Nokia என்றாலே தனி கெத்து தான், HMD யின் இரண்டு புதிய 4G பீச்சர் போன் அறிமுகம்
HMD இந்தியாவில் அதன் இரண்டு புதிய பீச்சர் போன் அறிமுகம்
எத்தனை பல ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் Nokia யின் பீச்சர் போன் தனி கெத்து தான்
அதன் HMD 101 4G மற்றும் HMD 102 4G பீச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது
HMD இந்தியாவில் அதன் இரண்டு புதிய பீச்சர் போன் அறிமுகம், எத்தனை பல ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் Nokia யின் பீச்சர் போன் தனி கெத்து தான், இது அதன் HMD 101 4G மற்றும் HMD 102 4G பீச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது இந்த இரண்டு போனிலும் மிக பெரிய சுவாரசியம் இதில் ரிமுவபில் பேட்டரி கொடுத்திருப்பது 1000mAh பேட்டரியுடன் மிக சிக சிறந்த காம்பேக்ட் மற்றும் அதிக நாள் நீடுளைக்கும் இந்த பெஸ்ட் போனின் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம்
SurveyHMD 101 4G மற்றும் HMD 102 4G விலை தகவல்.
HMD 101 4G போனின் விலை ரூ, 1,899 ஆகும் இது டீப் ப்ளூ, சிகப்பு மற்றும் ப்ளூ கலரில் கிடைக்கிறது, அதுவே HMD 102 4G போனின் விலை ரூ,2,199 ஆக இருக்கிறது மற்றும் இந்த போன் டீப் ப்ளூ மற்றும் கத்திரிப்பு கலரில் வாங்கலாம் இந்த இரண்டு போனையும் HMD யின் அதிகார கடை மற்றும் ரீடைல் ஸ்டோரில் வாங்கலாம்.
HMD 101 4G மற்றும் HMD 102 4G சிறப்பம்சம்.
HMD 101 4G அம்சம்
MD 101 4G மற்றும் HMD 102 4G ஆகியவை 2-இன்ச் QQVGA டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன, இது 240×320 பிக்சல்கள் ரேசளுசன் கொண்டுள்ளது. இந்த இரண்டு போன்களிலும் Unisoc 8910 FF-S ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் ஸ்டோரேஜ் பற்றிப் பேசுகையில், அவை 24MB RAM மற்றும் 16MB ஸ்டோரேஜை கொண்டுள்ளன, இதை மைக்ரோ SD கார்டு வழியாக 32GB வரை அதிகரிக்கலாம். இந்த போன்கள் S30 + RTOS யில் வேலை செய்கின்றன. இரண்டும் டஸ்ட் மற்றும் ஸ்ப்லாஷ் ரெசிச்டன்ட் பாதுகாப்பிற்காக IP52 ரேட்டிங்கை கொண்டுள்ளன.
இதையும் படிங்க Wow Offer: Samsung யின் இந்த ஃபிளிப் போனில் அதிரடியாக ரூ,12000 டிஸ்கவுண்ட் எந்த மாடல்?
HMD 102 4G அம்சம்
HMD 102 4G-யில் ஃபிளாஷ் கொண்ட QVGA கேமரா உள்ளது. இது பொருத்தமான கேமரா கீபோர்ட் வருகிறது. இந்த இரண்டு போன்களிலும் 1000mAh ரிமுவபில் பேட்டரி உள்ளது, இது நீண்ட நேரம் நீடிக்கும். டைமென்சன் பற்றி பேசுகையில், இந்த இரண்டு போன்களின் நீளம் 118.2 mm, அகலம் 50.2 mm, திக்னஸ் 14.3 மிமீ மற்றும் எடை 83.5 கிராம் ஆகும் .
மற்ற அம்சங்களில் FM ரேடியோ, MP3 பிளேபேக், கிளவுட் ஆப்ஸ் மற்றும் லோக்கல் மொழி சப்போர்ட் ஆகியவை அடங்கும். கனெக்ஷன் விருப்பங்களில் 900/1800MHz பேண்டில் இரட்டை சிம் சப்போர்ட் , புளூடூத் 5, USB டைப்-சி போர்ட் மற்றும் 3.5 mmஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile