Acerpure Nitro QLED TV
உலகளாவிய Acer க்ரூப்பின் (Acer Group) ஒரு பிரிவான ஏசர்பியூர் இந்தியா (Acerpure India), ‘நைட்ரோ QLED டிவி’ (Nitro QLED TV) வரிசையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, இந்த புதிய வரிசையானது பெரிய அளவிலான ஸ்க்ரீன்கள், இவை 75-இன்ச், 85-இன்ச் மற்றும் மிகப் பெரிய 100-இன்ச் ஸ்க்ரீன் சைஸ்களில் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன.
இந்நிறுவனம் Acerpure Nitro தொடரை 75 இன்ச் , 85 இன்ச் மற்றும் 100 இன்ச் ஆகிய மூன்று ஸ்க்ரீன் சைஸ் களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ₹59,999 ஆகும்; அதேவேளையில், ஹை எண்டு மாடலின் விலை ₹1.9 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் , இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் பிற ரீடைளர் விற்பனைக் கடைகள் மூலம் வாங்கலாம்.
ஏசர்பியூர் நைட்ரோ தொடரானது, 120Hz HSR ரெஃப்ரெஷ் ரேட்டை QLED டிஸ்ப்ளே தொழில்நுட்பத்துடன் இணைத்து, வேகமான கேமிங், விளையாட்டு மற்றும் அதிரடி நிறைந்த உள்ளடக்கங்களுக்கு மென்மையான இயக்கத்தையும் தடையற்ற காட்சிகளையும் வழங்குகிறது. பெரிய திரைகளுக்கு இணையாக, 75-இன்ச் மற்றும் 85-இன்ச் இன்ச் அமைப்புகளில் 40W பாக்ஸ் ஸ்பீக்கரும், 100-இன்ச் அமைப்பில் 65W பாக்ஸ் ஸ்பீக்கரும் பொருத்தப்பட்டுள்ளன. இவை சக்திவாய்ந்த மற்றும் ஆழ்ந்த சவுண்ட் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க AC, TV மற்றும் ப்ரிட்ஜ் போன்ற அப்ளயன்ஸ் விலை நாளை அக்டோபர் 1 முதல் அதிகரிக்கும்
மேலும் இந்த டிவிகள் Dolby Vision மற்றும் Dolby Atmos சப்போர்ட் செய்கிறது , ஆழ்ந்த காட்சிகளையும் சரவுண்ட் ஒலியையும் வழங்குகின்றன. இந்தத் தொடரில் கூகுள் டிவி 5.0 ரெஃப்+ அம்சமும் உள்ளது, இது இணைக்கப்பட்ட ஸ்மார்ட் பொழுதுபோக்கு அனுபவத்திற்கான அக்சஸ் வழங்குகிறது. என்டர்டைன்மேன்டிற்கு மேலும் ஒரு அம்சமாக, இந்த டிவிகளில் உள்ளமைக்கப்பட்ட கரோக்கி வசதி உள்ளது. இது பயனர்கள் தங்கள் வசிப்பிடங்களை ஒன்றுகூடல்கள், கொண்டாட்டங்கள் மற்றும் அன்றாட வேடிக்கைகளுக்கான ஒரு என்டர்டைமென்ட் மண்டலமாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது.
ஏசர்ப்யூர் இந்தியாவின் (Acerpure India) இயக்குனர் வாசுதேவா ஜி கூறுகையில், “வீட்டில் நுகர்வோர் பொழுதுபோக்கை அனுபவிக்கும் விதம் வேகமாக மாறி வருகிறது; வெறும் பெரிய அளவிலான அனுபவங்கள் மட்டுமல்லாமல், உண்மையாகவே ஆழ்ந்த ஈடுபாட்டையும் சுவாரஸ்யத்தையும் தரக்கூடிய அனுபவங்களுக்கான விருப்பம் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம்,” என்று தெரிவித்தார்.
Acerpure Nitro ஸ்மார்ட் டிவி வரிசையானது முன்பே நிறுவப்பட்ட OTT செயலிகளுடன் வருகிறது; இதன் மூலம் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த தளங்களில் திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். இந்நிறுவனம் இந்தத் தொலைக்காட்சியுடன் புளூடூத் வசதி கொண்ட ரிமோட் ஒன்றையும் வழங்கியுள்ளது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குவதால், பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஆயிரக்கணக்கான செயலிகளை இதில் நிறுவ முடியும். இதில் HDMI, USB, புளூடூத், வை-ஃபை (Wi-Fi) மற்றும் LAN போன்ற இணைப்பு வசதிகள் உள்ளன. மேலும், இது கூகுள் குரோம்காஸ்ட் (Google Chromecast) வசதியையும் சப்போர்ட் செய்கிறது .