GST புதிய ரூல் TV , AC மற்றும் வாஷிங் மெஷினுக்கு அதிரடி குறைப்பு இனி வாங்கலாம் கம்மி விலையில்

HIGHLIGHTS

AC மற்றும் பெரிய TV உட்பட பல கன்ச்யூமார் பொருட்களின் வரி Goods and Services Tax (GST)கவுன்சில் குறைக்க முடிவு

இந்த நடவடிக்கை பண்டிகைக் காலத்தில் விற்பனையை அதிகரிக்க முடியும்

இந்த பொருட்களை கன்ஸ்யூமர் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.

GST புதிய ரூல் TV , AC மற்றும் வாஷிங் மெஷினுக்கு அதிரடி குறைப்பு இனி வாங்கலாம் கம்மி விலையில்

AC மற்றும் பெரிய TV உட்பட பல கன்ச்யூமார் பொருட்களின் வரி Goods and Services Tax (GST)கவுன்சில் குறைக்க முடிவு செய்துள்ளது இந்த நடவடிக்கை பண்டிகைக் காலத்தில் விற்பனையை அதிகரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவைஸ் விலை குறையும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர், இது தேவையை அதிகரிக்கும் மற்றும் இந்த பொருட்களை கன்ச்யூமர் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

செப்டம்பர் 3, 2025 அன்று நடந்த கூட்டத்தில், கவுன்சில் 12% மற்றும் 28% வரி லிமிட்களை ரத்து செய்து, 5% மற்றும் 18% வரி வரம்புகளை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. அதாவது, அதிகபட்சமாக 28% வரி விதிக்கப்பட்ட ஏர் கண்டிஷனர்கள், பெரிய ஸ்க்ரீன் டிவிகள், ரெப்ரஜிரேட்டர் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் இப்போது 18% வரிக்கு மாறும். முன்னதாக 12% வரி வரம்புக்குட்பட்ட பொருட்களும் வகையைப் பொறுத்து 5% அல்லது 18% வரிக்கு மாறும்.

இதில் எந்த எந்த பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது

  • ஏர் கண்டிஷனர்கள்
  • 32 இன்ச் இலிருந்து அதற்க்கு மேல் உள்ள TVகள் (LED மற்றும் LCD மாடல்கள் உட்பட)
  • மானிட்டர்கள் மற்றும் ப்ரொஜெக்டர்கள்
  • பாத்திரம் கழுவும் மெஷின்

உதாரணமாக, ரூ.40,000 விலை கொண்ட ஒரு டிவி பழைய 28% விகிதத்தில் ரூ.11,200 ஜிஎஸ்டி சேர்க்கப்பட்டது. புதிய 18% விகிதத்துடன், ஜிஎஸ்டி ரூ.7,200 மட்டுமே இருக்கும், இதனால் கஸ்டமகளுக்கு ஒரே ரீடின் மூலம் சுமார் ரூ.4,000 மிச்சமாகும். இதே போன்ற சேமிப்புகள் ஏர் கண்டிஷனர்கள், ப்ரொஜெக்டர்கள் மற்றும் டிஸ்வஷேர் மெஷின்களுக்கும் பொருந்தும்.

இதையும் படிங்க:Dolby Audio சப்போர்டுடன் வரும் பெஸ்ட் TV தரமான சவுண்ட் குவலிட்டியுடன் உங்கள் வீடு இருக்கும் சினிமா தியேட்டர் போல

மேலும் இந்த அப்ளயன்ஸ் விலை குறைப்பானது ஜூன் மாத காலகட்டத்தில் விட வரு குறைப்புன்னது அப்லயனஸ் உற்பத்தியாளர்களுக்கு மிக பெரிய நிம்மதி கொடுக்கும் வகையில் இருக்கிறது என கூறியுள்ளனர்மற்றும் பருவமழை முன்கூட்டியே பெய்ததாலும், பருவம் தவறியதாலும் குளிர்விக்கும் பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டது. லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனங்களான வோல்டாஸ், ப்ளூ ஸ்டார் மற்றும் ஹேவல்ஸ் ஆகியவை தங்கள் ஏர் கண்டிஷனிங் பிஸ்னஸ் வருவாய் 34% வரை சரிவைப் பதிவு செய்துள்ளன.

GST வரி எப்பொழுது ஆரம்பமாகியது

GST வரி ஜூலை 2017 யில் 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய நான்கு லேயருடன் கொண்டு வரப்பட்டது இதனுடன் இதில் இப்பொழுது புதிய குறைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது இதன் மூலம் நீங்கள் இதன் ஒரிஜினல் விலையை விட கம்மி விலையில் வாங்கலாம்.

நேரம் தற்செயலானது அல்ல. வாரங்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின் போது ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் வடிவத்தில் ஒரு “தீபாவளி பரிசு” அளிப்பதாக உறுதியளித்திருந்தார். கவுன்சிலின் முடிவு இப்போது அந்த உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளது, பண்டிகை காலம் தொடங்கும் அதே வேளையில் நுகர்வு சார்ந்த ஊக்கத்திற்கான மேடையை அமைத்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo