WhatsApp Polls அறிமுகம், இதை எப்படி பயன்படுத்துவது?

HIGHLIGHTS

வாட்ஸ்அப் நீண்ட காலமாக போல் (Poll ) அம்சத்தை சோதித்து வந்த நிலையில் தற்போது இந்த அம்சத்தை வெளியிட்டுள்ளது

WhatsApp Polls இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்ஸ் இரண்டிலும் பயன்படுத்தலாம்

WhatsApp Polls க்ரூப் செட் மற்றும் தனிப்பட்ட சேட்கள் இரண்டிற்கும் பயன்படுத்தலாம்

WhatsApp Polls  அறிமுகம், இதை எப்படி பயன்படுத்துவது?

வாட்ஸ்அப் நீண்ட காலமாக போல் (Poll ) அம்சத்தை சோதித்து வந்த நிலையில் தற்போது இந்த அம்சத்தை வெளியிட்டுள்ளது. WhatsApp Polls  இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்ஸ் இரண்டிலும் பயன்படுத்தலாம். WhatsApp Polls  க்ரூப் செட் மற்றும் தனிப்பட்ட சேட்கள் இரண்டிற்கும் பயன்படுத்தலாம். WhatsApp Polls  பயனர்கள் 12 விருப்பங்களைப் பெறுவார்கள். இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு முன், நீங்கள் பயன்பாட்டைப் புதுப்பிக்க வேண்டியது அவசியம். இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது கூறுவோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

WhatsApp Polls பயன்படுத்துவது எப்படி?

  • உங்கள் வாட்ஸ்அப் செயலியைத் திறந்து க்ரூப் சேட் அல்லது ஏதேனும் சேட்டை திறக்கவும்.
  • இப்போது ஆண்ட்ராய்டு போனில் உள்ள அட்டாச்மென்ட் பட்டனையும், ஐஓஎஸ்ஸில் (+) பட்டனையும் கிளிக் செய்யவும்.
  • இப்போது லொகேஷன் , கான்டக்ட் போன்றவை தெரியும் இடத்தில் poll என்ற விருப்பத்தைக் காண்பீர்கள்.
  • இப்பொழுது ‘Ask question’ யில் க்ளிக் செய்ய வேண்டும் இப்போது வாக்களிக்கும் விருப்பத்தை உள்ளிடவும். இதற்கு நீங்கள் 12 விருப்பங்களைப் பெறுவீர்கள்.
  •  ஒரு முறை போல் சரி செய்தவுடன், போலை அனுப்ப முடியும்.
  • ஒரு நபர் ஒரு போலில் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

க்ரூப் சேட்டிலும் தெரியும் ப்ரொபைல் போட்டோ.

வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் பிறகு மெம்பரின் ப்ரொபைல் போட்டோவை வாட்ஸ்அப் க்ரூப் சேட்டிலும் காணலாம். வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சத்தின் சோதனை தற்போது பீட்டா பதிப்பில் செய்யப்படுகிறது. வாட்ஸ்அப்பின் அம்சங்களை கண்காணிக்கும் Wabetainfo, புதிய அம்சம் குறித்த தகவலை அளித்துள்ளது. வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பதிப்பில் புதிய அம்சம் இருப்பதாக அறிக்கை கூறுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile