ஃபிட்ஷாட் நிறுவனத்தின் 10 நாட்கள் பேட்டரி பேக்கப் தரக்கூடிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.

HIGHLIGHTS

ஃபிட்ஷாட் நிறுவனம் இந்திய சந்தையில் மகளிருக்கான தனது முதல் ஸ்மார்ட்வாட்ச்- ஃபிட்ஷாட் ஃபிளேர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் பின்க், புளூ மற்றும் கிரீன் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை கிறிஸ்துமஸ் சலுகையாக ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

ஃபிட்ஷாட் நிறுவனத்தின் 10 நாட்கள் பேட்டரி பேக்கப் தரக்கூடிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.

ஃபிட்ஷாட் நிறுவனம் இந்திய சந்தையில் மகளிருக்கான தனது முதல் ஸ்மார்ட்வாட்ச்- ஃபிட்ஷாட் ஃபிளேர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அழகாக காட்சியளிப்பதோடு, அன்றாட வாழ்க்கைக்கு தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் சவுகரியத்தை வழங்குகிறது. முன்னதாக ஃபிட்ஷாட் நிறநுவனத்தின் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 

ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் பின்க், புளூ மற்றும் கிரீன் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை கிறிஸ்துமஸ் சலுகையாக ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-க்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது.

ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சம்.

புதிய ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் பாகங்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 450-நிட்ஸ் IPS எல்சிடி ஸ்கிரீன், காஸ்மிக் டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் டேலைட் ஸ்கிரீன், 60-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், UV சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள UV சென்சார்கள், பயனர்களுக்கு UV பற்றி எச்சரிக்கை கொடுக்கும்.

சூரியனின் UV இண்டெக்ஸ் பயனப்டுத்தி பயனர்கள் தொப்பி, கண் கண்ணாடி அல்லது சன்-ஸ்கிரீன் அணிந்து கொள்ள பரிந்துரைக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் மட்டுமின்றி இது பெண்களுக்கு தேவையான வெல்னஸ் டிராக்கர் போன்றும் செயல்படுகிறது. இதில் SpO2, UV லைட், இதய துடிப்பு, உடல் வெப்பநிலை, மென்ஸ்டுரேஷன் டிராக்கர் போன்ற வசதிகள் உள்ளன.

இத்துடன் கால் ரிமைண்டர்கள், ஷெட்யுல் ரிமைண்டர்கள், ஆப் புஷ் ரிமைண்டர்கள், அலாரம் நோட்டிஃபிகேஷன், சமூகவலைதள அலெர்ட் போன்ற வசதிகள் உள்ளன. பயனர்களுக்கு அழைப்பு அல்லது குறுந்தகவல் வரும் பட்சத்தில் இதில் உள்ள குயிக் மெசேஜஸ் அம்சம் மூலம் அதற்கு பதில் அளிக்க முடியும். ஃபிட்ஷாட் ஃபிளேர் மாடலில் உள்ள 300 எம்ஏஹெச் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo