Vivo T4 Pro vs Realme P4 Pro 5G: இந்த இரு லேட்டஸ்ட் புதிய போனில் இருக்கும் வித்தியாசத்தை பாத்தால் அசந்து போவிங்க
Vivo சமிபத்தில் அதன் லேட்டஸ்ட் Vivo T4 Pro அறிமுகம் செய்துள்ளது இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Realme P4 Pro 5G களத்தில் இறக்கப்பட்டுள்ளது மேலும் இந்த இரு போனின் டிஸ்ப்ளே, ப்ரோசெசர் , கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் மேலும் இதில் எது வாங்கலாம் என்பதையும் திருந்து கொள்வோம் வாங்க.
Surveyடிஸ்ப்ளே மற்றும் ரேசளுசன்
- விவோ டி4 ப்ரோ 6.77-இன்ச் FHD+ குவாட் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளேவை 2392 × 1080 பிக்சல்கள் ரேசளுசன் , 20:9 ஈஸ்பெக்ட் ரேசியோ 120Hz ரெப்ராஸ் ரேட் , 480Hz டச் வேரியன்ட் மற்றும் 5000 nits ஹை ப்ரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- Realme P4 Pro 5G ஆனது 6.8-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை 1280×2800 பிக்சல்கள் ரேசளுசன் , 144Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் அதிகபட்சமாக 6,500 nits வரை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.
ப்ரோசெசர்
- விவோ டி4 ப்ரோவில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 4 செயலி உள்ளது.
- ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7வது ஜெனரெசன் 4 ப்ரோசெசர் கொண்டுள்ளது.
ஒப்பரேட்டிங் சிஸ்டம்
- Vivo T4 Pro ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 15 இல் இயங்குகிறது.
- Realme P4 Pro 5G ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Realme UI 6.0 இல் இயங்குகிறது.
இதையும் படிங்க:Lava Blaze AMOLED 2 5G VS Moto G45 5G:இந்த குறைந்த விலையில் வரும் போனில் எது பெஸ்ட்?
கேமரா அமைப்பு
- Vivo T4 Pro-வின் பின்புறம் f/1.88 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, f/2.65 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2-மெகாபிக்சல் டீப் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு f/2.45 அப்ரட்ஜர் கொண்ட 32-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
- Realme P4 Pro 5G-யின் பின்புறம் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் உள்ளன. அதே நேரத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி பேக்கப்
- Vivo T4 Pro யில் 6500mAh பேட்டரி உடன் இதில் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது .
- ரியல்மி பி4 ப்ரோ 5ஜியில் 80W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்டுடன் இதில் 7,000mAh பேட்டரி உள்ளது.
கனெக்ஷன் விருப்பங்கள்
- Vivo T4 Pro-வில் 5G, டூயல் 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB Type C 2.0 போர்ட் உள்ளது.
- Realme P4 Pro 5G-யில் டூயல் 5G, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் டைப் C போர்ட் உள்ளது.
Vivo T4 Pro vs Realme P4 Pro 5G விலை தகவல்.
- Vivo T4 Pro 8GB/128GB ஸ்டோரேஜ் வகை ரூ.27,999, 8GB/256GB ஸ்டோரேஜ் வகை ரூ.29,999 மற்றும் 12GB/256GB ஸ்டோரேஜ் வகை ரூ.31,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Realme P4 Pro 5G 8GB/128GB ஸ்டோரேஜ் வகை ரூ.24,999, 12GB/256GB ஸ்டோரேஜ் வகை ரூ.26,999 மற்றும் 8GB/128GB ஸ்டோரேஜ் வகை ரூ.28,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile