Hisense யின் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய சைஸ் TV 110 மற்றும் 116 இன்ச் TV அறிமுகம் உங்க வீடுஆகிடும் தியேட்டர்

HIGHLIGHTS

Hisense இந்திய சந்தையில் அதன் Hisense UX ULED RGB-MiniLED சீரிஸ் டிவியை அறிமுகம் செய்தது

இந்த டிவி வரிசையில் 100-இன்ச் மற்றும் 116- இன்ச் சைஸில் வருகிறது

UX ULED TVs use RGB Mini-LEDs மூலம் டிம்மிங் இல்லத தெளிவான படம் பார்க்கலாம்

Hisense யின் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய சைஸ் TV 110 மற்றும் 116 இன்ச் TV அறிமுகம் உங்க வீடுஆகிடும் தியேட்டர்

Hisense இந்திய சந்தையில் அதன் Hisense UX ULED RGB-MiniLED சீரிஸ் டிவியை அறிமுகம் செய்தது. இந்த டிவி வரிசையில் 100-இன்ச் மற்றும் 116- இன்ச் சைஸில் வருகிறது UX ULED TVs RGB Mini-LEDs மூலம் டிம்மிங் இல்லத தெளிவான படம் பார்க்கலாம் இதன் மூலம் மிக சிறந்த் எனர்ஜி போதுமான லைட்டை வைத்து தேவை இல்லாத லைட்டை குறைத்து மிக சிறந்த வியுவ் வழங்குகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Hisense UX ULED RGB-MiniLED இந்திய விலை தகவல்.

Hisense UX ULED RGB மினி-LED சீரிஸ் மாடல்கள் ரூ.9,99,999 முதல் ரூ.29,99,999 வரை விலையில் இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டிவிகள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடைலர் விற்பனைக் கடைகள் வழியாகவும் விற்பனை செய்யப்படும். இந்த டிவிகள் எப்போது கிடைக்கும் என்பதை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

Hisense UX ULED RGB-MiniLED TV சிறப்பம்சம்.

Hisense UX ULED TV 100-இன்ச் மற்றும் 116 இன்ச் சைஸில் வருகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 4K UHD ரெசளுசன் உடன் LCD பேணல் மற்றும் RGB Mini-LED டெக்நோலாஜி உடன் வழக்கமாக சிங்கிள் கலர் LED யின் UX தனித்துவமான ரெட், கிரீன் மற்றும் Mini LED கலருடன் பல்லாயிரம் டிம்மிங் ஜோன்ஸ் ஒன்று சேர்க்கிறது.

இந்த அணுகுமுறை BT.2020 கலர் இடத்தை 95 சதவீதமாக கவரேஜ் செய்ய உதவுகிறது என்றும், 8,000 நிட்கள் வரை ஹை ப்ரைட்னாஸ் நிலைகளை அடைகிறது என்றும் நிறுவனம் கூறுகிறது. அவை 3×26-பிட் கட்டுப்பாடு, சக்தி-திறனுள்ள பிரகாசம் மற்றும் மிகவும் வசதியான கண் பாதுகாப்பு உடன் ப்ளூ லைட் வெளுச்சத்தை குறைத்து டிம்மிங் சரி செய்து தன்மையை வழங்குகின்றன.

ஹைசென்ஸின் சமீபத்திய UX ULED RGB-MiniLED சீரிஸ் , மென்மையான மற்றும் வைபெரென்ட் பிளேபேக்கிற்காக HDR10+, Dolby Vision IQ, IMAX IQ, IMAX மேம்படுத்தப்பட்ட மற்றும் MEMC உடன் Pantone-வேரிபிகேஷனுடன் துல்லியத்துடன் 3D கலர் மாஸ்டர் ப்ரோவை சப்போர்ட் செய்கிறது . கேமிங்கிற்காக, டிவிகள் சொந்த 165Hz கேம் மோட் அல்ட்ரா, VRR மற்றும் AMD ஃப்ரீசின்க் பிரீமியம் ப்ரோவைக் கொண்டுள்ளன. ஒரு பிரத்யேக கேம் பார் நிகழ்நேர பர்போமான்ஸ் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை வழங்குகிறது.

Hisense UX ULED RGB-MiniLED தொடர், படம், ஒலி மற்றும் மின் பயன்பாட்டை நிகழ்நேரத்தில் சரிசெய்வதாகக் கூறப்படும் Hi-View AI Engine X யில் இயங்குகிறது. அவை 2-TOPS NPU உடன் H7 படத் தர ப்ரோசெசர், துல்லியமான கலர் மறுஉருவாக்கத்தை வழங்க பெக்ரன்ட் மற்றும் LCD லேயர்களை ஒருங்கிணைக்கும் ULED கலர் Refinement செயல்முறையையும் கொண்டுள்ளது.

இந்த Hisense UX ULED RGB-MiniLED சீரிஸில் 6.2.2 சேனல் CineStage X சுற்றுப்புற முழுவதும் மிக சிறந்த சவுண்ட் அம்சத்தை வழங்குகிறது இதனுடன் டாப் பைரிங் ஸ்பீக்கர் மற்றும் சப்வூபார் உடன் வருகிறது தரமான சவுண்ட் எபக்ட் உடன் உங்கள் வீடு ஆகும் தியேட்டர் போல இதனுடன் இதில் eARC ஹை குவாலிட்டி வயர்லஸ் ஆடியோ மற்றும் இது VIDAA Smart OS சீரிஸ் உடன் இயங்குகிறது மேலும் இதில் தமிழ் உட்பட 28 மொழிகள் சப்போர்ட் செய்யும் இதன் உடன் எட்டு ஆண்டு அப்டேட் உடன் சோலார் பவர்ட் USB-C ரீச்சர்சாபில் ரிமோட் கிடைக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo