Vu புதிய TV Dolby Edition உடன் இந்தியாவில் அறிமுகம் சவுண்ட் தரத்தில் தாறு மாறு 75 இன்ச் சைஸ் டிவி ரூ,64,990 யில்

HIGHLIGHTS

Vu அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட் TV அறிமுகம் செய்துள்ளது

இந்த டிவி வரிசையில் 43-இன்சிலிருந்து 75-இன்ச் சைஸ் வரை இருக்கிறது

இந்த புதிய டிவி Dolby Edition ரேஞ்சின் கீழ் Glo QLED சீரிஸ் உடன் பிக்ஜர் குவாலிட்டி

Vu புதிய TV Dolby Edition உடன் இந்தியாவில் அறிமுகம் சவுண்ட் தரத்தில் தாறு மாறு 75 இன்ச் சைஸ் டிவி ரூ,64,990 யில்

Vu அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட் TV அறிமுகம் செய்துள்ளது இந்த டிவி வரிசையில் 43-இன்சிலிருந்து 75-இன்ச் சைஸ் வரை இருக்கிறது இந்த புதிய டிவி Dolby Edition ரேஞ்சின் கீழ் Glo QLED சீரிஸ் உடன் பிக்ஜர் குவாலிட்டி, சவுண்ட் மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி உடன் மிக சிறந்த அம்சத்தை வழங்குகிறது மேலும் இதன் மிக சிறந்த அம்சங்கள் மற்றும் விலை தகவல் அனைத்தையும் பார்க்கலாம் வாங்க மேலும் இந்த டிவி ப்ளிப்கார்டில் வருகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vu Glo QLED TV 2025 விலை தகவல்.

Vu Glo QLED TV 2025 டால்பி எடிஷன் ஐந்து சைஸ்ல் கிடைக்கிறது: 43-இன்ச் ரூ.24,990க்கு, 50-இன்ச் ரூ.30,990க்கு, 55-இன்ச் ரூ.35,990 க்கு , 65-இன்ச் ரூ.50,990க்கு, மற்றும் 75-இன்ச் ரூ.64,990க்கு. இந்த டிவியை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆஃப்லைன் ரீடைளர் விற்பனையாளர்கள் மூலம் வாங்கலாம். அனைத்து மாடல்களுக்கும் ஒரு வருட வாராண்டி அடங்கும்.

Vu Glo QLED TV 2025 அம்சம்

Vu Glo QLED TV 2025 Dolby எடிஷன் A+ கிரேட் பேணல் உடன் QLED டேக்நோலாஜி கொண்டுள்ளது இதனுடன் இந்த டிவியில் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 92 சதவிகிதம் NTSC கலர் கேமட் அம்சத்துடன் வருகிறது மேலும் இந்த டிவி ஏன் Dolby Edition என்று அழைக்கப்படுகிறது காரணம் என்னவென்றால் அதாவது இது Dolby Vision மற்றும் Dolby Atmos சப்போர்ட் வளங்குகுவதே ஆகும். அதாவது இந்த டிவியில் HDR விசுவல்ஸ் உடன் தெளிவான கலர் காண்ட்ராஸ்ட் மற்றும் (Dolby Atmos) சப்போர்ட் இருப்பதால் பிரமண்ட சவுண்ட் எபக்ட் உடன் வரும்.

Dolby Vision மற்றும் Atmos இது தவிர, இந்த டிவி HDR10, HLG மற்றும் உள்ளமைக்கப்பட்ட 24W ஸ்பீக்கர் அமைப்பு ஆகியவற்றிற்கான சப்போர்டுடன் மேம்பட்ட வியூவ் அனுபவத்தை வழங்குகிறது. இடைமுகத்தை இயக்குவது Vu இன் 1.5GHz VuOn AI ப்ரோசெசர் , 2GB RAM மற்றும் 16GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது Google TV OS யில் இயங்குகிறது.

இதையும் படிங்க:40-43 இன்ச் TV வெறும் ரூ,15000க்குள் மெகா ஆபரில் வாங்கி பணத்தை மிட்சப்படுத்துங்க

கூடுதல் அம்சங்களில் உலகின் முதல் உடனடி நெட்வொர்க் ரிமோட் அடங்கும், இது வைஃபை இணைப்பு சிக்கல்களை விரைவாக தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரத்யேக பார்வை முறைகள், குரல் உதவியாளர் அணுகல் மற்றும் VRR, ALLM போன்ற கேமிங் மேம்பாடுகள் மற்றும் குறுக்கு நாற்காலி மேலடுக்கு ஆகியவற்றுடன் வருகிறது. டிவி ஆப்பிள் ஏர்ப்ளே, கூகிள் குரோம்காஸ்ட், 5GHz வைஃபை, புளூடூத் 5.3 மற்றும் வீடியோ பதிவுக்கான விருப்ப கேமரா உள்ளீட்டை சப்போர்ட் செய்கிறது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo