Xiaomi அறிமுகப்படுத்தியுள்ளது 27 இன்ச் கொண்ட 4K மானிட்டர்.

HIGHLIGHTS

Xiaomi 27 இன்ச் 4K மானிட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரெட்மி பிராண்டின் கீழ் 27 இன்ச்களில் ரெட்மி மானிட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மானிட்டர் எல்சிடி பேனலுடன் 400 நிட்ஸ் பிரகாசத்துடன் வருகிறது.

Xiaomi 27 இன்ச் 4K மானிட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் தனது ரெட்மி பிராண்டின் கீழ் 27 இன்ச்களில் ரெட்மி மானிட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு மானிட்டர்களும் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Xiaomiயின் மானிட்டர் ஒரு PANTONE சான்றளிக்கப்பட்ட டிஸ்பிளே . தொழில்முறை மற்றும் இயல்பான பயன்முறைக்கு இடையில் மாறுவதற்கு இது ஒரு தனி பட்டனை கொண்டுள்ளது. மானிட்டர் எல்சிடி பேனலுடன் 400 நிட்ஸ் பிரகாசத்துடன் வருகிறது. Redmi Monitor Pro 2K ரெஸலுசனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Xiaomi Monitor 27 இன்ச் 4K மற்றும் Redmi Monitor 27 இன்ச் யின் விலை

சீனாவில் Xiaomi Monitor 27-இன்ச் 4K டிஸ்ப்ளேயின் விலை 3,499 சீன யுவான் அதாவது ரூ.41,200 ஆகும், இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்கு 2,999 சீன யுவான் அதாவது சுமார் ரூ.35,300க்கு விற்கப்படும். மானிட்டர் மூன்று வருட உத்தரவாதத்துடன் வருகிறது. Redmi Monitor 27 இன்ச் விலை 1,599 சீன யுவான் அதாவது சுமார் ரூ. 18,800 ஆக வைக்கப்பட்டுள்ளது, ஆனால் சலுகையின் கீழ் இது 1,399 யுவான் அதாவது சுமார் ரூ.16,500க்கு விற்கப்படும். இது மூன்று வருட உத்தரவாதத்துடன் வருகிறது.

Xiaomi Monitor 27 இன்ச் 4K யின் சிறப்பம்சம்

Xiaomi மானிட்டரின் அளவு 4K (3840×2160 பிக்சல்கள்) தீர்மானம் கொண்ட 27 அங்குலங்கள். டிஸ்ப்ளேயின் தரம் ஐபிஎஸ் எல்சிடி மற்றும் இது 1.07 பில்லியன் வண்ணங்களுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இதன் பிரகாசம் 400 நிட்கள். இது DCI-P3 வண்ண கமன்ட் மற்றும் 100% sRGB உடன் வருகிறது. டிஸ்ப்ளே ப்ளூ லைட் பாதுகாப்பு சான்றிதழும் பெற்றுள்ளது. இது DC டிம்மிங் மற்றும் VESA DisplayHDR 400 உடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் இரண்டு HDMI 2.1, ஒரு DisplayPort 1.4, ஒரு USB Type-C போர்ட், இரண்டு USB Type-A போர்ட்கள் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். இது 90W பவர் அவுட்புட் கேபிளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மானிட்டரில் போர்ட்டை மூட மேக்னட் கவர் உள்ளது.

Redmi Monitor 27 இன்ச் Pro யின் சிறப்பம்சம்.

Redmi Monitor Inch Pro ஆனது 2K தெளிவுத்திறனுடன் 27 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் பிரகாசம் 300 நிட்கள். இதனுடன், DC டிம்மிங், கண் பாதுகாப்பு, 100% sRGB வண்ண வரம்பு ஆகியவையும் உள்ளன. இது HDMI 1.4, டிஸ்ப்ளே போர்ட் 1.2 மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த மானிட்டரிலும் போர்ட்டை மூட மானிட்டரில் காந்த உறையும் உள்ளது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :