WhatsApp View Once அமசத்தை பயன்படுத்துவது எப்படி ? அட இதை இப்படியும் பயன்படுத்தலாமா..!
வாட்ஸ்அப்பின் ஐபோன் பயனர்கள் viewed once அம்சத்தின் புதுப்பிப்பைப் பெறத் தொடங்கியுள்ளனர்
message பார்த்தவுடன், செய்தி மறைந்துவிடு
புகைப்படத்தை பெறுநரால் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியும் மற்றும் வீடியோவை ஸ்க்ரீன் ரெக்கார்டிங் செய்ய முடியும்.
வாட்ஸ்அப்பின் ஒருமுறை பார்க்கப்பட்ட அம்சத்தை இயக்கிய பிறகு, நீங்கள் செய்தியைப் பார்த்தவுடன், செய்தி மறைந்துவிடும். வாட்ஸ்அப்பின் viewed once அம்சத்தை புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற செய்திகளுடன் பயன்படுத்தலாம். வாட்ஸ்அப் viewed once அம்சம் தற்போது ஐபோன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சத்துடன் வாட்ஸ்அப்பின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இதை நீங்கள் ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்
Surveyவாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் (view once) வரும் நாட்களில் அனைவருக்கும் வெளியிடப்பட இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் ஜூன் மாத வாக்கில் செயலியின் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டது. இந்த அம்சம் பயன்படுத்தும் போது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தானாக மறைந்துவிடும்
வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் அம்சம் கிட்டத்தட்ட காணாமல் போகும் (Disappearing) மெசேஜ்களைப் போன்றது தான். இதன் வழியாக அனுப்பட்ட மீடியாவை ரிசீவர் ஒருமுறை பார்த்தவுடன் அது சாட்டில் இருந்து மறைந்துவிடும்.
இதன் பொருள் என்னவென்றால், வியூ ஒன்ஸ் என்ற விருப்பத்தை இயக்கியவுடன் அனுப்பப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோவை மற்றவர்களால் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். இது இன்ஸ்டாகிராமின் வேனிஷ் மோட்-ஐப் போலவே வேலை செய்கிறது.
- வியூ ஒன்ஸ் மீடியா ஃபைல்களை அனுப்பவோ, அதை சேமிக்கவோ, ஸ்டார்ட்டு செய்யவோ முடியாது.
- – 14 நாட்களுக்குள் வியூ ஒன்ஸ் ஃபைலை திறக்காவிட்டால் அது தானாகவே சாட்டில் இருந்து மறைந்துவிடும்
இதை இப்படி செய்து கொள்ளலாம்
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க வியூ ஒன்ஸ் அம்சத்தை பயன்படுத்தினாலும் கூட ஒரு புகைப்படத்தை பெறுநரால் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியும் மற்றும் வீடியோவை ஸ்க்ரீன் ரெக்கார்டிங் செய்ய முடியும்.
Whatsapp View Once அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?
வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கி நிறுவவும்
பயன்படுத்தும் வழிமுறைகள்:
- 1. WhatsApp-ஐ திறந்து ஏதேனும் ஒரு Chat-ற்க்குள் செல்லவும்
- 2. சாட்பாக்ஸில் உள்ள கேமரா ஐகானை கிளிக் செய்து, ஏதேனும் ஒரு போட்டோ அல்லது வீடியோவை அனுப்புவதற்காக தேர்வு செய்யவும்.
- 3. பின்னர் Preview window-வில் காணப்படும் (டெக்ஸ்ட் பாக்ஸின் வலது மூலையில்) View once ஐகானைகிளிக் செய்யவும்
- 4. ஒருமுறை இந்த அம்சம் எனேபிள் செய்யப்பட்டதும், நீங்கள் குறிப்பிட்ட மீடியாவை அனுப்பவும், அவ்வளவுதான்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
