இந்தியாவில் அறிமுகமான Honor Band 4, இன்று அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது

HIGHLIGHTS

ஹுவாய் நிறுவனத்தின் சப் பிரான்டு ஹானர் இந்தியாவில் ஹானர் பேன்ட் 4 என்ற பெயரில் புதிய ஃபிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமான Honor Band 4, இன்று அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது

சீனா ஸ்மார்ட்போன்  நிறுவனம் இப்பொழுது அதிகாரபூர்வமாக  Honor Band 4 அதன் விலையுடன் அறிவித்துள்ளது Honor Band 4  எக்ஸ்க்ளுசிவாக Amazon India வில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்திய  சந்தையில் இது  Mi Band 3 உடன்  போட்யிடும் என தெரிகிறது பயனர்களுக்கு  இந்த  Honor Band 4  மூன்று கலர்  வகைகளில்  விற்பனைக்கு கிடைக்கிறது இந்த சாதனத்தில் வாட்டர் ரெஸிஸ்டண்ட் உடன் ஹார்ட் ரெட்  சென்சார் கொண்டுள்ளது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஹானர் பேன்ட் 3 சாதனத்தின் மேம்பட்ட வெர்ஷனாக இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் ஹானர் பேன்ட் 4 மாடலில் 0.95 இன்ச் AMOLED கலர் 2.5D வளைந்த கிளாஸ் டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டன், தொடர்ச்சியான இதய துடிப்பு சென்சார் மற்றும் ஸ்விம் ஸ்டிரோக் அங்கீகார வசதியுடன் 50 மீட்டர் வரையிலான வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

ஹானர் பேன்ட் 4 சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள சி.பி.சி. (cardiopulmonary coupled dynamics) எனும் தொழில்நுட்பம் பயன்படுத்துவோரின் உறக்கத்தை முழுமையாக டிராக் செய்து உறக்க முறை பற்றிய முழு விவரங்களை வழங்கும். ஆழ்ந்த உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்து அதற்கு ஏற்ப பரிந்துரை வழங்கும்.

இத்துடன் ஹூவாய் ட்ரூசீன் 2.0 இதய துடிப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது பயனரின் இதய துடிப்புக்களை 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து கண்காணிக்கும்.

 Honor Band 4, சிறப்பம்சங்கள்:

– 0.95 இன்ச் AMOLED தொடு திரை டிஸ்ப்ளே
– ப்ளூடூத் 4.2 LE, ஆண்ட்ராய்டு 4.4 அல்லது ஐ.ஓ.எஸ். 9.0 இயங்குதளத்தை சப்போர்ட் செய்யும்
– பீடோமீட்டர், ஸ்லீப் டிராக்கர், எக்சர்சைஸ் டிராக்கர், செடன்டரி ரிமைன்டர்
– 6-ஆக்சிஸ் சென்சார், இன்ஃப்ராரெட் வியரிங் டிடெக்ஷன் சென்சார்
– தொடர் இதய துடிப்பு சென்சார்
– கால் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷன், இன்கமிங் கால் மியூட் வசதி
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
– என்.எஃப்.சி. வசதி
– 100 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இதன் விலை மற்றும் ஆபர் 
ஹானர் பேன்ட் 4 சாதனம் மெடியோரைட் பிளாக், மிட்நைட் நேவி மற்றும் தஹிலா பின்க் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹானர் பேன்ட் 4 விலை ரூ.2,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று (டிசம்பர் 18) முதல் அமேசான் வெப்சைட்டில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile