WhatsApp அதிரடியாக 98 லட்ச அக்கவுண்டில் தடை காரணம் என்ன முழுசா பாருங்க
ஜூன் மாதத்தில் இந்தியாவில் 98 லட்சத்திற்கும் மேற்பட்ட அக்கவுண்ட்களை WhatsApp ban தடை செய்துள்ளது. தவறான ஆப் மற்றும் தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தக் அக்கவுண்ட்களை தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. எந்தவொரு பயனரிடமிருந்தும் புகாரைப் பெறுவதற்கு முன்பே இந்தக் அக்கவுன்ட்களில் சில தடை செய்யப்பட்டுள்ளன மேலும் இதன் முழு விவரங்கள் பற்றி பாரக்கலாம்.
SurveyWhatsApp ஜூன் மாதத்தில் 16,069 அக்கவுண்டுக்கு மேல் தடை செய்யப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் இந்தியாவில் 98 லட்சத்திற்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை தடை செய்ததாக அதன் சமீபத்திய இந்திய மாதாந்திர அறிக்கை தெரிவிக்கிறது. இந்த கணக்குகளில் கிட்டத்தட்ட 19.79 லட்சம் கணக்குகள் பயனர் புகார்கள் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே முன்கூட்டியே தடை செய்யப்பட்டன. இந்த அறிக்கைகள் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா எதிக்ஸ் கோட்) விதிகள் (2021) யின் படி வெளியிடப்படுகின்றன.
Meta சொந்தமான மெசேஜிங் தளமான whatsApp யில் கஸ்டமர்களின் பல புகார்கள் இந்தியாவில் தொடர்ந்து வந்து கொண்டே வருகிறது. ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 23,596 கஸ்டமர் புகார் அளித்துள்ளனர், மேலும் அதன் கீழ் 1,001 அக்கவுண்டின் அடிபடையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சமர்ப்பிக்கப்பட்ட கவலைகளை மதிப்பாய்வு செய்த பிறகு கணக்குகளைத் தடை செய்தல் அல்லது முன்னர் தடைசெய்யப்பட்டவற்றை மீண்டும் நிலைநிறுத்துதல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
இதையும் படிங்க: AI உலகத்தில் கலக்கும் Perplexity ஓனர் தமிழரா இவருக்கும் AIக்கும் என்ன சம்மதம் முழுசா பார்க்கலாம் வாங்க
இந்த 16,069 புகார்களில், தடை மேல்முறையீடுகளுடன் தொடர்புடையவை, இதன் விளைவாக 756 அக்கவுண்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அறிக்கையின்படி, பிற புகார் வகைகளில் அக்கவுன்ட் அசிஸ்டன்ஸ் , ப்ரோடேக்ட் தொடர்பான வினவல்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகள் ஆகியவை அடங்கும்.
தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை பின்னர் கண்டறிவதை விட, அது தொடங்குவதற்கு முன்பே நிறுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வாட்ஸ்அப் கூறுகிறது. அதன் துஷ்பிரயோக கண்டறிதல் அமைப்பு மூன்று முக்கிய கட்டங்களில் செயல்படுகிறது, கணக்கு அமைக்கும் போது, மெசேஜ் அனுப்பும் போது மற்றும் எதிர்மறையான கருத்துகளுக்கு எதிர்வினையாற்றும்போது என நிறுவனம் மேலும் கூறியது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile