முதல் முதலாக வடிவேலின் இந்த திரில்லர் படத்தை பார்த்த நம்மை தலை சுத்த வச்சிடும் ரேட்டிங்கிலும் பக்கா மாஸ்
Maareesan: 2025 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் த்ரில்லர் திரைப்படமான மாரீசன், வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகிய இரு திறமையான கலைஞர்களை முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் , கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த படத்தை , இப்போது ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கிறது. இந்த திரைப்படம் (ஆகஸ்ட் 22) நெட்ஃபிளிக்ஸில் பல ஆடியோ விருப்பங்களுடன் OTT தளங்களில் அறிமுகமானது. நீங்கள் முதல் முறையாக காமடி ஹீரோவான த்ரில்லர் கலந்த அனுபவத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம்
Surveyமாரீசன் யார் யார் நடித்துள்ளனர்?
மாரீசன் – நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த தமிழ்த் திரைப்படமாகும். சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்தை விஷ்ணு கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ளார். ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சிதரா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் மற்றும் ரேணுகா ஆகியோர் துணை வேடங்களில் நடித்து கதைக்கு நிறை சேர்க்கின்றனர்.
இந்தப் படத்தை ஆர். பி. சௌதரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் கலைசெல்வன் சிவாஜி, மற்றும் எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.
மாரீசன் கதை
ஒரு சாமர்த்தியமிக்க திருடன் (ஃபஹத் பாசில்), ஒரு வயதான நபரை (வடிவேலு) ஏமாற்ற முயல்கிறான். ஆனால் அவர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமென சந்தேகிக்கத் தொடங்குகிறார். இதனால், அந்த மோசடிப் பயணம் ஒரு உணர்வுப்பூர்வமான மர்மக் கதையாக மாறுகிறது.
நகைச்சுவை, சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சிகளை கலந்த மாரீசன், இந்த சீசனில் திரையில் பார்ப்பதற்கான சிறந்த அனுபவமாக இருக்கும்.
இதையும் படிங்க: Madharasi: சிவகார்த்திகேயன் மதராஸி ரிலீசாகி ஒரு நாளில் பரபரப்பை ஏற்படுத்தி, OTT தகவல்கள் வெளியானது!
மாரீசன் OTT யில் எங்கு பார்க்கலாம்
வடிவேலுவின் லேட்டஸ்ட் திரைப்படம் தற்பொழுது Netflix OTT தளங்களில் பார்க்கலாம் இந்த படம் ஒரு ஸ்ட்ரீமிங் த்ரில்லர் அநுபவத்தி வழங்குகிறது மேலும் இந்த படத்தில் உங்களுக்கு பிடித்த மொழிகளான தமிழ், தெலுங்கு,ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பார்க்கலாம். மேலும் இது IMDb ரேட்டிங்கின் படி இந்த படம் 7.5 ரேட்டிங் வழங்கப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile