Noise மற்றும் Airtel சேர்ந்து ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்துள்ளது ஒரே டச்சில் கடிகாரத்திளிருந்து பணம் அனுப்பலாம்

Noise மற்றும் Airtel சேர்ந்து ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்துள்ளது ஒரே டச்சில் கடிகாரத்திளிருந்து பணம் அனுப்பலாம்
HIGHLIGHTS

Noise யின் Airtel Payments Bank மற்றும் Mastercard உடன் கைகோர்த்துள்ளது

ந்த Airtel Payments Bank ஸ்மார்ட்வாட்சில் மிக பெரிய சிறப்பு கான்டேக்ட் லென்ஸ் பேமன்ட் பீச்சர் இருக்கிறது

இது 1.85-இன்ச் சதுர டயலைக் கொண்டுள்ளது மற்றும் Noise யில் பல ஹெல்த் மற்றும் பிட்னஸ் அம்சங்களைக் கொண்டுள்ளது.

Noise யின் Airtel Payments Bank மற்றும் Mastercard உடன் கைகோர்த்துள்ளது இதன் கீழ் ஒரு ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்துள்ளது, இதன் மூலம் பயனர்கள் பேமன்ட் செய்யலாம், இந்த Airtel Payments Bank ஸ்மார்ட்வாட்சில் மிக பெரிய சிறப்பு கான்டேக்ட் லென்ஸ் பேமன்ட் பீச்சர் இருக்கிறது இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள நிறுவனங்களின் நோக்கம், ஒவ்வொரு கைகளில் இருந்து ‘தட்டி மற்றும் பணம் செலுத்தும்’ வசதியை கொண்டு வருவதே ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் கஸ்டமர்களுக்கு அவர்களின் அணியக்கூடிய பொருட்களுடன் புதிய திறனை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இது 1.85-இன்ச் சதுர டயலைக் கொண்டுள்ளது மற்றும் Noise யில் பல ஹெல்த் மற்றும் பிட்னஸ் அம்சங்களைக் கொண்டுள்ளது.

Noise Airtel Payments Bank smartwatch யின் விலை மற்றும் விற்பனை

Noise யின் இந்த Airtel Payments Bank ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் இதன் விலை 2,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் இதை வாங்கலாம் இது கருப்பு மற்றும் நீல கலர் விருப்பங்களில் வருகிறது. ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்கில் சேவிங் அக்கவுன்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்வாட்சை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் வாங்கலாம். பேங்க்க்கு புதிதாக வரும் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் யில் டிஜிட்டல் முறையில் பேங்க் அக்கவுண்டை திறப்பதன் மூலம் ஸ்மார்ட்வாட்சை உடனடியாக ஆர்டர் செய்யலாம். Airtel Payments Bank Smartwatchஐப் பயன்படுத்தி ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு ரூ.1 முதல் ரூ.25,000 வரை பணம் செலுத்த முடியும்.

Noise Airtel Payments Bank ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சம்.

இந்த ஸ்மார்ட்வாட்ச் யின் சிறப்பம்சம் பற்றி பேசினால், இதில் 1.85- இன்ச் யின் ஜோக்கர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதில் 4.69 cm TFT LCD டிஸ்ப்ளே 550 nits யின் பீக் ப்ரைட்னாஸ் லெவல் சப்போர்ட் செய்கிறது. MasterCard நெட்வொர்க்கால் சப்போர்ட் செய்யப்படும் NFC சிப், இந்தக் கடிகாரத்தின் மூலம் மக்கள் தொடர்பு இல்லாத கட்டணங்களைச் செய்ய உதவுகிறது. இதன் மூலம், பயனர்கள் சில்லறை கடைகள், பிஓஎஸ் டெர்மினல்கள் மற்றும் பல்வேறு டச் பாயின்ட்களில் பணம் செலுத்தலாம். புளூடூத் அழைப்பு அம்சமும் ஸ்மார்ட்வாட்சில் உள்ளது. கடிகாரம் 10 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இது தவிர, ஸ்மார்ட்வாட்ச் 150 கிளவுட் அடிப்படையிலான வாட்ச் ஃபேஸ் சேகரிப்புடன் வருகிறது.

Noise வழங்கும் இந்த சிறப்பு ஸ்மார்ட்வாட்ச் பயனர்களுக்கு 130 விதமான ஸ்போர்ட்ஸ் மோட்ஸ் வழங்குகிறது. அதன் உருவாக்கம் IP68 என ரேட்டிங்குடன் வருகிறது இது தண்ணீரில் ஓரளவு பயன்படுத்த அனுமதிக்கிறது. இதில், பயனர்கள் தங்கள் மன அழுத்தத்தை கண்காணிக்க முடியும். கூடுதலாக, ஸ்மார்ட்வாட்ச் SpO2 மானிட்டரிங் கொண்டுள்ளது, இது பயனர்கள் தங்கள் இரத்த ஆக்ஸிஜன் செஜுரேசன் ட்ரெக்கிங் செய்ய உதவுகிறது.

இதையும் படிங்க: Realme Narzo 70 Pro 5G இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo