Vivo யின் வேற லெவல் போன் அறிமுகம் கேமிங் மிலிட்டரி போன்ற அம்சம் அதிக நாள் நீடிதுளைக்கும்

HIGHLIGHTS

Vivo இன்று அதன் Vivo T4R 5G அறிமுகம் செய்துள்ளது.

இது இந்தியாவின் மிக சிறந்த ஸ்லிம்மஸ்ட் போனாக இருக்கும்

vivo T4R 5G ஸ்மார்ட்போன் 8 GB + 128 GB வகைக்கு INR 17,499

Vivo யின் வேற லெவல் போன் அறிமுகம் கேமிங் மிலிட்டரி போன்ற அம்சம் அதிக நாள் நீடிதுளைக்கும்

Vivo இன்று அதன் Vivo T4R 5G அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவின் மிக சிறந்த ஸ்லிம்மஸ்ட் போனாக இருக்கும், மேலும் இது Quad கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் MediaTek Dimansity 7400 ப்ரோசெசருடன் வருகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo T4R 5G விலை தகவல்.

vivo T4R 5G ஸ்மார்ட்போன் 8 GB + 128 GB வகைக்கு INR 17,499, 8 GB + 256 GB வகைக்கு INR 19,499 மற்றும் 12 GB + 256 GB வகைக்கு INR 21,499 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 5, 2025 முதல் பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடைளர் விற்பனைக் கடைகளில் விற்பனைக்கு வரும்.

6 மாதங்கள் வரை இலவச EMI உடன், INR 2000 அல்லது INR 2000 எக்ஸ்சேஞ்ச் போனஸின் இன்ஸ்டன்ட் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

Vivo T4R 5G சிறப்பம்சம்

vivo T4R 5G இந்தியாவின் ஸ்லிம்மஸ்ட் போன் ஆகும் இதன் ஸ்க்ரீன் சைஸ் (6.77) இன்ச் Quad-Curved AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, இதனுடன் இது 120Hz ரெப்ரஸ் ரேட் கேமிங் செய்ய மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் பார்க்க மிக சிறந்த அனுபத்தை வழங்குகிறது மேலும் இந்த போன் Arctic White மற்றும் Twilight Blue கலரில் வருகிறது.

இதன் ப்ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7400 5G சிப்செட்டுடன் 4nm ப்ரோசெசரில் இயங்குகிறது மேலும் இந்த போனில் Ultra Game Mode இருப்பதால் ஸ்மூத் மல்ட்டி டாஸ்கிங் கேம் அனுபத்தை பெற முடியும்.

இந்த போன் நீடித்துலைக்க vivo T4R 5G யில் IP68 மற்றும் IP69 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் உடன் இந்த போனில் MIL-STD-810H military-grade மூலம் இந்த போன் அதிக நாள் நீடிதுளைக்கும் இதை தவிர இந்த போன் டைமன்ட் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது மேலும் டிஸ்ப்ளே பாதிப்பு டென்ஷன் இருக்காது.

போட்டோ எடுப்பதற்கு, இந்த போனில் 50MP Sony OIS ப்ரைம் கேமரா உள்ளது, இது குறைந்த வெளிச்சத்திலும் போட்டோ எடுப்பதில் சிறந்த அனுபவத்தை வழங்கும். இதனுடன் 2MP பொக்கே கேமராவும் உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்காக இந்த போனில் 32MP முன் கேமரா உள்ளது. சிறப்பு என்னவென்றால், இந்த போன் முன் மற்றும் பின் கேமராக்களில் இருந்து 4K வீடியோ பதிவு வசதியை வழங்குகிறது. இது உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மற்றும் ஒரு நல்ல தேர்வாகும்.

ஸ்மார்டார் AI அம்சம்

vivo T4R 5G, பயனர் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் ஸ்மார்ட் AI டூல்களின் இயக்கப்படுகிறது. AI ட்ரான்ஸ் ஸ்க்ரிப்ட், சர்கிள் to சர்ச் , AI நாட் உதவி, AI ஸ்க்ரீன் ட்ரேன்செக்சன் மற்றும் AI டிரான்ஸ்கிரிப்ட் உதவி போன்ற அம்சங்கள் பணிகளை எளிதாக்குகின்றன மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன. AI Erase 2.0 மற்றும் Photo Enhance ஐப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் போட்டோக்களை செம்மைப்படுத்தலாம்.

இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் 5700mAh பேட்டரியுடன் இதில் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டு வரப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo