 5G மற்றும் Realme 16 Pro 5G, ஒரு புதிய ‘Urban Wild’ டிசைன் உடன் வரும், மேலும் கூடுதலாக இந்த சீரிஸ் Master Gold மற்றும் Master Grey போன்ற கலரில் வரலாம், ஆனால் நிறுவனம் Camellia Pink மற்றும் Orchid Purple இந்தியாவில் கிடைக்கும் என நிறுவனம் உருதி செய்துள்ளது.

இதையும் படிங்க முரட்டு ஆபர் Samsung யின் இந்த மாடலுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

இந்த Realme 16 Pro போனில் மூன்று கேமரா யூனிட் உடன் LED பிளாஷ் அதன் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் Realme ப்ரெண்டிங் பின்புறத்தில் இருப்பது பார்க்கலாம் இதை தவிர இதில் 200MP போர்ட்ரைட் கேமரா இருக்கும் இதன் வலதுபுற பிரேமில் பவர் பட்டன் மற்றும் வோல்யூம் கண்ட்ரோல் போன்றவை வழங்கும்.

Realme 16 Pro+ 5G, Qualcomm இன் Snapdragon 7 Gen 4 சிப்பை விட சிறந்த செயல்திறனை வழங்குவதாகக் கூறப்படும் குறிப்பிடப்படாத Snapdragon SoC மூலம் இயக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த போன் 10x வரை ஜூம் திறன்களைக் கொண்ட மூன்று பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கும். Realme 16 Pro+ 5G மற்றும் Realme 16 Pro 5G இரண்டும் AI Edit Genie 2.0 உடன் வரும், AI StyleMe மற்றும் AI LightMe போன்ற பட எடிட்டிங் கருவிகளை வழங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo