Xiaomi இந்த மாதம் செப்டம்பரில் ஐந்து புதிய சாதனங்களை வெளியிடும்…!

HIGHLIGHTS

சியோமி நிறுவனத்தின் புதிய சாதனங்கள் செப்டம்பர் 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி Mi ஏர் பியூரிஃபையர், டிவி, Mi பேன்ட் 3 மற்றும் பாதுகாப்பு கேமரா உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படுகிறது.

Xiaomi இந்த மாதம்  செப்டம்பரில்  ஐந்து புதிய சாதனங்களை வெளியிடும்…!

சியோமி நிறுவனத்தின் புதிய சாதனங்கள் செப்டம்பர் 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி Mi ஏர் பியூரிஃபையர், டிவி, Mi பேன்ட் 3 மற்றும் பாதுகாப்பு கேமரா உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படுகிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

முன்னதாக ஸ்மார்ட்டெர் லிவிங் பிரிவில் ஐந்து சாதனங்கள் அறிமுகம் செய்வதாக டீசர் புகைப்படத்தை வெளியிட்டது. சியோமி வெளியிட இருக்கும் சாதனங்களை முன்கூட்டியே சரியாக கணிப்பவர்களுக்கு வியப்பூட்டும் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்து பேருக்கு எஃப்-கோடுகளும் வழங்கப்பட இருக்கிறது.

https://static.digit.in/default/3e5286d94f9c5369f99b3cbeba88c272ecd1fbb6.jpeg

சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் இதயம் படம் இடம்பெற்றிருப்பதால் மே மாதம் சியோமி அறிமுகம் செய்த Mi பேன்ட் 3 இம்முறை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டீசரில் உள்ள பாப்கான் படம், புதிய Mi டிவி மாடலையும், Mi ஏர் பியூரிஃபையர் மேக்ஸ் உள்ளிட்டவை அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

இறுதியில் கண் போன்ற படம் டீசரில் இடம்பெற்றிருப்பதால், கேமரா மற்றும் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சியோமி சாதனங்கள் அறிமுகமாக இன்னும் ஒரு வாரம் காலம் இருக்கும் நிலையில், சாதனங்கள் குறித்த மேலும் சில விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile