இனி தட்கால் டிக்கெட் புக் செய்ய OTP அவசியம் புதிய விதிமுறை என்ன பாருங்க
தட்கால் டிக்கெட் புக்கிங் செய்ய ஆதார் OTP அவசியமாகும். அதாவது இனி ஆதார் அங்கிகாரம் (Aadhaar authentication கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய விதி, தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதையும், பொது பயணிகளுக்கு முன்பதிவு செய்வதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது ஜூலை 15, 2025 முதல். நீங்கள் IRCTC வழியாக ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தாலும் அல்லது பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) கவுண்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் ஆஃப்லைனில் புக்கிங் செய்தாலும், ஆதார் OTP வெரிபிகேஷன் இப்போது செயல்பாட்டில் ஒரு அத்தியாவசிய படியாக இருக்கும்.
Surveyபல நேரங்களில் மக்கள் திடிரென ஒரு இடங்களுக்கு போக்கா வேண்டிய கட்டாயமாகிறது ஆனால் இதில் தட்கால் டிக்கெட் ஏற்கனவே முழுமை அடைந்து விடும் காரணமாக மற்ற பயணிகளுக்கு டிக்கெட் எடுக்க முடியாமல் போகிறது எனவே இதில் அதிகம் எஜன்ட் டிக்கெட், புக்கிங்கின் கீழ் புக்கிங் செய்வதன் மூலம் அதிகம் டிக்கெட் புக்கிங் நடைபெறுகிறது இதில் சாதரன பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பது கடினமாகிறது எனவே தற்பொழுது ஆதார் அதேண்டிகேஷன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
Aadhar OTP தட்கால் புக்கிங் கட்டாயம்
இப்பொழுது புதிய விதியின்படி இந்திய ரயில்வே தட்கால் டிக்கெட் மாற்றம் செய்துள்ளது. இனி நீங்கள் IRCTC வெப்சைட் அல்லது மொபைல் ஆப் மூலம் டிக்கெட் புக் செய்ய ஆதார் உடன் லிங்க் செய்யவேண்டியது கட்டாயமாகும் இந்த விதிமுறை ஜூலை 15 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஆன்லைனில் செய்யப்படும் தட்கல் முன்பதிவுகளுக்கு ஆதார் அடிப்படையிலான OTP வெரிபிகேஷன் கட்டாயமாக்கப்படும். தட்கல் டிக்கெட்டை புக்கிங் செய்யும் பயணிகள், முன்பதிவு செய்யும் போது தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும்.
இதையும் படிங்க அனைத்து சேவையும் ஒரே இடத்தில் பெற RailOne ஆப் IRCTC உடன் லிங்க் செய்தால் மட்டும் போதும் எப்படி செய்வது
Aadhaar உடன் IRCTC அக்கவுன்ட் லிங்க் செய்வது எப்படி?
நீங்கள் இன்னும் உங்களின் ஆதார் கார்டை IRCTC அக்கவுன்ட் உடன் லிங்க் செய்யாமல் இருந்தால் முதலில் லிங்க் செய்து கொள்ளுங்கள்
- முதலில் www.irctc.co.in. வெப்சைட்டை லாகின் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு My Account செக்ஷனை தேர்டுக்கவும் அதில் லிங்க் ஆதார் என்பதை தட்டவும்.
- அதன் பிறகு உங்களின் 12 நம்பர் ஆதார் நம்பரை போடவும்
- அதன் பிறகு OTP என்பத க்ளிக் செய்த உடன் உங்கள் மொபைல் நம்பருக்கு OTP வரும் அதை போட்டு வெரிபை செய்தவுடன் உங்களின் அக்கவுன்ட் லிங்க் செய்யப்படும்.
பயணிகள் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் IRCTC கணக்குடன் ஆதாரை இணைத்து சரிபார்க்கவும்.
உங்கள் மொபைல் நம்பர் ஆதாருடன் இணைத்து, புக்கிங் செய்யும் போது அதை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் உடனடியாக OTP-யைப் பெற முடியும்.
தட்கல் டிக்கெட் திறக்கும் நேரத்திற்கு முன்பே தயாராக இருங்கள், அதாவது ஏசி டிக்கெட்டுகளுக்கு காலை 10:00 மணி, ஏசி அல்லாத டிக்கெட்டுகள் காலை 11:00 மணி.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile