அசத்தலான அம்சங்களுடன் Xiaomi Pad 5 இந்தியாவில் அறிமுகம்.

HIGHLIGHTS

இந்தியாவில் சியோமி பேட் 5 டேப்லெட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது

புதிய சியோமி பேட் 5 மாடலில் 8720mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் 128GB மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் 256GB மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் சியோமி பேட் 5 டேப்லெட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. புதிய சியோமி பேட் 5 மாடலில் 11 இன்ச் 2.5K /WQXA LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், HDR10, குவால்காம் ஸ்னாப்டிராகனஅ 860 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், வழங்கப்பட்டு உள்ளது. 

சியோமி பேட் 5 சிறப்பம்சம்

சியோமி பென்-ஐ டேப்லெட் மீது பொருத்தினால் காந்த சக்தியால் இணைந்து கொண்டு தானாகவே சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய சியோமி பேட் 5 மாடலில் 8720mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் குவாட் ஸ்பீக்கர் செட்டப், டால்பி அட்மோஸ், 6.85mm மெல்லிய பாடி, சியோமி ஸ்மார்ட் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது. சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் பென் கொண்டு குறிப்பு எடுப்பது, எழுதுவது, ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, பென் மற்றும் இரேசர் இடையே ஸ்விட்ச் செய்வது என ஏராளமான டாஸ்க்குகளை செய்ய முடியும். 

Xiaomi Pad 5 விலை தகவல்

இந்திய சந்தையில் புதிய சியோமி பேட் 5 மாடல் காஸ்மிக் கிரே எனும் ஒற்றை நிறத்தில் தான் கிடைக்கிறது. இதன் 128GB மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் 256GB மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

புதிய சியோமி பேட்  5 விற்பனை அமேசான், Mi ஹோம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. விற்பனை மே 3 ஆம் தேதி துவங்குகிறது. மே 7 ஆம் தேதி வரை சியோமி பேட் 5 மாடல் 128GB மெமரி மாடல் ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் 256GB மெமரி மாடல் ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :