வாட்ஸ்அப்பின் ஒருமுறை பார்க்கப்பட்ட அம்சத்தை இயக்கிய பிறகு, நீங்கள் செய்தியைப் பார்த்தவுடன், செய்தி மறைந்துவிடும். வாட்ஸ்அப்பின் viewed once அம்சத்தை புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற செய்திகளுடன் பயன்படுத்தலாம். வாட்ஸ்அப் viewed once அம்சம் தற்போது ஐபோன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சத்துடன் வாட்ஸ்அப்பின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இதை நீங்கள் ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்
வாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் (view once) வரும் நாட்களில் அனைவருக்கும் வெளியிடப்பட இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் ஜூன் மாத வாக்கில் செயலியின் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டது. இந்த அம்சம் பயன்படுத்தும் போது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தானாக மறைந்துவிடும்
வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் அம்சம் கிட்டத்தட்ட காணாமல் போகும் (Disappearing) மெசேஜ்களைப் போன்றது தான். இதன் வழியாக அனுப்பட்ட மீடியாவை ரிசீவர் ஒருமுறை பார்த்தவுடன் அது சாட்டில் இருந்து மறைந்துவிடும்.
இதன் பொருள் என்னவென்றால், வியூ ஒன்ஸ் என்ற விருப்பத்தை இயக்கியவுடன் அனுப்பப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோவை மற்றவர்களால் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். இது இன்ஸ்டாகிராமின் வேனிஷ் மோட்-ஐப் போலவே வேலை செய்கிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க வியூ ஒன்ஸ் அம்சத்தை பயன்படுத்தினாலும் கூட ஒரு புகைப்படத்தை பெறுநரால் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியும் மற்றும் வீடியோவை ஸ்க்ரீன் ரெக்கார்டிங் செய்ய முடியும்.
வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கி நிறுவவும்
பயன்படுத்தும் வழிமுறைகள்: